இறங்கி அடிக்க முடிவு பண்ணிருச்சு.. ஹீரோ எலெக்ட்ரிக்கின் இந்த இ-ஸ்கூட்டர்களை வாங்க மக்கள் ஈ போல மொய்க்க போறாங்க

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் இந்திய மின் வாகன சந்தையில் ஆக்டிமா சிஎக்ஸ் 5.0 டூயல் பேட்டரி (Optima CX 5.0 Dual-battery), ஆப்டிமா சிஎக்ஸ் 2.0 ஒற்றை பேட்டரி (Optima CX 2.0 Single Battery) மற்றும் நைக்ஸ் சிஎக்ஸ் 5.0 டூயல் பேட்டரி (NYX CX 5.0 Dual-Battery) ஆகிய மின்சார ஸ்கூட்டர்களை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

பிரபல மின்சார இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) இரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்திய மின்வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இரண்டும் இன்று (மார்ச் 15) ஒரே நாளில் அறிமுகம் செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹீரோ எலெக்ட்ரிக்

ஆப்டிமாக சிஎக்ஸ் (Optima CX) மற்றும் நைக்ஸ் (NYX) ஆகிய மாடல்களையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. இந்தியாவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டு நிறுவனங்களில் ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric)-ம் ஒன்று. இந்த நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை மட்டுமே முக்கிய தயாரிப்பாகக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற எலெக்ட்ரிக் இருசக்கர வாகன மாடல்களாக ஆப்டிமாக சிஎக்ஸ் (Optima CX) மற்றும் நைக்ஸ் (NYX) ஆகியவை உள்ளன. இந்த இரு மாடல்களிலேயே ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது அதிக சிறப்பு வசதிகள் கொண்ட தேர்வுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

ஹீரோ எலெக்ட்ரிக்

ஆக்டிமா சிஎக்ஸ் 5.0 டூயல் பேட்டரி (Optima CX 5.0 Dual-battery), ஆப்டிமா சிஎக்ஸ் 2.0 ஒற்றை பேட்டரி (Optima CX 2.0 Single Battery) மற்றும் நைக்ஸ் சிஎக்ஸ் 5.0 டூயல் பேட்டரி (NYX CX 5.0 Dual-Battery) ஆகிய தேர்வுகளையே நிறுவனம் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

தற்போது இந்திய மின்சார இருசக்கர வாகன சந்தையில் போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் போட்டியைச் சமாளிக்கும் விதமாக அதிக ரேஞ்ஜ் தரும் வாகனங்களாக இவை விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. அதன் பெயருக்கு ஏற்ப ஒற்றை மற்றும் இரட்டை (டூயல்) பேட்டரி பேக் தேர்வுகளில் அவை விற்பனைக்குக் கிடைக்கும்.

ஹீரோ எலெக்ட்ரிக்

வசதிகள் சற்று அதிகம் என்பதால் விலையும் சற்று அதிகமாக காணப்படுகின்றது. ஆப்டிமா சிஎக்ஸ் மாடலுக்கு 85 ஆயிரம் ரூபாய் தொடங்கி 95 ஆயிரம் ரூபாய் வரையிலும், நைக்ஸ் மாடலுக்கு 1.05 லட்சம் ரூபாய் தொடங்கி 1.30 லட்சம் ரூபாய் வரையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் மூன்று தேர்வுகளும் கட்டிங் எட்ஜ் ஜப்பானிய தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட மின் மோட்டாரைக் கொண்டிருக்கின்றன. இதில் கூடுதல் சிறப்பு வசதியாக ஜெர்மன் இசியூ தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இவை இரண்டும் இணைந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ரைடை மேலும் ஸ்மூத்தானதாகவும், அலாதியானதாகவும் மாற்றி இருக்கின்றன.

குறிப்பாக, இந்தியாவிற்கு ஏற்ற வாகனமாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மாற்ற இந்த தொழில்நுட்பங்கள் உறுதுணையாக அமைந்திருக்கின்றன. ஆப்டிமா சிஎக்ஸ் 5.0 மாடலில் 3 kWh C5 லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 113 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 48 கிமீ ஆகும். இந்த வேக திறனுக்காக 1.9kW திறன் கொண்ட மின்மோட்டார் ஆப்டிமா சிஎக்ஸ் 5.0 மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆப்டிமா சிஎக்ஸ் 2.0 தேர்வில் 1.9 kW மோட்டாரும், 2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 89 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 48 கிமீ ஆகும். ஆப்டிமா சிஎக்ஸ் 5.0 தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே மின் மோட்டாரே இதிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

நைக்ஸ் சிஎக்ஸ் 5.0 தேர்வில் 3 kWh C5 லித்தியம் அயன் பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ முதல் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 48 கிமீ ஆகும். மேலும், இந்த வாகனங்களை ஃபுல்லாக சார்ஜ் செய்ய 3 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என ஹீரோ எலெக்ட்ரிக் தெரிவித்து இருக்கின்றது.

மேலும், அதிக பாதுகாப்பு மற்றும் சிறப்பு வசதிகள் கொண்டதாகவும் இந்த வாகனங்களை நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. பேட்டரியில் சிக்கல் ஏதேனும் ஏற்படும் எனில் அதுகுறித்து எச்சரிக்கை செய்யும் அலாரம் வசதி, டிரைவ் மோட் லாக், ரிவர்ஸ் செய்யும்போது தவறாக கீழே விழாமல் இருக்கும் வசதி, சைடு ஸ்டாண்டு சென்சார் போன்ற அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் வாகனங்களில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ஹீரோ ஆப்டிமா மற்றும் நைக்ஸ் இரண்டும் வெவ்வேறு ஸ்டைலில் உருவாக்கப்பட்ட அட்டகாசமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இதன் பக்கம் இளம் தலைமுறையினரைக் கவரும் பொருட்டே ஹீரோ எலெக்ட்ரிக் புதிய வசதிகளை அதில் சேர்த்திருக்கின்றது. இதன் வருகை ஓலா எலெக்ட்ரிக், டிவிஎஸ் ஐக்யூப் மற்றும் பஜாஜ் சேத்தக் ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 15, 2023, 17:39 [IST]
English summary
Hero electric launches new optima cx nyx e scooters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+