கார்களையே விஞ்சும் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இன்னும் ஒரே ஒரு நாள்தான்! எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்க போறாங்க

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. எனவே அனைத்து நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு பல்வேறு புதிய தயாரிப்புகளை விற்பனைக்கு களமிறக்கி வருகின்றன. இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையை பொறுத்தவரையில், ஹீரோ எலெக்ட்ரிக் (Hero Electric) முன்னணி இடத்தில் உள்ளது.

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் வெகு விரைவில் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. அதற்கு முன்னதாக அந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டீசரை (Teaser) ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஹீரோ ஆப்டிமா (Hero Optima) போலவே உள்ளது.

கார்களையே விஞ்சும் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இன்னும் ஒரே ஒரு நாள்தான்! எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்க போறாங்க

ஆப்டிமா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான தயாரிப்புகளில் ஒன்றாகும். ஹீரோ ஆப்டிமா போலவே இருப்பதால், இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரானது, ஹீரோ ஆப்டிமா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அப்டேட் செய்யப்பட்ட புதிய மாடலாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அல்லது முற்றிலும் புதிய ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருப்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

இந்த கேள்விக்கு, வரும் மார்ச் 15ம் தேதி நமக்கு விடை கிடைத்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் வரும் மார்ச் 15ம் தேதிதான், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கார்களையே விஞ்சும் ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! இன்னும் ஒரே ஒரு நாள்தான்! எல்லாரும் கண்ண மூடிட்டு வாங்க போறாங்க

ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி இன்டிகேட்டர்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர அலாய் வீல்கள், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் வலுவான க்ராப் ரெயில் (பின்னால் அமர்பவர் பிடித்து கொள்வதற்கானது) ஆகிய அம்சங்களும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில், கனெக்டட் தொழில்நுட்பம் (Connected Technology) வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களில் தற்போது கனெக்டட் தொழில்நுட்பம் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

அதே பாணியில் ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் கனெக்டட் தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என வெளியாகியுள்ள தகவல், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது. கனெக்டட் தொழில்நுட்பம் இடம்பெறலாம் என்பதால், இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 'ஸ்மார்ட்' ஆன தயாரிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனவே போட்டி நிறுவனங்களுக்கு இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் மத்தியில் பெட்ரோல் (Petrol) ஸ்கூட்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செல்வாக்கை இழந்து வரும் நிலையில், ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனத்தின் இந்த புதிய தயாரிப்பிற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 13, 2023, 13:32 [IST]
English summary
Hero electric scooter teaser all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+