ஆக்டிவா, ஸ்பிளெண்டர் போல விற்பனையாக போகுது... ஹார்லி டேவிட்சனின் மலிவு விலை பைக் விற்பனைக்கு தயார்...
ஹார்லி டேவிட்சன் (Harley-Davidson) - ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட முதல் ஹார்லி டேவிட்சன் பைக் தற்போது விற்பனைக்கு தயாராகி உள்ளது. இந்த பைக்கையே நிறுவனங்கள் தற்போது வெளியீடு செய்திருக்கின்றன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த பைக் மிக மிக குறைவான விலையில் விற்பனைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையிலேயே டூ-வீலர் தற்போது வெளியீடு செய்யப்பட்டு உள்ளது. எக்ஸ் 440 (X440) எனும் பெயரே ஹீரோ-ஹார்லி டேவிட்சன் கூட்டணியில் உருவாக்கப்பட்டிருக்கும் பைக்கிற்கு பெயர் வைக்கப்பட்டு இருக்கின்றது. அப்பைக் சந்தையில் களம் காண இருக்கின்றது. இந்த பைக்கிற்கு ஹார்லி டேவிட்சனின் பிரபல இருசக்கர வாகன மாடலான பழைய எக்ஸ்ஆர் ரோட்ஸ்டர் தோற்றம் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

விரைவில் விற்பனைக்கு வர இருப்பதை முன்னிட்டே தற்போது இந்த பைக்கை வெளியீடு செய்யப்பட்டு உள்ளது என்பது கவனிக்கத்தகுந்தது. இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த பைக் வரும் ஜூலை மாத இறுதிக்குள் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு வந்துவிடும் என தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவலும், துள்ளியமான நாள் பற்றிய விபரமும் வெளியாகவில்லை.
இந்த பைக்கில் ஆயில் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 440 சிசி மோட்டார் ஆகும். இந்த மோட்டார் 25-30 பிஎச்பி பவரையும், 30 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக்கை வழக்கமான க்ரூஸர் ரக பைக்கைப் போல் ஹார்லி-ஹீரோ உருவாக்கவில்லை.

இதற்கு மிக சிறந்த உதாரணமாக பைக்கில் ஃபூட் பெக்குகள் மையப் பகுதியில் இடம் பெற்றிருக்கின்றன. இதேபோல், தொடர்ந்து தட்டையான ஹேண்டில்பார் இதில் கொடுக்கப்பட்டு உள்ளது. க்ரூஸர் ரக பைக்குகளில் முன்னோக்கிய ஃபூட் பெக்குகளும், ஸ்வெப்ட் பேக் ஹேண்டில்பாரும் வழங்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதற்கு அடுத்தபடியாக தற்போது வெளியீடு செய்யப்பட்டிருக்கும் எக்ஸ்440 பைக்கில் சியாட் ஜூம் க்ரஸ் ரப்பர் (CEAT Zoom Cruz rubber) டயரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. முன்பு இந்த பைக் காட்சிப்படுத்தப்பட்டபோது எம்ஆர்எஃப் டயருடனேயே தரிசனத்தை வழங்கியது. எனவே விற்பனைக்கு வரும்போது அது சியாட் டயருடனேயே விற்பனைக்கு வரும் என தெரிகின்றது.

இந்த பைக்கில் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக முன் மற்றும் பின் பக்க வீலில் டிஸ்க்குகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இத்துடன், டூயல் சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்படும் என கூறப்படுகின்றது. சஸ்பென்ஷனைப் பொருத்த வரை முன் பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன், பலதரப்பட்ட முக்கிய தகவல்களை ரைடர்களுக்கு வழங்கும் விதமாக டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரும் இந்த பைக்கில் கொடுக்கப்பட உள்ளது. இது போன்று இன்னும் பலதரப்பட்ட பிரீமியம் அம்சங்களை ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப், எக்ஸ் 440 பைக்கில் வழங்க இருக்கின்றது.
மிக முக்கியமாக முற்றிலும் கவர்ச்சியான மோட்டார்சைக்கிளாக எக்ஸ்440 பைக் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. சதுர வடிவிலான ஃப்யூவல் டேங்க், அலாய் வீல் மற்றும் வட்ட வடிவ ஹெட்லைட்ட உள்ளிட்டவை பைக்கின் கவர்ச்சியான தோற்றத்திற்காக பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஹெட்லைட்டின் மையப் பகுதியில் விபூதி வைத்ததைப் போன்ற எல்இடி லைட் பயன்டுத்தப்பட்டு உள்ளது.
இந்த லைட்டில் ஹார்லி டேவிட்சன் எனும் பெயர் இடம் பெற்றிருப்பது கூடுதல் கவர்ச்சி சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இருவர் சொகுசாக அமர்ந்து செல்ல ஏதுவாக ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை அந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய அட்டகாசமான இருசக்கர வாகனத்தையே ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனங்கள் வெளியீடு செய்திருக்கின்றன.
இந்த பைக்கை 2.5 லட்சம் - ரூ. 3 லட்சம் என்கிற மிகக் குறைவான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த அளவு குறைவான விலையில் இப்பைக் விற்பனைக்கு வரும் எனில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் விற்பனையில் பெரும் வீழ்ச்சி அடைவதற்கான சூழல் ஏற்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மிக மிக மலிவான விலையில் இந்த பைக் விற்பனைக்கு வர இருப்பதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகையால், இந்த பைக்கிற்கு எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலை போட்டி நிறுவனங்களை பெரும் பீதியில் ஆழ்த்தியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications









