இவ்வளவு விலை குறைவான பைக்கில் யுஎஸ்பி சார்ஜர் வசதியா!! ஹீரோவின் எச்.எஃப் டீலக்ஸை வாங்க கூட்டம் குவிய போகுது!
மேம்படுத்தப்பட்ட 2023 ஹூரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக் புதிய வசதிகள் & பெயிண்ட்டில் சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய பைக்குகளுள் ஒன்றான எச்.எஃப் டீலக்ஸின் புதிய மாடல் எந்த அளவிற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியா எப்போதும் குறைந்த விலை வாகனங்களுக்கு ஏற்ற சந்தை ஆகும். இதனாலேயே ஸ்பிளெண்டர் பைக்குகளை அதிக எண்ணிக்கையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் விற்க முடிகிறது. ஸ்பிளெண்டருக்கு அடுத்து சந்தையில் அதிகளவில் விற்பனையாகும் பைக்காக எச்.எஃப் டீலக்ஸ் விளங்குகிறது. இந்த பைக்கையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே தயாரிக்கிறது.

இத்தகைய, பல்லாயிரக்கணக்கான மக்கள் தேர்வு செய்யும் பைக்கே தற்போது அப்டேட் செய்யப்பட்டுள்ளது. புதிய ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்கும் வழக்கம்போல் கிக்-ஸ்டார்ட் & செல்ஃப்-ஸ்டார்ட் என இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. இதில் கிக்-ஸ்டார்ட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.60,760 ஆகவும், செல்ஃப்-ஸ்டார்ட் வேரியண்ட்டின் விலை ரூ.66,408 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எச்.எஃப் டீலக்ஸ் பைக்கில் புதிய கேன்வாஸ் பிளாக் எடிசனை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய ஸ்பெஷல் எடிசனில் பைக்கின் ஹெட்லேம்ப் கௌல், என்ஜின், கால் பாதுகாப்பான், பெட்ரோல் டேங்க், எக்ஸாஸ்ட் குழாய், அலாய் சக்கரங்கள் மற்றும் கிராப் ரெயில்கள் உள்ளிட்டவை அடர் கருப்பு நிறத்தில் கிடைக்கும்.

இந்த கருப்பு நிற பாகங்களில் இருந்து தனித்து தெரியும் வகையில் ஹேண்டில்பார், முன் & பின்பக்க சஸ்பென்ஷன்கள் பளபளப்பான க்ரோம் ஃப்னிஷிங்கில் கிடைக்கும். கேன்வாஸ் பிளாக் எடிசன் பைக்கில் சைடு பேனல்களில் முப்பரிணாம 'HF Deluxe' லோகோ பொருத்தப்பட்டுள்ளது. இவற்றுடன் புதிய கிராஃபிக்ஸ் தீம்-ஐ இந்த விலை குறைவான ஹீரோ பைக் பெற்றுள்ளது.
இந்த புதிய கிராஃபிக்ஸ் தீம்-ஐ வாடிக்கையாளர்கள் நெக்ஸஸ் நீலம், கேண்டி பிளாஸிங் சிவப்பு, கருப்பு உடன் ஹெவி கிரே மற்றும் கருப்பு உடன் ஸ்போர்ட்ஸ் சிவப்பு உள்ளிட்ட நிறங்களில் பெறலாம். தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்கில் யுஎஸ்பி சார்ஜர் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் ட்யூப்லெஸ் டயர்களும் எச்.எஃப் டீலக்ஸில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ஆனால் இத்தகைய டயர்களை எச்.எஃப் டீலக்ஸ் பைக்கின் செல்ஃப் மற்றும் செல்ஃப் ஐ3எஸ் வேரியண்ட்களில் மட்டுமே பெற முடியும். பைக்கின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், சைடு ஸ்டாண்ட் இண்டிகேட்டர் மற்றும் உள்ளிட்டவற்றை சொல்லலாம். ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் பைக்கிற்கு 5 வருட உத்தரவாதமும், 5 இலவச சேவைகளும் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஏழை, எளிய மக்களின் பிரதான தேர்வாக விளங்கும் ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் போன்ற பைக்குகள் அவ்வப்போது அப்டேட் செய்யப்பட வேண்டியது அவசியமான ஒன்றே. ஏனெனில் அப்போதுதான் பைக்கின் ஆயுட்காலமும் நீடிக்கும். ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் போன்ற மலிவு விலை பைக்குகளில் யுஎஸ்பி சார்ஜர் & ட்யூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டு இருப்பது உண்மையில் அசத்தலான விஷயமாகும்.


Click it and Unblock the Notifications









