என்னது கரிஸ்மாவை ஹீரோ மீண்டும் களமிறக்க போகுதா!! புதிய தகவலால் இப்பவே அழு மூஞ்சியாக மாறிய ஹோண்டா, யமஹா!

இந்திய இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்டா மற்றும் யமஹா ஆகிய நிறுவனங்களை மிரட்டி பார்க்கும் விதமாக அதன் புகழ்பெற்ற கரிஸ்மாவை மீண்டும் சந்தையில் களமிறக்க தயாராகி வருகின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவிவில் பார்க்கலாம், வாங்க.

வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் கடந்த காலத்தை நினைவு கூற ஆரம்பித்திருக்கின்றன. குறிப்பாக, சில நிறுவனங்கள் தங்களின் கடந்த வசந்த காலத்தை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரும் விதமான முயற்சியிலும் களமிறங்கியிருக்கின்றன. அதாவது, முந்தைய காலகட்டத்தில் பிரபலமாக இருந்து வந்த இருசக்கர வாகன மாடல்களை இந்தியாவில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றன.

ஹீரோ கரிஸ்மா

அந்தவகையில், பஜாஜ் அதன் சேத்தக் ஸ்கூட்டரையும், டாடா மோட்டார்ஸ் அதன் சஃபாரி கார் மாடலையும் இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இந்த நிறுவனங்களை போலவே இன்னும் சில நிறுவனங்களும் கடந்த காலங்களில் சூப்பர் ஸ்டாராக வலம் வந்த வாகன மாடல்களை மீண்டும் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றன.

அந்த வரிசையில் ஹீரோ மோட்டோகார்ப் விரைவில் இணைய இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் கடந்த காலத்தில் விற்பனைக்கு வழங்கி வந்த மிக சிறப்பான பைக் மாடல்களில் கரிஸ்மா-வும் ஒன்று. இந்த பைக் மாடலையே நிறுவனம் இந்திய இருசக்கர வாகன சந்தையில் மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு உள்ளது.

ஹீரோ கரிஸ்மா

பஜாஜ் பல்சர் பைக்கிற்கு போட்டியாக இந்த மோட்டார்சைக்கிளை அது விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது, ஹீரோ. ஏற்கனவே பஜாஜ் பல்சருக்கு சந்தையில் பலமடங்கு போட்டி அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த மாதிரியான சூழலில் கூடுதல் தலைவலியை ஏற்படுத்தும் விதமாக ஹீரோ மோட்டோகார்ப் அதன் கரிஸ்மாவை விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

210 சிசி பிரிவில் இந்த மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு வர இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், நடப்பாண்டு இறுதி அல்லது 2024 ஆம் ஆண்டிற்குள் இதன் அதிகாரப்பூர்வ வெளியீடு அரங்கேறும் என்றும் கூறப்படுகின்றது. நல்ல வரவேற்பு இந்த மோட்டார்சைக்கிளுக்கு கிடைக்கும் என்கிற நம்பிக்கையிலேயே ஹீரோ மோட்டோகார்ப் மீண்டும் கரிஸ்மாவை களமிறக்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது.

ஹீரோ கரிஸ்மா

கடந்த காலத்தில் ஹீரோ நிறுவனத்திற்கு நல்ல லாபத்தை ஈட்டி தந்த டூ-வீலர் மாடல்களில் கரிஸ்மாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தகுந்தது. இருப்பினும், புதிய மாடல்களுக்கு வழிவிடும் விதமாக இந்த பைக்கை சந்தையில் இருந்து கடந்த காலத்தில் வெளியேற்றியது, ஹீரோ. எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலின் வருகையே இதன் வெளியேற்றத்திற்கு காரணம் என கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே புதிய அவதாரத்தில் கரிஸ்மாவை மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஹீரோ மோட்டோகார்ப் களமிறங்கி இருக்கின்றது. கரிஸ்மாவின் புதிய தோற்றத்திற்காக புதிய பிளாட்பாரம் பயன்படுத்தப்பட இருக்கின்றது. இந்த பிளாட்பாரம் பழைய கரிஸ்மாவைபோலவே புதிய கரிஸ்மாவும் மிக கவர்ச்சியான மோட்டார்சைக்கிளாக தயாரிக்க உதவ இருக்கின்றது.

ஹீரோ கரிஸ்மா

புத்தம் புதிய ஃப்ரேம் இந்த பைக்கின் உருவாக்கத்தில் பயன்படுத்தப்பட இருக்கின்றது. ஃப்ரேமை போலவே பல்வேறு புதிய தொழில்நுட்ப வசதிகளும் கரிஸ்மாவில் வழங்கப்பட இருக்கின்றன. ரைடு-பை-ஒயர், யுஎஸ்டி ஃபோர்க்குகள், ஸ்லிப்பர் க்ளட்ச அம்சம், டிஸ்க் பிரேக்குகள், ஆன்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என எக்கசக்க அம்சங்கள் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.

இதுதவிர, எல்இடி லைட், ப்ளூடூத் இணைப்பு அம்சம், திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதியுடன் கூடிய சைடு ஸ்டாண்டு சென்சார் போன்ற அட்டகாசமான அம்சங்களும் புதிய ஹீரோ கரிஸ்மா பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து

ஹீரோ கரிஸ்மா பைக்கிற்கு சில பிரபலங்களும் தீவிர ஃபேனாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹ்ரித்திக் ரோஷன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் இந்த பைக்கை தங்களுடைய ஃபேவரிட் பைக்காக பயன்படுத்தினர். ஆகையால், கரிஸ்மாவின் மறு வருகை சில திரை பிரபலங்களையும் டெம்ப்ட் செய்திருக்கும் என எங்களால் யூகிக்க முடிகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 24, 2023, 11:49 [IST]
English summary
Hero karizma relaunch
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X