யமஹா ஆர்15-க்கு சங்கு ஊத ஹீரோ பிளான் போட்டிருச்சு! ஆகஸ்டு 29 எல்லாருக்கும் மறக்க முடியாத நாளா மாற போகுது!
இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப், இந்திய இருசக்கர வாகன பிரியர்களைக் கவரும் நோக்கில் ஓர் பைக்கை விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றது. நிறுவனம் கடந்த காலங்களில் விற்பனைச் செய்து வந்த மிக சூப்பரான தயாரிப்புகளில் ஒன்றாக கரிஷ்மா பைக் இருக்கின்றது.
இந்த பைக்கையே நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கும் முயற்சியில் தற்போது களமிறங்கி இருக்கின்றது. இந்த பைக்கின் இந்திய அறிமுகம் இந்த ஆண்டே அரங்கேறிவிடும் என கூறப்பட்டுவந்தநிலையில், அதை ஹீரோ மோட்டோகார்ப்பும் உறுதி செய்திருக்கின்றது. தற்போது அதன் அறிமுக தேதி விபரமே வெளியாகி இருக்கின்றது.

வரும் ஆகஸ்டு 29 ஆம் தேதி அன்றே புதிய ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் இருக்கும் முழு அழகூட்டப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் (fully-faired sports bike) மாடல்களான யமஹா ஆர்15 வி4, சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் 250 மற்றும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 ஆகிய மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு அது மிகப் பெரிய போட்டியாளனாக மாறும்.
ஆமாங்க, கடந்த காலத்தைப் போலவே முழு அழகூட்டப்பட்ட ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாகவே இம்முறையும் அந்தப் பைக் வடிவமைப்பு செய்யப்பட்டு இருக்கின்றது. ஆனால், இம்முறை இந்த பிரிவில் சற்று போட்டி அதிகம். அதேபோல், எதிர்பார்ப்புகளும் அதிகம் என்பதால் ஹீரோ வேற லெவலில் புதய கரிஷ்மா பைக்கை தயார் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன, புதிதாக என்னென்ன அம்சங்கள் சேர்க்கப்பட்டு உள்ளன என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை. அதேவேளையில் விரைவில், அதாவது, வரும் ஆகஸ்டு 29ஆம் தேதி அன்று புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக் பற்றிய அனைத்து தகவல்களும் வெளியிடப்பட உள்ளன.
ஹீரோ கரிஷ்மா ஆகஸ்டு 29ம் தேதியில் வெளியிடப்பட இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சி மிகப் பெரிய மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் கரிஷ்மா காதலர்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை இந்த தகவல் துண்ட செய்திருக்கின்றது.

எனவே இவர்களுக்கு வரும் ஆகஸ்டு 29 அவர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிக்கும் நாளாக அமைய இருக்கின்றது. ஆகஸ்டு 29 ஆம் தேதி அறிமுகமாக இருப்பதை ஹீரோ நிறுவனம் அதன் டுவிட்டர் பதிவின் வாயிலாக உறுதி செய்திருக்கின்றது. ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 குருகிராமில் நடைபெற உள்ள நிகழ்ச்சியிலேயே அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.
இதை உறுதி செய்யும் வகையிலேயே ஹீரோவின் டுவிட்டர் பதிவும் அமைந்திருக்கின்றது. புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கில் பன்முக சிறப்பு வசதிகள் எதிர்பார்க்கப்படுகின்றன. அந்தவகையில், எல்இடி ஹெட்லேம்ப், ஸ்பிளிட் டைப் இருக்கை, ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இதுதவிர, டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் ஏபிஎஸ் ஆகிய பாதுகாப்பான பிரேக்கிங் சிஸ்டமும் இந்த பைக்கில் எதிர்பார்க்கப்படுகின்றன. மேலும், ஹீரோ நிறுவனம் இந்த பைக்கில் முதல் முறையாக லிக்யூடு கூல்டு, 210 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஃப்யூவல் இன்ஜெக்டட் மோட்டாரை பயன்படுத்த இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், டிரெல்லிஸ் ஃப்ரேமையும் இந்த பைக்கில் நிறுவனம் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஒரு காலத்தில் விற்பனையில் கணிசமான அளவு நல்ல வரவேற்பைப் பெற்று வந்த ஹீரோ தயாரிப்புகளில் கரிஷ்மாவும் ஒன்று. குறிப்பிட்ட காரணங்களுக்காக அது சந்தையை விட்டு வெளியேற்றப்பட்டது. இந்த நிலையிலேயே இந்தியாவை மீண்டும் களம் காண அது வருகை தர இருக்கின்றது. இதன் வருகையால் யமஹா, பஜாஜ் நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.


Click it and Unblock the Notifications









