ஹீரோ ஷோரூம் எங்க இருக்குதுன்னு பார்த்து வச்சுக்கோங்க! நாளைக்கு வரப்போற பைக்கை வாங்க போக வேண்டியது வரும்!
ஹீரோ நிறுவனம் இந்த ஆண்டின் மிக முக்கிய பெரிய தயாரிப்பாக தனது கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கை நாளை அறிமுகப்படுத்தப் போகிறது. மக்கள் மத்தியில் இந்த பைக்கிற்கு பெரும் எதிர்பார்ப்பை ஏற்பட்டுள்ள நிலையில் நாளை இந்த பைக் அறிமுகமாக போகிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கு நாம் காணப் போகிறோம்.
ஹீரோ மோட்டா கார்ப் நிறுவனம் கடந்த சில வாரங்களுக்கு முன்பே தனது சமூக வலைதள பக்கங்களில் தனது கரீஷ்மா 210 பைக் கொடுத்த டீசர்களை வெளியிட்டது. அப்பொழுதே இந்த பைக்கிற்கு மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகமாகி விட்டது. ஹீரோ நிறுவனம் தனது கரீஷ்மா ரக பைக்குகளை நீண்ட ஆண்டுகளாக தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வரும் நிலையில் மக்கள் மத்தியில் இந்த கரிஷ்மா மீது மோகம் தற்போது அதிகமாகியுள்ளது.

புதிதாக அப்டேட் செய்யப்பட்ட கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கை பொறுத்தவரை மார்க்கெட்டில் ஏற்கனவே விற்பனையாகி வரும் சூசூகி ஜிக்ஸர் எஸ்எஃப் 250, யமஹா ஆர் 15, பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 ஆகிய பைக்களுக்கு போட்டியாக களமிறங்குகிறது. தனது பிரீமியம் ரக பைக் செக்மென்டை மார்க்கெட் பங்கில் அதிகப்படுத்த இந்த பைக்கை அப்படியே செய்து வெளியிட்டுள்ளது.
இந்த ஹீரோ கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் 21௦ பைக்கின் விலையை பொருத்தவரை மார்க்கெட்டில் 1.90 லட்சம் முதல் 2.20 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை விட முக்கியமானது இந்த பைக்கின் லுக் தான். இந்த பைக்கின் லுக்கை பொறுத்தவரை அக்ரஷிவான ஸ்போட்டி லுக்கில் இந்த பைக் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

இந்த பைக்கில் வழக்கமான கரீஷ்மா பைக்கில் உள்ள முக்கியமான பாகங்கள் எல்லாம் அதே டிசைனில் தான் வழங்கப்பட்டுள்ளன. இதுவே கரீஷ்மா ரசிகர்களுக்கு பெருந் திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுபோக டீசரில் வந்தது படி ஒரிஜினல் கரீஷ்மாவில் உள்ள அதே ஃபுட் ஸ்டெப்புகள், ஷார்பான லயன் மற்றும் கிரீஸ்கள் ஆகியன இருக்கிறது.
இந்த பைக்கில் மிக முக்கியமாக எல்இடி ஹெட்லைட் மற்றும் எல்இடி டைட் லைட் செட்டப் ஆகிய புதிதாக வழங்கப்பட்டுள்ளது. எல்இடி லைட் போக தனியாக இந்த பைக்கில் கலர் எல்சிடி ஸ்கிரீன் டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இது ப்ளூடூத்துடன் இணைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் ப்ரைட்டான மஞ்சள் மற்றும் சிவப்பு நிற ஆப்ஷன்களில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கை பொறுத்தவரை 210 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது 25 பிஎச்பி பவரையும் 20 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
ஹீரோ எக்ஸ்எம்ஆர் 210 பைக்கை பொறுத்தவரை முன் பக்கம் டெலஸ்கோபிக் ஃபோக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பின்பக்கம் ஃப்ரீலோடட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் அப்சர்பர் வழங்கப்பட்டுள்ளது. 2 வீல்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. மேலும் டூயல் சேனல் ஏபிஎஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த பைக் நாளை அதிகாரப்பூர்வமாக அறிமுகமாக போகிறது.
இந்த பைக்கின் அறிமுகத்தின் போது தான் இதன் விலை குறித்த விபரங்கள் எல்லாம் சரியாக தெரியவரும் இந்த பைக்கின் விற்பனையும் துவங்க உள்ளது. பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்த பைக்கை பலர் வாங்குவார்கள் என்பதால் இந்த தருணத்தில் ஹீரோ நிறுவனம் தனது பெரிய தயாரிப்பாளர் இந்த கரிஷ்மா எக்ஸ் எம் ஆர் 210 பைக்கை அறிமுகப்படுத்துகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ நிறுவனம் தனது கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 அறிமுகமான நிலையில் ஹீரோ ரசிகர்கள் மத்தியில் இது மிகப்பெரிய குஷியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பைக் மார்க்கெட்டில் நிச்சயம் ஒரு புரட்சியை செய்யும் எதிர்பார்க்கலாம். இந்த பைக்கின் விற்பனை குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









