இந்த சூப்பரான பைக்கின் விலை இவ்ளோதானா! புக்கிங் பண்ண மக்கள் முட்டி மோதறாங்க! இப்ப அதிக ரேட் குடுக்கவும் ரெடி!

புத்தம் புதிய ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் (Hero Karizma XMR) பைக், கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அன்றைய தினமே புதிய ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கிற்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தொடங்கப்பட்டன. ஆனால் கடந்த செப்டம்பர் 30ம் தேதியுடன் இந்த பைக்கிற்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் நிறுத்தப்பட்டு விட்டன.

இந்த குறுகிய காலத்திலேயே 13,688 பேர் ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை முன்பதிவு செய்து விட்டனர். ஆனால் ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை முன்பதிவு செய்ய தவறியவர்கள் வருத்தப்பட வேண்டியதில்லை. ஏனெனில் இந்த பைக்கிற்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளன. அது எப்போது? என்பதை ஹீரோ நிறுவனம் விரைவில் அறிவிக்கவுள்ளது.

Hero Karizma XMR

ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக் 1,72,900 ரூபாய் என்ற விலையில்தான் (Price) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இதன் விலை 7 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு விட்டது. எனவே இனி முன்பதிவு செய்பவர்கள், 1,79,900 ரூபாய் என்ற விலையில்தான் இந்த பைக்கை வாங்க வேண்டியதிருக்கும்.

ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில், புதிய லிக்யூட் கூல்டு 210 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் (Engine) வழங்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 25.5 பிஹெச்பி பவர் மற்றும் 20.4 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

Hero Karizma XMR Rear Design

இந்த பைக்கின் முன் பகுதியில் 300 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் வசதியும் ஸ்டாண்டர்டாக வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர பல்வேறு அதிநவீன வசதிகளும் (Features) புதிய ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் வழங்கப்பட்டுள்ளன.

புத்தம் புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை இந்தியாவில் உள்ள டீலர்ஷிப்களுக்கு அனுப்பி வைக்கும் பணிகளை ஹீரோ நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது. இதை தொடர்ந்து முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி (Delivery) செய்யும் பணிகள் வெகு விரைவில் தொடங்கப்படவுள்ளன. அனேகமாக பண்டிகை காலத்தை முன்னிட்டு நடப்பு அக்டோபர் மாதத்திலேயே டெலிவரி பணிகள் தொடங்கப்படலாம்.

இந்த பைக்கிற்காக காத்து கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு இது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்டத்தை போலவே, இரண்டாவது கட்டத்திலும், புதிய ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கிற்கு முன்பதிவுகள் குவியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு காணப்படுவதுதான் இதற்கு காரணம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கின் வருகை, யமஹா ஆர்15 வி4 (Yamaha R15 V4), சுஸுகி ஜிக்ஸர் எஸ்எஃப் 250 (Suzuki Gixxer SF 250), பஜாஜ் பல்சர் ஆர்எஸ் 200 (Bajaj Pulsar RS 200) மற்றும் கேடிஎம் ஆர்சி 200 (KTM RC 200) ஆகிய பைக்குகளுக்கு விற்பனையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, October 5, 2023, 16:55 [IST]
English summary
Hero karizma xmr 210 receives 13688 bookings price engine features delivery details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+