பஜாஜ் பல்சர் ஆர்.எஸ் பைக்கை எல்லாம் தூக்கி சாப்பிட போகுது!! ஹீரோவின் புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 210

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 210 மோட்டார்சைக்கிளை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹீரோ ஸ்போர்ட்ஸ் பைக்கிற்கு விற்பனையில் யமஹா ஆர்15, சுஸுகி ஜிக்ஸெர் எஸ்.எஃப்250 போன்ற பைக்குகள் போட்டியாக விளங்கினாலும், கரீஸ்மாவுக்கு நேரெதிர் போட்டியாக விளங்குவது பஜாஜ் ஆட்டோவின் பல்சர் ஆர்எஸ்200 ஆகும்.

என்ஜின் & அவுட்புட்: ஆர்15, ஜிக்ஸெர் பைக்குகள் இல்லாமல், ஹீரோ கரீஸ்மாவை பல்சர் ஆர்எஸ்200 பைக்குடன் ஒப்பிட்டு பார்ப்பதற்கு முக்கிய காரணம், இவை இரண்டிலும் ஒரே மாதிரியான என்ஜின் மற்றும் என்ஜினில் இருந்து ஒரே அளவிலான இயக்க ஆற்றல் கிடைப்பதினாலேயே. புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கில் இதுவரையில் இல்லாத புதுமையான 210சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜினை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பொருத்தியுள்ளது.

hero karizma vs pulsar rs200

அதிகப்பட்சமாக 9,250 ஆர்பிஎம்-இல் 25.5 எச்பி மற்றும் 7,250 ஆர்பிஎம்-இல் 20.4 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மறுப்பக்கம், பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் 199சிசி, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. 9,750 ஆர்பிஎம்-இல் 24.5 எச்பி மற்றும் 8,000 ஆர்பிஎம்-இல் 18.7 என்எம் டார்க் திறன் வரையில் பைக்கிற்கு வழங்கக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

பரிணாம அளவுகள் & எடை: புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 210 பைக்கின் எடை 163.5 கிலோ ஆகும். தரையில் இருந்து ரைடர் இருக்கை ஆனது 810மிமீ உயரத்தில் அமைந்துள்ளது. அதுவே, தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி 160மிமீ உயரத்தில் அமைந்துள்ளது. முன் & பின் சக்கரங்களுக்கு இடையே தூரம் 1,351மிமீ ஆகும். பெட்ரோல் டேங்கின் கொள்ளளவு 11 லிட்டர்கள் ஆகும். பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் எடை 166 கிலோவாக உள்ளது.

hero karizma vs pulsar rs200

தரையில் இருந்து ரைடர் இருக்கையின் உயரத்தில் இந்த இரு பைக்குகளுக்கும் இடையே எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் ஆர்எஸ்200 பைக்கின் அடிப்பகுதி கரீஸ்மாவை காட்டிலும் தரையில் இருந்து 3மிமீ தாழ்வாக உள்ளது. அதேபோல், இந்த பல்சர் பைக்கில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரமும் கரீஸ்மாவை காட்டிலும் 6 மிமீ குறுகியதாக உள்ளது. ஆனால் இந்த பைக்கில் கரீஸ்மாவை விட 2 லிட்டர் அதிக பெட்ரோலை நிரப்பலாம்.

சஸ்பென்ஷன் & பிரேக்குகள்: ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் மற்றும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இவை இரண்டிலும் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்படுகின்றன. அதேபோல், இந்த இரு பைக்குகளிலும் பிரேக் பணியை கவனித்துக் கொள்ள முன் சக்கரத்தில் 300மிமீ டிஸ்க்கும், பின் சக்கரத்தில் 230மிமீ டிஸ்க்கும் உள்ளன.

hero karizma vs pulsar rs200

விலை: புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,72,900ஐ ஹீரோ மோட்டோகார்ப் நிர்ணயித்துள்ளது. இது அறிமுக விலையே என்பதால், விரைவில் இந்த விலை அதிகரிக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையானது நீண்ட மாதங்களாகவே ரூ.1.72 லட்சம் என்ற அளவிலேயே உள்ளது. அதாவது இவை இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலையும் தற்சமயம் ஒரு மாதிரியாக உள்ளன.

தொழிற்நுட்ப வசதிகள்: புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஸ்க்ரீன், டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன் உடன் ப்ளூடூத் இணைப்பு வசதி, எல்இடி விளக்குகள் மற்றும் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான அம்சங்கள் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் இல்லை. டிராக்‌ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் மற்றும் குயிக் கியர் ஷிஃப்டர் போன்றவை இந்த இரு பைக்குகளிலும் இல்லை.

hero karizma vs pulsar rs200

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் மற்றும் பஜாஜ் பல்சர் ஆர்எஸ்200 இவை இரண்டிற்கும் இடையேயான போட்டியில் எளிதாக கரீஸ்மா வெற்றிப் பெற்றுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் அந்த அளவிற்கு, ஹீரோ கரீஸ்மாவின் தோற்றம் மிகவும் ஸ்டைலிஷாக உள்ளது. அதுமட்டுமின்றி, புதிய பைக்காக இருப்பினும் கரீஸ்மாவின் பெயர் சந்தையில் நன்கு பரீட்சையமானது. இவை எல்லாவற்றையும் விட, பஜாஜ் பல்சர் பைக்குகளிலேயே மிகவும் குறைவாக விற்பனையாகக்கூடிய பைக்காக பல்சர் ஆர்எஸ்200 விளங்குகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, August 30, 2023, 7:30 [IST]
English summary
Hero karizma xmr 210 vs bajaj pulsar rs200 comparison
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X