இந்த ஹீரோ பைக்கை புக் செய்தவர்கள் செம்ம குஷியா இருப்பாங்க!! ஷோரூம்களில் இனி திருவிழா தான்!

ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் (Hero Karizma XMR) மோட்டார்சைக்கிளின் டெலிவிரிகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து, முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு பைக் டெலிவிரி செய்ய துவங்கப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் புத்தம் புதிய மோட்டார்சைக்கிளாக கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அப்போதே, பைக்கிற்கான முன்பதிவுகள் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து தற்போது இந்த மோட்டார்சைக்கிளின் டெலிவிரிகள் துவங்கப்பட்டு உள்ளன.

hero karizma xmr deliveries starts

புதிய ஹீரோ கரீஸ்மா பைக்கை இதுவரையில் 13,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்துள்ளனர். முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் ஒதுக்கப்பட்ட தேதியில் அடுத்தடுத்து பைக் டெலிவிரி செய்யப்படும். தற்போதைக்கு இந்தியாவில் சில நகரங்களில் மட்டுமே கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் டெலிவிரிகள் துவங்கப்பட்டுள்ளன.

விரைவில் மற்ற நகரங்களிலும் டெலிவிரிகள் துவங்கப்படும். இந்த புதிய ஹீரோ பைக்கை முன்பதிவு செய்துள்ளவர்கள் டெலிவிரி குறித்த கூடுதல் விபரங்களை டீலர்ஷிப் மையத்தை தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளவும். ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கை பொறுத்தவரையில், இந்த பெயர் இந்திய சந்தைக்கும் ஒன்றும் புதியது அல்ல.

hero karizma xmr deliveries starts

ஏற்கனவே ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக் 2000ஆம் ஆண்டுகளின் துவக்கங்களில் விற்பனை செய்யப்பட்டது. அதன் நியூ ஜென்ரேஷன் மாடலாக புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய கரீஸ்மா பைக்கின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,72,900-ஐ ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நிர்ணயித்தது.

ஆனால் பின்னர், இந்த அறிமுக விலை ரூ.7,000 அதிகரிக்கப்பட்டு, தற்சமயம் கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,79,900 ஆக உள்ளது. இந்த பைக்கிற்கான முன்பதிவுகள் தற்சமயம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்ட புதிய விலையில் கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் முன்பதிவுகள் விரைவில் துவங்கப்படும். சந்தையில் ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்திய தரமான தயாரிப்புகளுள் ஒன்றாக கரீஸ்மா மோட்டார்சைக்கிளை சொல்லலாம்.

hero karizma xmr deliveries starts

அதனால்தான், இந்த பெயரை விட்டுவிடும் எண்ணம் ஹீரோவுக்கு எழவில்லை. அத்துடன், ஹீரோ நிறுவனத்தால் புத்தம் புதியதாக தயாரிக்கப்பட்டுள்ள லிக்யுடு-கூல்டு என்ஜின் புதிய ஹீரோ கரீஸ்மாவை மேலும் பலம் கூட்டுவதாக உள்ளது. புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் 210சிசி, சிங்கிள்-சிலிண்டர் DOHC என்ஜின் அதிகப்பட்சமாக 25.15பிஎச்பி மற்றும் 20.4 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்கு ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் இந்த மோட்டார்சைக்கிளில் வழங்கப்படுகிறது. ஹெட்லைட்கள், டிஆர்எல் விளக்குகள் மற்றும் பின்பக்கத்தில் டெயில்லேம்ப் என அனைத்தும் எல்இடி தரத்திலானவை. இந்த ஹீரோ பைக்கை மொத்தம் 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம்.

hero karizma xmr deliveries starts

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில், ஹீரோ கரீஸ்மாவின் மறு அறிமுகத்தை நீண்ட வருடங்களாக எதிர்பார்த்திருந்தோம். அதன்படி, கரீஸ்மா பைக் மீண்டும் மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்தது. அதனை தொடர்ந்து, இனி சாலைகளிலும் சீறிப் பாய்ந்து செல்லவுள்ளது. 20 வருடங்களுக்கு முன்னர் பழைய கரீஸ்மா பைக்கை உங்களில் சிலர் சாலைகளில் கண்டிருக்கலாம். தற்போது வருவது, மாடர்ன் தோற்றத்திலான புதிய வெர்சன்!

More from DriveSpark

Article Published On: Wednesday, October 25, 2023, 13:34 [IST]
English summary
Hero karizma xmr bike deliveries starts in indian showrooms pictures out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X