லெஜண்ட் மீண்டும் விற்பனைக்கு வந்தாச்சு! விலை இவ்ளோதானா? ஸ்கூட்டி, ஆக்டிவாவைபோல இது விற்பனையாகும் போலிருக்கே!
பெரிதும் எதிர்பாக்கப்பட்ட ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 (Hero Karizma XMR 210) பைக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. வெகு நாட்களாக இந்த பைக்கின் அறிமுகத்தை இந்தியர்கள் எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் அது விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.
யாரும் எதிர்பார்த்திராத மலிவு விலையில் இந்த பைக் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. ரூ. 1.72 லட்சம் என்கிற விலையே அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். அறிமுகத்தைத் தொடர்ந்து புக்கிங் பணிகளும் இந்த பைக்கிற்கு இன்றே (ஆகஸ்டு 29) தொடங்குகின்றது.

இன்று 2.10 மணி அளவில் இருந்து இந்த பணிகள் தொடங்கும். கடந்த காலத்தில் விற்பனையில் இருந்த கரிஷ்மாவை பிரதிபலிக்கும் வகையில், அதன் டிசைன் தாத்பரியம் லேசாக புதியதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், பழைய மனம் மாறாமல் அது இருப்பதை நம்மால் காண முடிகின்றது.
இருப்பினும், இது புதிய அவதாரத்தையும் அது கொண்டிருக்கின்றது. இதற்காக லேட்டஸ்ட் டெக்னாலஜி பல இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர்-க்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் கரிஷ்மா பைக் மாடலை ஹீரோ நிறுவனம் முதலில் 2003 ஆம் ஆண்டிலேயே அறிமுகம் செய்தது.

அன்று தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்தது. இந்த காலகட்டத்தில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பை அப்பைக் பெற்றுக் கொண்டிருக்கின்றது. ஆனால், அது விற்பனையில் இருந்து அகற்றப்படுவதற்கு சில மாதாங்களுக்கு முன்னரோ விற்பனையில் கடுமையான சரிவைச் சந்திக்க ஆரம்பித்தது. இதற்கு மார்க்கெட்டில் போட்டி சற்று அதிகரித்ததே காரணமாக இருக்கின்றது.
இந்த நிலை காரணமாகவே ஹீரோ அப்பைக்கை விற்பனையில் இருந்து அகற்றியது. இது விற்பனையில் இருந்த காலகட்டத்தில் இந்தியாவின் சில முன்னணி பிரபலங்களின் பிரியமான மோட்டார்சைக்கிளாகவும் இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இந்த லெஜண்ட் மாடலை ஹீரோ மீண்டும் விற்பனைக்குக் கொண்டு வரும் பணிகளில் ஹீரோ களமிறங்கியது.

தற்போது அதை விற்பனைக்கும் கொண்டு வந்துவிட்டது. கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 மிகவும் ஸ்போர்ட்டியான மற்றும் கவர்ச்சியான தோற்றத்தைக் கொண்டிருக்கின்றது. ஆகையால், இதற்கு இன்றைய கால இளைஞர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகள் பலவற்றை இந்த பைக்கில் ஹீரோ வழங்க இருக்கின்றது.
இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பெரும்பாலான லைட்டுகள் எல்இடி தரத்திலானவையாக இருக்கின்றன. ஹெட்லைட் தொடங்கி இன்டிகேட்டர் வரை என அனைத்தும் எல்இடி லைட்டுகள் ஆகும். இந்த பைக்கின் முகப்பு பகுதிக்கு அழகு சேர்க்கும் விதமாக மெல்லிசான தோற்றம் கொண்ட எல்இடி லைட் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனுடனேயே, பகல் நேரத்தில் ஒளிரும் லைட்டும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இவற்றை தொடர்ந்து அட்ஜஸ்டபிள் விண்ட் குவார்டு, செதுக்கப்பட்ட மற்றும் கொழுத்த தோற்றம் கொண்ட ஃப்யூவல் டேங்க் உள்ளிட்டவை புதிய ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210-இல் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, நவீனகால தொழில்நுட்ப வசதிகளாக இந்த பைக்கில் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட முழு டிஜிட்டல் எல்சிடி வண்ண திரை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த திரையை ஓர் மினி செல்போன் போல பயன்படுத்திக் கொள்ள முடியும். நேவிகேஷன் வசதியைக் கூட இந்த திரையில் பெற்றுக் கொள்ள முடியும். மோட்டாரை பொருத்த வரை 210 சிசி லிக்யூடு கூல்டு மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. அது 25.15 பிஎச்பி பவரையும், 20.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த மோட்டாருடன் இணைக்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் 210 பைக்கின் முன் மற்றும் பின் பக்க வீல்களில் டிஸ்க் பிரேக்குகளும், டூயல் சேனல் ஏபிஎஸ்-ம் வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும், சிறந்த சஸ்பென்ஷனுக்காக முன் பக்க வீலில் ப்ரீலோடட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பரும், பின் பக்கத்தில் ப்ரீலோடட் அட்ஜஸ்டபிள் மோனோஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பெரிதும் எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் இந்த பைக்கை ஹீரோ விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. பழைய கரிஷ்மாவிற்கு இந்தியாவில் கிடைத்து வந்தததைப் போலவே இதற்கும் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதனை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









