பணத்தை ரெடி பண்ணி வைங்க!! ஹீரோ கரீஸ்மா மீண்டும் வருது!! யமஹா ஆர்15 பக்கம் இனி யாரும் போக மாட்டாங்க போலயே

ஹீரோ கரீஸ்மா (Hero Karizma) மோட்டார்சைக்கிளின் புதிய டீசர் வீடியோவை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. விரைவில் விற்பனைக்குவர உள்ள புதிய ஹீரோ கரீஸ்மா பைக் குறித்தும், இந்த பைக் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள புதிய டீசர் வீடியோவையும் இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ கரீஸ்மா பைக்குகளுக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் அந்த அளவிற்கு மார்க்கெட்டில் ஒரு காலத்தில் பிரபலமாக விளங்கிய ஹீரோ பைக் இதுவாகும். இருப்பினும் ஒரு கட்டத்தில் கரீஸ்மா பைக்குகளின் விற்பனையை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு ஏற்பட்டது. ஆனால், மீண்டும் கரீஸ்மா பைக்கை புதிய தோற்றத்தில் களமிறக்க ஹீரோ நிறுவனம் தயாராகி வருகிறது.

hero karizma teaser video out

புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் அறிமுகத்திற்கு இன்னும் 2 வாரங்கள் கூட இல்லாத நிலையில், இந்த பைக் தொடர்பான புதிய டீசர் வீடியோ ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே பதிவிடப்பட்டுள்ள அந்த டீசர் வீடியோவில் புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் தோற்றத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை. இருட்டில் பைக் இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

ஆனால், பைக்கின் எல்இடி ஹெட்லைட்டை காண முடிகிறது. ஏனெனில் இந்த டீசர் வீடியோவில், பைக்கின் ஹெட்லைட் ஒளிர செய்து காட்டப்பட்டுள்ளது. புதிய கரீஸ்மா பைக்கின் ஹெட்லைட் வடிவம் ஆனது ஹீரோ நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸூம் ஸ்கூட்டரை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. ஹீரோ ஸூம் ஸ்கூட்டரின் ஹெட்லைட் அமைப்பில் H-வடிவில் டிஆர்எல்-களும், சில எல்இடி புரோஜெக்டர் விளக்குகளும் உள்ளன.

இவற்றுடன், 'கார்னர் பெண்டிங் லைட்' ஃபங்க்‌ஷனும் ஸூம் ஸ்கூட்டரின் விலைமிக்க இசட்.எக்ஸ் வேரியண்ட்டில் வழங்கப்படுகிறது. புதிய கரீஸ்மா எக்ஸ்.எக்.ஆர் பைக்கிலும் இந்த தொழிற்நுட்பங்கள் அனைத்தும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெட்லைட் மட்டுமின்றி, அலாய் சக்கரங்களில் ரிம் டிசைனும் ஸூம் ஸ்கூட்டர்களில் இருப்பதை போன்று, தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் வீடியோவில் புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கில் உள்ளது.

இதனால், ஹீரோ ஸூம் ஸ்கூட்டரின் மோட்டார்சைக்கிள் வெர்சனாக புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் விளங்கலாம். அதாவது, யமஹா ஆர்15 பைக் - ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை போன்று. புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக் குறித்த விபரங்கள் எதுவும் தற்போதைக்கு பெரியதாக இல்லை. எங்களுக்கு தெரிந்தவரையில், புதிய கரீஸ்மா பைக் முற்றிலும் புதிய லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்படும்.

hero karizma teaser video out

இந்த என்ஜின் 210சிசி என்ற அளவில் இருக்கலாம். சில வாரங்களுக்கு முன்பு, புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் டிசைன் காப்புரிமை படம் ஒன்று இணையத்தில் வெளியாகி இருந்தது. அதில், புதிய கரீஸ்மா பைக்கின் பின்பக்கத்தை காண முடிந்தது. அத்துடன், ஹீரோ எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி பைக்கில் வழங்கப்படுபவதை போன்று க்ளிப்-ஆன் ஹேண்டில்பாரை கரீஸ்மா பெற்றுவருவதையும் அந்த காப்புரிமை படத்தின் மூலம் அறிய முடிந்தது.

சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் தலைக்கீழான ஃபோர்க்குகள் இந்த பைக்கில் வழங்கப்படலாம். புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.1.75 லட்சம் - ரூ.1.80 லட்சம் என்ற அளவில் எதிர்பார்க்கிறோம். விற்பனையில் இந்த ஹீரோ பைக்கிற்கு யமஹா ஆர்15 வி4 மற்றும் சுஸுகி எஸ்.எஃப்250 பைக்குகள் போட்டியாக விளங்கும்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சந்தையில் ஏற்கனவே பரீட்சையமான பெயரை பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் மோட்டார்சைக்கிளை ஹீரோ மோட்டோகார்ப் களமிறக்குகிறது. புதிய ஹீரோ கரீஸ்மா பைக்கிற்கு இளம் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த கவனம் எழுந்துள்ளது. பலர் புதிய கரீஸ்மாவின் அறிமுகத்திற்காக காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசர் புதிய கரீஸ்மா பைக் மீதான கிரேஸை மேலும் அதிகரித்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, August 18, 2023, 15:19 [IST]
English summary
Hero karizma xmr new teaser video out
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+