பழைய ஹீரோ கரீஸ்மாவுக்கும், புதிய கரீஸ்மாவுக்கும் எவ்வளவு வித்தியாசம்!! இந்த பைக்கையா அன்று வாங்க துடித்தோம்?

உலகம் கடந்த 20 வருடங்களில் எந்த அளவிற்கு பரிணாம வளர்ச்சியை கண்டுள்ளது என்பதற்கு ஓர் உதாரணமாக, ஹீரோ கரீஸ்மா மோட்டார்சைக்கிளின் முந்தைய மற்றும் தற்போதைய தோற்றங்களை சொல்லலாம். தோற்றம் மட்டுமின்றி, பல்வேறு விஷயங்களில் பழைய ஹீரோ கரீஸ்மா பைக்கும், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹீரோ கரீஸ்மா பைக்கும் வேறுப்படுகின்றன. அவை என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.

தோற்றம்: ஏற்கனவே கூறியதுதான், பழைய கரீஸ்மாவுக்கும், புதிய கரீஸ்மாவுக்கும் எள் அளவு கூட ஒற்றுமை இல்லை. அந்த அளவிற்கு முற்றிலும் புத்துணர்ச்சியானதாக புதிய கரீஸ்மாவை ஹீரோ நிறுவனம் உருவாக்கியுள்ளது. பழைய கரீஸ்மா பைக்கை ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் இணைந்து தயாரித்தன. பல்சர் 220 பைக்கை போல் மினி-ஸ்போர்ட்ஸ் பைக்காக உருவாக்கப்பட்ட பழைய கரீஸ்மாவில் டவுன் ட்யூப் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டது. அதுவே, புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கை டிரெல்லிஸ் ஃப்ரேமின் அடிப்படையில் ஹீரோ வடிவமைத்துள்ளது.

hero karizma xmr vs old karizma

என்ஜின்: பழைய கரீஸ்மா பைக் 220சிசி பைக்காக விளங்கியது. இதற்கு போட்டியாகவே, பஜாஜ் நிறுவனம் பல்சர் 220 பைக்கை களமிறக்கியது. ஆனால், புதிய கரீஸ்மா 210சிசி பைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. பழைய ஹீரோ ஹோண்டா கரீஸ்மா பைக்கில் 223சிசி, ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் (17.2 பிஎஸ் & 18.33 என்எம் டார்க்) பொருத்தப்பட்டது. அதுவே, புதிய கரீஸ்மா பைக்கில் 210சிசி DOHC 4-வால்வு, லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் (25.5 பிஎஸ் & 20.4 என்எம் டார்க்) பொருத்தப்பட்டு உள்ளது.

சஸ்பென்ஷன்: பழைய கரீஸ்மாவின் அடையாளமே, அதன் ஹேண்ட்லிங் ஆகும். இதற்கேற்ப, பழைய கரீஸ்மா பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ப்ரீலோடு அட்ஜெஸ்ட் வசதி கொண்ட இரட்டை ஷாக் அப்சார்பர்களும் வழங்கப்பட்டன. அதுவே, புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கில் முன்பக்கத்தில் 37மிமீ டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 6-ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜெஸ்டபிள் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன.

hero karizma xmr vs old karizma

பிரேக்குகள்: பைக்கின் ஹேண்ட்லிங் சிறப்பாக இருந்தது எனும்போது, பிரேக் பாகங்களும் தரமானவைகளாக இருந்தன என்று தானே அர்த்தம். ஹீரோ ஹோண்டா தயாரித்த கரீஸ்மா பைக்கில் முன் சக்கரத்தில் 276மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 130மிமி டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டன. புதிய கரீஸ்மாவில் ஒரு படி முன்னேறி, முன் சக்கரத்தில் ஆக்ஸியல் காலிபர் உடன் 300மிமீ பெடல் டிஸ்க் பிரேக்கும், பின் சக்கரத்தில் 230மிமீ பெடல் டிஸ்க் பிரேக்கும் வழங்கப்பட்டுள்ளன.

சக்கரங்கள் & டயர்கள்: புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கில் 100/80-17 மற்றும் 140/70-17 என்ற அளவுகள் கொண்ட டயர்கள் முன் & பின் சக்கரங்களில் உள்ளன. இவற்றில் எம்.ஆர்.எஃப் ஜப்பர் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதுவே, பழைய கரீஸ்மா பைக்கில் 18 இன்ச்சில் சக்கரங்கள் வழங்கப்பட்டன. அதாவது, புதிய கரீஸ்மாவை காட்டிலும் 1 இன்ச் அதிகமாக. ஆனால் பழைய கரீஸ்மாவில் டயர்கள் அளவில் சிறியதாகவும், மெல்லியதாகவும் இருந்தன.

hero karizma xmr vs old karizma

வசதிகள்: புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக் மாடர்ன் உலகிற்கு ஏற்ப எல்இடி விளக்குகள், ஸ்லிப்பர் & அசிஸ்ட் க்ளட்ச் மற்றும் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய விண்ட்ஷீல்டு உள்ளிட்டவற்றை பெற்றுள்ளது. இருப்பினும் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் திரை வழங்கப்படவில்லை. எல்சிடி திரையே கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பழைய கரீஸ்மா உடன் ஒப்பிடுகையில் இது எவ்வளவோ பரவாயில்லை. ஏனெனில் பழைய மாடலில் 3-பேட் இன்ட்ரூமெண்ட் கன்சோல் வழங்கப்பட்டது. பழைய கரீஸ்மா பைக் எலக்ட்ரிக் ஸ்டார்டர் வசதியையும் கொண்டு இருந்தது.

விலை: 2000ஆம் துவக்கங்களில் இருந்த பொருளாதாரம் இன்று இல்லை. அப்படியிருக்க, பல்வேறு பாகங்களை இணைத்து உருவாக்கப்படும் பைக்கின் விலையை மட்டும் எவ்வாறு ஒரே மாதிரி எதிர்பார்க்க முடியும். புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையை ரூ.1,72,900 ஆக ஹீரோ மோட்டோகார்ப் நிர்ணயித்துள்ளது. இது அறிமுக விலையே, விரைவில் இதில் ரூ.10,000 அதிகரிக்கப்பட உள்ளது. பழைய ஹீரோ ஹோண்டா கரீஸ்மாவின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.90,000 என்ற அளவில் இருந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 2000ஆம் காலக்கட்டங்களில் ஒரு பைக்கின் விலை ரூ.90,000 என்பதே மிக அதிகம். உண்மையில், ஹீரோ ஹோண்டா கரீஸ்மா பைக்கின் வீழ்ச்சிக்கு இந்த அதிகப்படியான விலையே காரணமாக இருந்தது. ஆனால் இன்று ரூ.1.82 லட்சம் என்ற அளவில் விலையை நிர்ணயித்தாலும், ஏற்கக்கூடியதாகவே உள்ளது. ஏனெனில் அந்த அளவிற்கு, புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் அனைத்து பிரிவுகளிலும் ஹீரோ நிறுவனம் தனது கண்டுப்பிடிப்புகளை வழங்கியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, August 31, 2023, 11:14 [IST]
English summary
Hero karizma xmr vs old hero honda karizma
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X