ஹீரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இதவிட சிறப்பான ஆஃபர் எப்போ கிடைக்கும்னே தெரியாது.. இப்ப கிடைச்சிருக்கு!
ஹீரோ விடா வி1 (Hero Vida V1) எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஆண்டு இறுதியை முன்னிட்டு சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. என்ன மாதிரியான சிறப்பு சலுகைகள் அதற்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலே விடா வி1 (Vida V1) ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கே தற்போது சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. ஆண்டு இறுதியை முன்னிட்டே சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

ரூ. 31 ஆயிரத்திற்கான சிறப்பு சலுகைகளே அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. பண சலுகை மற்றும் லாயல்டி டிஸ்கவுண்ட் என ஏகப்பட்ட சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர எக்ஸ்சேஞ்ச் போனஸ், பேட்டரிக்கான கூட்டப்பட்ட வாரண்டி திட்டம் உள்ளிட்ட சலுகைகளும் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
இவற்றின் ஒட்டுமொத்த மதிப்பு ரூ. 31 ஆயிரம் ஆகும். இந்த சிறப்பு சலுகை இந்த ஆண்டின் இறுதி வரை மட்டுமே கிடைக்கும். அல்லது, ஸ்டாக் உள்ள வரை மட்டுமே வழங்கப்படும் என ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்து இருக்கின்றது. நிறுவனம் அறிவித்து இருக்கும் சிறப்பு சலுகைகளில் அதிக மதிப்புக் கொண்டதாக பேட்டரிக்கான கூட்டப்பட்ட இலவச வாரண்டி திட்டம் இருக்கின்றது.

இந்த திட்டத்தை சலுகை இல்லாத நாட்களில் வாங்க வேண்டும் சுமார் 8,259 ரூபாய் வரை செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோல், ரூ. 6,500 வரை கேஷ் டிஸ்கவுண்டும், எக்ஸ்சேஞ்ச் போனஸாக ரூ. 5 ஆயிரம் மற்றும் லாயல்டி சலுகையாக ரூ. 7,500ம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, கார்பரேட் டிஸ்கவுண்டாக ரூ. 2,500 வரை வழங்கப்பட இருக்கின்றது. மேலும், நிறுவனத்தின் ரூ. 1,125 மதிப்புள்ள சந்தா திட்டத்தை வழங்கப்பட இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, கடன் திட்டத்தை எதிர்பார்ப்போருக்கும் சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. 5.99 சதவீத வட்டி சதவிகிதம், ரூ. 2,429 எனும் மிக மிகக் குறைவான இஎம்ஐ திட்டங்களே அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த திட்டத்திற்காக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சில நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளுடன் கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. ஹீரோ ஃபின்கார்ப், ஐடிஎஃப்சி மற்றும் ஈகோஃபி உள்ளிட்டவற்றுடன் அது கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா பிராண்டின் கீழே அதன் மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. வி1 மற்றும் வி1 ப்ரோ ஆகியவையே அவை ஆகும். வி1 தேர்வின் விலை ரூ. 1.26 லட்சம் ஆகும். வி1 ப்ரோ தேர்வின் விலை ரூ. 1.46 லட்சம் ஆகும். இவை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.
விடா வி1 பிளஸ் ஓர் முழு சார்ஜில் 143 கிமீ ரேஞ்ஜ் தரும். இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக 3.44 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். மேலும், 3.4 செகண்டுகளிலேயே 0-40 கிமீ வேகத்தை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொட்டுவிடும்.
6 kW பீக் பவரையும், 25 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதே மோட்டாரே விடா வி1 ப்ரோவிலும் உள்ளது. ஆனால் பேட்டரி பேக் விஷயத்தில் அது மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. 3.94 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே வழங்கப்பட்டுள்ளது. இது அதிக ரேஞ்ச் தரும்.
ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 165 கிமீ ரேஞ்ச் தரும். மின்சார மோட்டார் இரண்டிலும் ஒன்றே ஆகும். ஆனாலும், பிக்-அப் விஷத்தில் விடா வி1-ஐக் காட்டிலும் சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. 0-40 கிமீ வேகத்தை எட்ட 3.2 செகண்டுகளிலேயே அது எட்டிவிடும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேபோல், ஹீரோ விடாவிற்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே தற்போது ஆண்டு இறுதிக்கான சிறப்பு சலுகைகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன. இது நிறுவனத்தின் விற்பனையை லேசாக பூஸ்ட் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








