ஹீரோ-ஹோண்டா கூட்டணிபோல இந்த கூட்டணி சக்சஸ் ஆகுமா?.. இம்முறை அமெரிக்க நிறுவனத்தை தேர்ந்தெடுத்த ஹீரோ!
கடந்த காலத்தில் ஜப்பானைச் ஹோண்டா உடன் கை-கோர்த்து செயல்பட்டதை போல, புதிதாக கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள் உடன் இணைந்து செயல்பட ஹீரோ நிறுவனம் கையொப்பம் போட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு என தனி பிராண்டை இயக்கி வருகின்றது. விடா எனும் தனி பிராண்டின்கீழே நிறுவனம் எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பிராண்டின்கீழ் வி1 எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே இப்போதைக்கு விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இந்த நிலையிலேயே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், கலிஃபோர்னியாவைச் சேர்ந்த ஜீரோ மோட்டார்சைக்கிள் எனும் நிறுவனத்துடன் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது முன்னணி எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இது மின்சார இருசக்கர வாகனம் மட்டுமின்றி மின் வாகனங்களுக்கு தேவையான முக்கிய பாகங்களை தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றது.
இந்த மாதிரியான ஓர் நிறுவனத்துடனேயே ஹீரோ மோட்டோகார்ப் தற்போது தன்னுடைய கூட்டணியைத் தொடங்கி இருக்கின்றது. இந்த கூட்டணியின் வாயிலாக ஓர் புதுமுக பிரீமியம் தர எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை நிறுவனம் உருவாக்க இருக்கின்றது. இப்போது விடா வி1 மட்டுமே இந்திய மின் வாகன சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்ற நிலையில், இதனுடன் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளையும் ஹீரோ மோட்டோகார்ப் இணைக்க இருக்கின்றது.

ஜீரோ மோட்டார்சைக்கிள் நிறுவனம் மின்சார இருசக்கர வாகனம் மற்றும் மின் வாகனங்களுக்கான பாகங்களை தயாரிப்பதில் கை-தேர்ந்த நிறுவனம் ஆகும். இந்த தன்னுடைய தனித் திறமையை, ஹீரோ மோட்டோகார்ப் உடன் இணைந்து அந்நிறுவனம் இந்தியாவில் காட்ட இருக்கின்றது. ஒரு காலத்தில் ஹீரோ மற்றும் ஹோண்டா ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டன.
இந்த கூட்டணியில் தயாரிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்தது. இதைபோலவே ஓர் மிக சிறந்த கூட்டணியாக இந்த புதிய கூட்டணியும் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த கூட்டணியின் வாயிலாக இந்தியாவின் மின் வாகன சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் மேலும் வலுவாக தன்னுடைய கால் தடத்தை பதிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு நிறுவனங்களின் கூட்டணியின் என்ன மாதிரியான டூ-வீலரில் முதலில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது என தெரியவில்லை. ஆனால், இந்த இரு நிறுவனங்களும் இணைந்து முதலில் ஓர் எலெக்ட்ரிக் பைக்கையே தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அது ஓர் முழுக்க முழுக்க பிரீமியம் தர மின்சார பைக்காகவும் இருக்கப்போகின்றது. தற்போது விற்பனையில் இருக்கும் ஹீரோவின் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் ஓர் பிரீமியம் இருசக்கர வாகனம் ஆகும். இது இரு விதமான தேர்வுகளில் இந்திய சந்தையில் விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
விடா வி1 ப்ளஸ் மற்றும் விடா வி1 ப்ரோ ஆகிய இரு விதமான தேர்வுகளிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கின்றது. விடா வி1 ப்ளஸ் ஓர் முழு சார்ஜில் 143 கிமீ தூரம் வரை பயணிக்கும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும்.
இதன் அதிக ரேஞ்ஜ் திறனிற்காக 3.44 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இதன் டாப் ஸ்பீடுக்கு 6 கிலோவாட் திறன் கொண்ட மின் மோட்டாரே காரணமாக இருக்கின்றது. இது, 3.9 கிலோவாட் பவரை, 25 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
விடா வி1 ப்ரோ தேர்வில் 3.94 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 165 கிமீ அதிகமான தூரம் பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். இந்த இரு தேர்வுகளிலும் 7 அங்குல ஓடிஏ எனேபில்ட் டிஎஃப்டி திரை, முன் பக்கத்தில் டிஸ்க்கும் - பின் பக்கத்தில் டிரம் பிரேக்கும் சிபிஎஸ் வசதி உடன் வழங்கப்பட்டு உள்ளது.
இதுதவிர, பிஎல்இ, 4ஜி மற்றும் ஒய்ஃபை இணைப்பு வசதியும் இந்த இ-ஸ்கூட்டர்களில் வழங்கப்பட்டுள்ளன. கூடுதல் சிறப்பு வசதிகளாக திருப்பத்திற்கு திருப்பம் வழி தடம் பற்றிய தகவலை வழங்கும் வசதி, திருட்டை தவிர்க்கும் தொழில்நுட்பம், டிராக் மை பைக், ஜியோ ஃபென்ஸ் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கும்.


Click it and Unblock the Notifications








