எந்த ஸ்கூட்டரிலும் இவ்ளோ பெரிய-அகலமான டயரை பார்க்க முடியாது.. சொன்னபடியே விற்பனைக்கு வந்தது ஸும் ஸ்கூட்டர்!

பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் சமீபத்தில் ஓர் டீசர் படத்தை வெளியிட்டது. இதன் வாயிலாக தான் ஓர் புதுமுக ஸ்கூட்டர் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதை அது அறிவித்தது. இந்த நிலையிலேயே சொன்னபடியே ஹீரோ அதன் ஸூம் (Hero Xoom) ஸ்கூட்டரை இந்திய இருசக்கர வாகன சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் 110 சிசி ஸ்கூட்டர் ஆகும்.

அறிமுகமாக இதற்கு 68 ஆயிரத்து 599 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தன்னுடைய அனைத்து தயாரிப்புகளைக் காட்டிலும் மிக சிறந்த டூ-வீலராக இதனை (ஸும்) உருவாக்கி இருக்கின்றது. குறிப்பாக, இதில் இன்டஸ்ட்ரிக்கே புதியது என கூறக் கூடிய புத்தம் புதிய அம்சங்கள் சிலவற்றைச் சேர்த்து இருக்கின்றது. இதற்கு மிக சிறந்த உதாரணமாக இன்டலிஜென்ட் கார்னரிங் லைட் (Hero Intelligent Cornering Light) இருக்கின்றது.

ஹீரோ ஜும்

எந்த டூ-வீலரிலும் பார்க்க முடியாது

இந்த ரக லைட்டை வேறு எந்த ஸ்கூட்டரிலும் பார்க்க முடியாது. ஸ்கூட்டர் மட்டுமல்ல பைக் மாடல்களிலும் பார்க்க முடியாது. இந்த அம்சத்தை ரைடரின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ஹீரோ ஸுமில் வழங்கி உள்ளது. மிக இருளான பகுதிகளில் பயணிக்கும்போது இந்த லைட் மிகவும் பிரகாசமான வெளிச்சத்தை வெளியிடும். குறிப்பாக, கார்னர்களை தெரிந்து கொள்ளும் வகையில் அது ஒளிரும். இதன் வாயிலாக சாலையை மிக தெளிவாக பார்க்க முடியும்.

இரவில் சவாரி செய்ய உகந்தது

எனவே இரவில் இந்த ஸ்கூட்டரில் சவாரி செய்வது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும். இத்துடன், பெரிய அளவுள்ள மற்றும் அகலமான டயரே ஸுமில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது மிக சிறந்த கிரிப்பான இயக்க அனுபவத்தை வழங்கக் கூடியது. இளம் தலைமுறையினருக்கு இந்த வசதி மிகவும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இளைஞர்களைக் கவரும் பொருட்டே நிறுவனம் ஸுமை உருவாக்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹீரோ ஜும்

ஐ3எஸ் மோட்டார்

முன்னதாக பார்த்த சிறப்பு வசதிகளுடன் சேர்த்து ஸும் ஸ்கூட்டரில் ஐ3எஸ் தொழில்நுட்பத்தினாலான மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டாருடன் சேர்த்து ஐடில் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதியையும் ஹீரோ வழங்கி இருக்கின்றது. இந்த அம்சங்கள் எரிபொருள் சிக்கனத்திற்கு வழி வகுக்கும். இதுதவிர, டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் வழங்கப்பட்டு உள்ளது. மேலும், சைடு ஸ்டாண்டு போட்டால் எஞ்ஜினைக் கட்-செய்யும் அம்சமும் ஹும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது.

வேரியண்ட் விபரம்

ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்குக் கிடைக்கும். ஷீட் டிரம், காஸ்ட் டிரம் மற்றும் காஸ்ட் டிஸ்க் இந்த தேர்வுகளிலேயே அது கிடைக்கும்.

அவற்றின் விலை விபரம்:

  • எல்எக்ஸ் ஷீட் டிரம் (LX -Sheet Drum): ரூ. 68,599
  • விஎக்ஸ் காஸ்ட் டிரம் (VX - Cast Drum): ரூ. 71,799
  • இசட்எக்ஸ் காஸ்ட் டிரம் (VX - Cast Drum): ரூ. 76,699

இந்த விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரும் மதிப்பாகும்.

ஹீரோ ஜும்

கவர்ச்சியான ஸ்கூட்டர்

புதிய ஸும் ஸ்கூட்டரை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிக கவர்ச்சியானதாக உருவாக்கி இருக்கின்றது. எல்இடி புரஜெக்டர் ஹெட்லேம்ப், எல்இடி டெயில் லைட்டு. டைமண்ட் கட் அலாய் வீல்கள், எக்ஸ்-சென்ஸ் தொழில்நுட்பம் என எக்கசக்க அம்சங்கள் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளன. முன்னதாக ஸ்கூட்டரில் டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் பயன்படுத்தி இருப்பதாக கூறி இருந்தோம். இதனை ப்ளூடூத் வாயிலாக இணைக்கும்பட்சத்தில் அந்த திரை வாயிலாகவே செல்போனுக்கு வரும் அழைப்பு, எஸ்எம்எஸ் மற்றும் கீ அலர்டு ஆகியவற்றை பெற்றுக் கொள்ள முடியும்.

பூட்ல லைட் கொடுத்திருக்காங்க

இதுதவிர, எரிபொருளின் அளவு, செல்போனின் பேட்டரி அளவு ஆகியவற்றையும் இந்த திரை வாயிலாக தெரிந்துக் கொள்ளலாம். இவற்றுடன், பூட் பகுதியில் லைட், செல்போன் சார்ஜர், குளோவ் பாக்ஸ் போன்ற அம்சங்களும் ஸுமில் வழங்கியிருக்கின்றனர். மோட்டாரை பொருத்தவரை 110 சிசி பிஎஸ் VI தர எஞ்ஜினே பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8.05 எச்பி பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

நிற தேர்வு விபரம்

இது இயக்கத்தின்போது மிக சிறந்த பெர்ஃபார்மன்ஸை வழங்க போதுமான திறன் ஆகும். நிற தேர்வாக ஐந்து விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட உள்ளன. ஷீட் டிரம் பிரேக் வேரியண்டில் போலஸ்டர் ப்ளூ, காஸ்ட் டிரம் பிரேக் வேரியண்டில் போலஸ்டர் ப்ளூ, பிளாக் மற்றும் பியர் சில்வர் ஒயிட், காஸ்ட் டிஸ்க் பிரேக் வேரியண்டில் போலஸ்டர் ப்ளூ, பிளாக், ஸ்போர்ட்ஸ் ரெட் மற்றும் மேட் அப்ராக்ஸ் ஆரஞ்சு ஆகிய நிற தேர்வுகளும் வழங்கப்படும்.

More from DriveSpark

Article Published On: Monday, January 30, 2023, 16:56 [IST]
English summary
Hero motoCorp launched 110 cc scooter xoom
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+