வாடிக்கையாளர்களின் தலையில் இடியை இறக்கிய ஹீரோ! இன்னும் ஒரு நாளில் ஒட்டுமொத்தமா எல்லாமே மாறப்போகுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டூவீலர் நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). மோட்டார்சைக்கிள் (Motorcycle) மற்றும் ஸ்கூட்டர்கள் (Scooters) என இரு வகையான டூவீலர்களையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனை செய்து வருகிறது.

இந்த சூழலில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. ஆம், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விலை உயர்வு (Price Hike) குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை 1 சதவீதம் வரை உயரவுள்ளது.

Hero HF Deluxe

ஆனால் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் அனைத்து டூவீலர்களுக்கும் இந்த விலை உயர்வு பொருந்தாது. குறிப்பிட்ட ஒரு சில மோட்டார்சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலை மட்டுமே உயரவுள்ளது. ஆனால் எந்தெந்த டூவீலர்களின் விலை உயரவுள்ளது? என்பதை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

இந்த விலை உயர்வு வரும் அக்டோபர் 3ம் தேதியில் இருந்து அமலுக்கு வரவுள்ளது. நடப்பு 2023 காலண்டர் வருடத்தில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது டூவீலர்களின் விலையை உயர்த்துவது இது 3வது முறை ஆகும். முன்னதாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தனது டூவீலர்களின் விலையை 2 சதவீதம் வரை உயர்த்தியிருந்தது.

Hero HF 100

இதை தொடர்ந்து கடந்த ஜூலை 3ம் தேதி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்களின் விலை 1.5 சதவீதம் வரை உயர்த்தப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து நடப்பு 2023ம் ஆண்டில் மூன்றாவது முறையாக வரும் அக்டோபர் 3ம் தேதியில் இருந்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை 1 சதவீதம் வரை உயரவுள்ளது.

இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்னதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களின் விலை உயர்த்தப்படவுள்ளது. எனவே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவன டூவீலர்களை வாங்க திட்டமிட்டுள்ள வாடிக்கையாளர்கள் சற்று அதிக தொகையை கொடுப்பதற்கு தயாராகி கொள்வது நல்லது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகை காலத்திற்கு முன்னதாக பல்வேறு நிறுவனங்களின் வாகனங்கள் விலை உயரலாம் என டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் ஏற்கனவே கூறியிருந்தது. அதற்கேற்ப தற்போது தொடர்ச்சியாக பல்வேறு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களும் விலை உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன.

இதற்கு முன்னதாக கியா மோட்டார்ஸ் (Kia Motors) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உள்ளிட்ட நிறுவனங்கள் எல்லாம் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இதில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது வர்த்தக வாகனங்களின் (Commercial Vehicles) விலையை உயர்த்தவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, September 30, 2023, 23:59 [IST]
English summary
Hero motocorp price hike from october 3 all you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+