ஜூன் 14இல் தெரிந்துவிடும்... ஹீரோவின் அந்த புதிய பைக் எது தாங்க? சஸ்பென்ஸை இப்போவே தாங்க முடியல!!

புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்றை வருகிற ஜூன் 14ஆம் தேதி அறிமுகப்படுத்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் தயாராகி வருகிறது. இதுகுறித்து ஹீரோ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள டீசரை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் பிராண்டாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பில் இருந்து ஓர் புத்தம் புதிய மோட்டார்சைக்கிள் ஒன்று சந்தையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சமீப வாரங்களாக தொடர்ந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்த புதிய மோட்டார்சைக்கிள் ஆனது கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் எனவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

hero motocorp released new teaser

கரீஸ்மா பெயர் இந்திய சந்தைக்கு ஒன்றும் புதியது அல்ல. 2000ஆம் ஆண்டின் துவக்கங்களில் விற்பனையில் இருந்த ஹீரோ பைக் ஆகும். குறுகிய காலம் மட்டுமே விற்பனையில் இருந்தாலும், அதற்குள் பலரை ஹீரோ கரீஸ்மா வெகுவாக கவர்ந்தது. இருப்பினும் கரீஸ்மாவின் விற்பனையை நிறுத்திய ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை மீண்டும் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கடந்த மாதங்களில் இருந்து செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

இவ்வளவு ஏன், கரீஸ்மாவின் பெயருக்கான காப்புரிமையை கூட மீண்டும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பெற்று கொண்டுள்ளதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளிவந்தன. இந்த நிலையில்தான், தற்போது ஹீரோ மோட்டோகார்ப் சார்பில் புதியதொரு டீசர் ஒன்று இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது. வெறும் 14 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக இருக்கும் இந்த வீடியோவில் ஹீரோவின் புதிய பைக்கின் தோற்றத்தை முழுமையாக பார்க்க முடியவில்லை.

hero motocorp released new teaser

பைக்கின் இரு சக்கரங்கள் (அதிலிலும் பாதி) மட்டுமே தெரிக்கின்றன. இதனால் இது ஹீரோ கரீஸ்மா பைக் தான் என நம்மால் உறுதியாக கூற முடியவில்லை. ஏனெனில் விற்பனையில் உள்ள எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கையும் ஹீரோ நிறுவனம் அப்டேட் செய்து வருகிறது. மீண்டும் சந்தையில் விற்பனைக்குவர உள்ள கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக் ஆனது வழக்கம்போல் 210சிசி என்ஜின் உடன் வடிவமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 210 பைக்கின் புகைப்படம் ஒன்று சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஏனெனில் அந்த படத்தில் முற்றிலும் புத்துணர்ச்சியான தோற்றத்தில் கரீஸ்மா பைக் காட்சியளித்து இருந்தது. ஹீரோவின் டீலர்கள் கலந்துரையாடலின்போது புதிய கரீஸ்மா பைக் காட்சிப்படுத்தப்பட்டதாகவும், அப்போது மறைமுகமாக எடுக்கப்பட்ட புகைப்படமே அதன்பின் இணையத்தில் லீக் ஆகிவிட்டதாகவும் கூறப்படுகிறது.

hero motocorp released new teaser

அதேநேரம் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கையும் மறந்துவிட வேண்டாம். ஏனெனில் பஜாஜ் பல்சர் 160 பைக்குகளுக்கு நேரெதிர் போட்டியாக விளங்கும் ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் பைக்கின் அப்டேட் செய்யப்பட்ட வெர்சன் சமீப காலங்களில் சிலமுறை சோதனை ஓட்டங்களின்போது அடையாளம் காணப்பட்டுள்ளது. இவை இரண்டும் இல்லாமல், எக்ஸ்ட்ரீம் 200எஸ் பைக்கின் 4 வால்வு வெர்சனையும் அறிமுகப்படுத்த ஹீரோ திட்டமிட்டு இருக்கலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: ஆக மொத்தத்தில் ஹீரோ மோட்டோகார்ப் எந்த புதிய மோட்டார்சைக்கிளை சந்தையில் களமிறக்க உள்ளது என்பது தற்போதைக்கு உறுதியாக தெரியவில்லை. இதனை அறிய ஜூன் 14ஆம் தேதி வரையில் காத்திருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட பைக்குகள் எதுவுமின்றி, முற்றிலும் புதிய மோட்டார்சைக்கிளை நம்மை ஆச்சிரியப்படுத்தும் வகையில் ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்தலாம்... யாருக்கு தெரியும்!!

More from DriveSpark

Article Published On: Wednesday, June 7, 2023, 11:21 [IST]
English summary
Hero motocorp released new teaser of new motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X