ஒரே மாதத்தில் 5 இலட்ச வாகனங்கள் விற்பனையா... ஹீரோ நிறுவனத்தை இந்த விஷயத்தில் அடிச்சுக்கவே முடியாது!!

இந்தியாவின் முன்னணி 2-சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்ப் கடந்த 2023 மார்ச் மாதத்தில் எத்தனை இருசக்கர வாகனங்களை விற்பனை செய்தது என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி முழுமையாக இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியா மட்டுமின்றி, உலகளவில் மிக பெரிய 2-வீலர் பிராண்ட் ஹீரோ மோட்டோகார்ப் என்றால் அதில் மிகையில்லை. பிரீமியம் தரத்திலான 2-வீலர்களை அதிகளவில் கொண்டில்லாததால் நிறைய வெளிநாடுகளில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் செயல்பாட்டில் இல்லை. இருப்பினும், இந்திய சந்தையில் ஹீரோ நிறுவனம் விற்பனை செய்யும் வாகனங்களின் எண்ணிக்கையே இந்த நிறுவனத்தை உலகின் மிக பெரும் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் என சொல்வதற்கு போதுமானது.

ஒரே மாதத்தில் 5 இலட்ச ஹீரோ 2-வீலர்கள் விற்பனையா...!!

ஏனெனில் அந்த அளவிற்கு, உள்நாட்டு சந்தையில் ஒவ்வொரு மாதத்திலும் லட்சக்கணக்கில் 2-சக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்து வருகிறது. குறிப்பாக, இந்த நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் பைக் ஒவ்வொரு மாதத்திலும் இமாலய எண்ணிக்கையில் விற்பனையாகுகிறது. கடந்த மார்ச் மாதத்திலும் மொத்தம் 5,19,342 இருசக்கர வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்துள்ளது.

இதில் பெரும்பான்மையானவை இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அதாவது, 5,19,342இல் சுமார் 5,02,730 யூனிட் இருசக்கர வாகனங்கள் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். மீதி 16,612 யூனிட்கள் மட்டுமே வெளிநாடுகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டவை ஆகும். கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 4,15,764 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்து இருந்தது.

ஒரே மாதத்தில் 5 இலட்ச ஹீரோ 2-வீலர்கள் விற்பனையா...!!

ஆனால் வெளிநாட்டு ஏற்றுமதி அந்த மாதத்தில் சற்று அதிகமாக 34,290 ஆக பதிவானது. இவ்வாறு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 90% மேல் உள்நாட்டு சந்தையையே நம்பியுள்ளது. அதேபோல் மொத்த விற்பனை எண்ணிக்கையான 5,19,342 -இல் 4,85,896 மோட்டார்சைக்கிள்களும், வெறும் 33,446 யூனிட்கள் மட்டுமே ஸ்கூட்டர்களும் அடங்குகின்றன. ஏனெனில் ஹீரோ மோட்டோகார்பின் அடையாளங்களாக ஸ்பிளெண்டர், எச்.எஃப் டீலக்ஸ் போன்ற பைக்குகளே விளங்குகின்றன.

இருப்பினும் 2022 மார்ச் மாதத்தில் 4,25,721 மோட்டார்சைக்கிள்களை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தால் விற்க முடிந்தது. அந்த மாதத்தில் 24,433 ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் இந்தியா உள்பட உலகளவில் விற்பனை செய்து இருந்தது. இவ்வாறு 2022 மார்ச்சில் பைக்குகள் & ஸ்கூட்டர்கள் என இரண்டின் விற்பனை எண்ணிக்கையையும் குறைவாகவே ஹீரோ நிறுவனம் பதிவு செய்து இருந்தது. அந்த மாதத்தில் ஒட்டு மொத்தமாக 4,50,154 இருசக்கர வாகனங்களை உலகளவில் ஹீரோ விற்பனை செய்து இருந்தது.

ஒரே மாதத்தில் 5 இலட்ச ஹீரோ 2-வீலர்கள் விற்பனையா...!!

இந்த எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் கடந்த 2023 மார்ச் மாத விற்பனை எண்ணிக்கை ஆனது கிட்டத்தட்ட 15.37% அதிகமாகும். அதுவே, முந்தைய 2023 பிப்ரவரி மாதத்தில் ஹீரோ மோட்டோகார்பின் மொத்த உள்நாட்டு & வெளிநாட்டு விற்பனை எண்ணிக்கைகள் 4 இலட்சத்திற்கும் குறைவாகவே பதிவாகின. ஒட்டு மொத்தமாக கடந்த நிதியாண்டில், அதாவது 2022 ஏப்ரல் - 2023 மார்ச் வரையில், இந்த 12 மாதங்களில் 53,28,546 இருசக்கர வாகனங்களை ஹீரோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

கடந்த 12 மாதங்களில் 53,28,546 இருசக்கர வாகனங்களை பதிவு செய்துள்ளதாக புள்ளி விபரங்கள் வெளிக்காட்டுகின்றன. அப்படியென்றால், சராசரியாக ஒவ்வொரு மாதத்திலும் 4.44 இலட்ச வாகனங்களை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்கிறது. இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த மார்ச் மாதத்தின் 5,19,342 விற்பனை எண்ணிக்கை ஆனது கிட்டத்தட்ட 75 ஆயிரம் யூனிட்கள் அதிகமாகும். இவ்வாறு ஹீரோ மோட்டோகார்பின் விற்பனை வளர்ச்சி கண்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 3, 2023, 11:00 [IST]
English summary
Hero motocorp sales 2023 march
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+