இந்த சான்ஸ மிஸ் பண்ணீங்க ரொம்ப ரொம்ப ஃபீல் பண்ணுவீங்க! ஹீரோ இந்த பைக்கின் விலையை ஒரேடியா இவ்ளோ ஏத்த போகுதா!
இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), சமீபத்தில் அதன் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் (Karizma XMR) பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. அறிமுகமாக ரூ. 1,72,900 விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலையையே விரைவில் உயர்த்த இருப்பதாக ஹீரோ அதிர்ச்சியளிக்கும் தகவலை வெளியிட்டு இருக்கின்றது.
6 ஆயிரத்து 100 ரூபாய் வரையே உயர்த்த அது திட்டமிட்டு இருக்கின்றது. ஆனால், இந்த விலை உயர்வு செய்யப்பட இன்று முதலே நடைமுறைக்கு வரப் போவதில்லை. அதாவது, ஹீரோ நிறுவனம் அதன் புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை அறிமுக சலுகை விலையில் வாங்கிக் கொள்வதற்காக கொஞ்சம் நாட்கள் தாழ்த்தியே விலை உயர்வை நடைமுறைக்குக் கொண்டு வர இருக்கின்றது.

செப்டம்பர் 30 வரை நிறுவனம் அறிவித்த அறிமுக விலையில் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக் வாங்கிக் கொள்ள முடியும். இந்த நாளுக்கு பின்னரில் இருந்தே புதிய விலையில் அப்பைக் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் அல்லது 7046210210 இந்த பிரத்யேக எண்ணைத் தொடர்புக் கொண்டு உங்களுக்கான ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கை புக் செய்துக் கொள்ள முடியும்.
புக்கிங்க செய்ய முன் தொகையாக ரூ. 3 ஆயிரம் மட்டுமே வசூல் செய்யப்படுகின்றது. விலை உயர்வை மட்டுமில்லைங்க செப்டம்பர் 30 நள்ளிரவுடன் பைக்கிற்கான புக்கிங்கையும் நிறுத்திக் கொள்ள இருக்கின்றது ஹீரோ நிறுவனம். இது தற்காலிக நிறுத்தம் மட்டுமே ஆகும். இதற்கு பின்னர் ஓர் சிறிய இடைவெளிக்கு பின்னரே மீண்டும் பைக்கிற்கான புக்கிங்குகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருக்கின்றது.

அப்போது, உயர்த்தப்பட இருப்பதாக கூறப்பட்டு இருக்கும் ரூ. 1,79,900 என்கிற இந்த புதிய விலையிலேயே ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக் விற்கப்பட உள்ளது. இந்த பைக்கில் 210 சிசி லிக்யூடு கூல்டு டிஓஎச்சி எஞ்ஜினையே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பயன்படுத்தி இருக்கின்றது.
இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 25.15 பிஎச்பி பவரையும், 20.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. 6 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஆகிய வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆகையால், புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் ஓட்டும்போது தனித்துவமான அலாதியான இன்பத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுதவிர சிறப்பு வசதிகளாக டூயல் சேனல் ஏபிஎஸ், டிஸ்க் பிரேக்குகள், அட்ஜஸ்டபிள் விண்டுஷீல்டு, இன்டலிஜன்ட் இலுமினேஷன் ஹெட்லேம்ப் மற்றும் டர்ன் -பை- டர்ன் நேவிகேஷன் பற்றிய தகவலை வழங்கும் திரை உள்ளிட்ட ஏகப்பட்ட சிறப்பம்சங்களை இந்த பைக்கில் ஹீரோ நிறுவனம் வழங்கி இருக்கின்றது.
இவற்றுடன், சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் பின் பக்க வீலில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்தகைய சிறப்பு வசதிகள் கொண்ட பைக்கின் விலையேய ஹீரோ விரைவில் உயர்த்த இருக்கின்றது. இந்த பைக்கை சென்ற மாதம் 29ஆம் தேதி அன்றே அதிகாரப்பூர்வமாக ஹீரோ இந்தியாவில் அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்நிலையிலேயே ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் பைக்கின் விலையை உயர்த்தும் பணியில் ஹீரோ களமிறங்கி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முதன் முதலில் 2003 ஆம் ஆண்டிலேயே ஹீரோ நிறுவனம் கரிஷ்மா பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அன்று தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்தது. இந்த காலகட்டத்தில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பை கரிஷ்மா பெற்றது. ஆனால், இறுதி கால கட்டத்தில் விற்பனையில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டது. இந்த நிலையிலேயே அப்பைக் விற்பனையில் இருந்து அகற்றப்பட்டது.


Click it and Unblock the Notifications









