உற்பத்தி பணிகள்கூட தொடங்கியாச்சு.. இனிமேதான் மார்க்கெட்டே கதற போகுது! ஹீரோ ஹீரோதான்!

ஹீரோ நிறுவனம் கரிஷ்மா (Karizma) பைக்கை விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், மீண்டும் அந்த லெஜண்ட் பைக்கை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இந்த பைக் தற்போது ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் (Hero Karizma XMR) எனும் பெயரில், புதிய அவதாரத்தில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

இந்த பைக்கின் உற்பத்தி பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் விதமாகவே தற்போது உற்பத்தி செய்யப்பட்ட ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கின் படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. இந்த பைக்கிற்கு ஏற்கனவே புக்கிங்குகள் தொடங்கிவிட்டன.

Hero starts production of karizma

இந்த நிலையிலேயே, தற்போது அதனை வாடிக்கையாளர்களுக்கு டெலிவரிக்கும் கொடுக்கும் விதமாக உற்பத்தி பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் தொடங்கி இருக்கின்றது. ரூ. 3 ஆயிரம் முன் தொகையில் கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கிற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இதற்கு ரூ. 1.73 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த குறைவான விலை மற்றும் கவர்ச்சிகரமான தோற்றமே புதிய கரிஷ்மாவின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த பைக்கின் உருவாக்கத்தில் டிரெல்லிஸ் ஃப்ரேமை ஹீரோ பயன்படுத்தி இருக்கின்றது. டிரெல்லிஸ் ஃப்ரேமை பெறும் முதல் ஹீரோ மோட்டார்சைக்கிள் இதுவே ஆகும்.

இத்துடன், டூயல் சேனல் ஏபிஎஸ் மற்றும் டிஸ்க் பிரேக்குகள் போன்ற சிறப்பு வசதிகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, மிக சிறந்த சஸ்பென்ஷன் வசதிக்காக முன் பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும் பின் பக்க வீலில் மோனோஷாக்கும் பொருத்தப்பட்டு இருக்கின்றது.

எஞ்ஜினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 210 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு, 4 வால்வு, டிஓஎச்சி எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 25.15 பிஎச்பி பவரையும், 20.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.

எஞ்ஜின், பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷனைப் போலவே தொழில்நுட்ப வசதியிலும் இந்த பைக் நம்மை மிரட்டும் வகையிலேயே இருக்கின்றது. அந்தவகையில், புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கில் எல்இடி ஹெட்லேம்ப், எல்சிடி இன்ஸ்டூரமென்ட் கன்சோல், ப்ளூடூத் இணைப்பு, அகலமான விண்ட் ஸ்கிரீன் மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் சாக்கெட் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுபோன்ற பன்முக சிறப்பு வசதிகள் தாங்கிய பைக்காகவே புதிய கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் உற்பத்தி பணிகளே தற்போது நாட்டில் தொடங்கி இருக்கின்றன. வெகு விரைவில் இந்தியாவில் இதன் டெலிவரி பணிகளும் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த பைக்கின் மறு வருகை கேடிஎம் ஆர்சி 200 மற்றும் யமஹா ஆர்15 வி4 உள்ளிட்டவற்றிற்கு போட்டியாக அமைந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். மேட் பிளாக், ரெட் மற்றும் மஞ்சள் ஆகியவையே அவை ஆகும்.

பழைய கரிஷ்மாவின் மஞ்சள் நிற தேர்விற்கே இந்தியர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்புக் கிடைத்தது. இந்த நிலையிலேயே அதே நிற தேர்வை இந்த புதிய கரிஷ்மாவிலும் விற்பனைக்கு வழங்கி இருக்கின்றது ஹீரோ. இந்தியாவில் கரிஷ்மா பைக்கை முதன் முதலில் 2003 ஆம் ஆண்டிலேயே ஹீரோ நிறுவனம் அறிமுகம் செய்தது.

அன்று தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரையில் விற்பனையில் இருந்தது. இந்த காலகட்டத்தில் மிக சிறப்பான விற்பனை வரவேற்பை கரிஷ்மா பெற்றது. ஆனால், இறுதி கால கட்டத்தில் விற்பனையில் மிகப் பெரிய தொய்வு ஏற்பட்டது. இதற்கு போட்டி நிறுவனங்களின் புதுமுக வாகனங்களே மிகப் பெரிய காரணம் ஆகும். இந்த நிலையிலேயே கரிஷ்மா இந்தியாவில் இருந்த அகற்றப்பட்டது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹீரோ கரிஷ்மா எக்ஸ்எம்ஆர் பைக்கிற்கு இந்த முறை மிக அமோகமான வரவேற்புக் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை அடுத்தடுத்து வரும் நாட்களே உறுதி செய்ய இருக்கின்றன. குறிப்பாக, வரும் மாதம் வெளியாக உள்ள சேல்ஸ் ரிப்போர்ட் வாயிலாக ஹீரோ கரிஷ்மாவிற்கு என்ன மாதிரியான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது துள்ளியமாக தெரிய வரும்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 16, 2023, 20:15 [IST]
English summary
Hero motocorp starts production of karizma xmr bike soon to start delivery
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+