ஹோண்டாவின் சாம்ராஜ்யத்தை வேரோடு சாய்க்க ஹீரோ முடிவு பண்ணிருச்சு.. தரமான தயாரிப்பு இந்தியர்களுக்காக ரெடி!

ஹோண்டா (HMSI) இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனம் இந்தியாவில் அசைக்க முடியாத சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பி இருக்கின்றது. குறிப்பாக இந்த பிராண்டின் டாப் செல்லிங் டூ-வீலர் மாடலாக ஆக்டிவா (Activa) இருக்கின்றது. இந்த ஸ்கூட்டருக்கு இந்தியர்கள் மத்தியில் ஏகபோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு டஃப் கொடுக்கும் நோக்கில் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் தரப்பில் தரமான ஸ்கூட்டர் மாடல்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டு இருக்கின்றன. இருப்பினும், அதன் பிரபலத்திற்கும், வேகமான விற்பனைக்கும் ஈடு கொடுக்க முடியாமல் போட்டி நிறுவனங்கள் அனைத்தும் தத்தளித்துக் கொண்டு உள்ளன.

Maxi scooter

அதேவேளையில், ஹீரோ மோட்டோகார்ப் அதன் ஸ்பிளெண்டர் பைக்கின் வாயிலாக ஹோண்டாவிற்கு மிகப் பெரிய அளவிலான போட்டியை வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இந்த போட்டியை மேலும் அதிகரிக்கச் செய்யும் முயற்சியிலேயே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது, வெகு விரைவில் சில புதுமுக இருசக்கர வாகனங்களை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹீரோ நிறுவனம் நாளை நடைபெற இருக்கும் உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி நிகழ்ச்சியில் சில புதுமுக இருசக்கர வாகனங்களை அறிமுகம் செய்ய இருக்கின்றது.

Hero maxi scooter teaser

இந்த தகவலை ஹீரோ நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி இருக்கின்றது. டீசர் படத்தின் வாயிலாகவே இந்த தகவலை உறுதி செய்திருக்கின்றது. நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசர் படத்தை வைத்து பார்க்கையில் அது ஓர் புதுமுக ஏடிவி மேக்ஸி ரக ஸ்கூட்டரை உலக அரங்கில் வெளியீடு செய்ய இருப்பது உறுதியாகி இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி பிராண்டின்கீழ் ஒரு ஏடிவி ரக மேக்ஸி ஸ்கூட்டர்கூட விற்பனைக்குக் கிடைக்காத நிலையே தென்படுகின்றது. இந்த நிலையை போக்கும் விதமாக ஹீரோ களமிறங்கி இருக்கின்றது. பிராண்டின் கீழ் வெகு விரைவில் புதிய மேக்ஸி ஸ்கூட்டர் வர இருப்பது உறுதியாகி உள்ளது.

Hero maxi scooter

நாளைய தினமே இந்த வாகனம் வெளியீடு செய்யப்பட இருப்பது முதல் முறையாகும். இதற்கு முன்னதாக இந்த மேக்ஸி ரக வாகனத்தை அது வெளியீடு செய்தது இல்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தொடர்ந்து, அந்த உலக அரங்களில் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரும் வெளியீடு செய்ய இருப்பது தெரிய வந்திருக்கின்றது.

நிறுவனம் வெளியிட்டு இருக்கும் டீசரில் இதுவும் இடம் பெற்றிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த செயலின் வாயிலாக ஹீரோ நிறுவனம், அதன் விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளிநாடுகளிலும் விற்பனைக்குக் கொண்டு செல்லும் என்பதை தெரியப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இந்தியர்கள் மத்தியில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது குறிப்பிடத்தகுந்தது.

இதே வரவேற்பை உலக சந்தையில் இந்த வாகனம் பெறலாம் என யூகிக்க முடிகின்றது. ஆனால், இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் நிறுவனம் தரப்பில் இருந்து வெளியிடப்படிவில்லை. புதுமுக வாகனங்கள் இஐசிஎம்ஏ கண்காட்சியில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றன என்பதை மட்டுமே தற்போது ஹீரோ மோட்டோகார்ப் அறிவித்து இருக்கின்றது.

இத்தாலியின் மிலனில், நாளை (நவம்பர் 7) தொடங்கி வருகின்ற நவம்பர் 12 ஆம் தேதி வரை இஐசிஎம்ஏ வாகன கண்காட்சி நடைபெற இருக்கின்றது. இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப்பை போல இன்னும் பல சர்வதேச வாகன உற்பத்தியாளர்கள் பங்குபெற்று தங்களின் வருங்கால தயாரிப்புகளைக் காட்சிப்படுத்த இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மேக்ஸி ஸ்கூட்டர் பிரிவில் ஒரு சில வாகன மாடல்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன. அவை, பிஎம்டபிள்யூ சி400 ஜிடி, ஹோண்டா ஏடிவி150, ஹோண்டா ஃபோர்ஷா 300, 22 கைம்கோ எக்ஸ்-டவுன் 300ஐ, யமஹா ஏரோக்ஸ், அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160, அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 125, சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் ரைடு ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 6, 2023, 17:23 [IST]
English summary
Hero motocorp to be unveil maxi scooter vida at eicma
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X