காத்திரு பகையே! பழைய நண்பனை பழிவாங்க ரகசியமாக வேலையை தொடங்கிய ஹீரோ! விஷயத்தை கேட்டதும் ஆடிப்போன ஹோண்டா!
இந்தியாவை சேர்ந்த முன்னணி இரு சக்கர வாகன நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). இதன் தலைமை அலுவலகம் புது டெல்லியில் (New Delhi) அமைந்துள்ளது.
ஹோண்டா நிறுவனத்துடனான 2 தசாப்தத்திற்கும் மேலான கூட்டணியை முறித்து கொண்ட பிறகும் கூட, இந்திய சந்தையில் ஹீரோ நிறுவனத்தின் ஆதிக்கத்தை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தரமான தயாரிப்புகள்தான் முக்கியமான காரணமாக கருதப்படுகிறது.

இந்த சூழலில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் புதிய ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இது ஸ்போர்ட்டியான தோற்றம் கொண்ட 125 சிசி ஸ்கூட்டராக இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காப்புரிமை புகைப்படம் என நம்பப்படும் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
இதன் சைடு பேனல்களின் டிசைனை பார்க்கும்போது, நமக்கு ஹீரோ ஷும் 110 (Hero Xoom 110) நினைவு வருகிறது. அத்துடன் சிங்கிள் பீஸ் சீட் மற்றும் ஸ்பிளிட் க்ராப் ரெயில் ஆகியவற்றையும் கூட நம்மால் பார்க்க முடிகிறது. சஸ்பென்ஸனை பொறுத்தவரையில் இந்த ஸ்கூட்டரின் முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குள் வழங்கப்படலாம்.
அதே நேரத்தில் பின் பகுதியில் வழக்கமான ஷாக் அப்சார்பர்கள் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. ஆனால் ஹீரோ ஷும் 110 ஸ்கூட்டரில் இருப்பதை காட்டிலும் பெரிய அலாய் வீல்கள், இந்த புதிய ஸ்கூட்டரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் இந்த ஸ்கூட்டரின் முன் பகுதியில் பெட்டல் டிஸ்க் பிரேக் கொடுக்கப்படலாம்.
செயல்திறனை பொறுத்தவரையில் ஹீரோ மேஸ்ட்ரோ எட்ஜ் மற்றும் ஹீரோ டெஸ்ட்டினி ஸ்கூட்டர்களில் உள்ள அதே 125 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான், இந்த புதிய மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7,000 ஆர்பிஎம்மில் 9 பிஹெச்பி பவர் மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 10.4 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியதாக இருக்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: தற்போதைய நிலையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக கூறப்படும் 125 சிசி ஸ்கூட்டரின் காப்புரிமை புகைப்படங்கள் மட்டுமே இணையத்தில் வலம் வந்து கொண்டுள்ளன. ஆனால் இந்த ஸ்கூட்டர் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை.
ஆனால் இந்த ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யபட்டால், அது ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125) ஸ்கூட்டருக்கு போட்டியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தாலும் கூட, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் இந்த புதிய 125 சிசி ஸ்கூட்டர் விற்பனைக்கு வருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








