ஹீரோ கரீஸ்மா பைக் மீண்டும் வருவது உறுதிதான் போல... மார்க்கெட்டில் புது டிரெண்டை செட் பண்ண போவது நிச்சயம்!!

ஒரு காலத்தில் ஹீரோ பிராண்டிற்கு விளம்பரமாக விளங்கிய கரீஸ்மா பைக்குகள் மீண்டும் சந்தைக்குவர உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியான நிலையில், 'கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர்' பெயருக்கான உரிமையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பதிவு செய்து கொண்டுள்ளது. இதுகுறித்த காப்புரிமை ஆவண படத்தை இனி பார்க்கலாம்.

ஹீரோ கரீஸ்மா பைக்கை ஞாபகத்தில் வைத்துள்ளீர்களா? ஆம் என்றால் உங்களுக்கு சற்று வயதாகிவிட்டது என்று அர்த்தம். 2000ஆம் துவக்கத்தில் சினிமா திரைப்படங்களில் பல ஹீரோக்களின் வாகனம் ஹீரோ கரீஸ்மா தான். அந்த அளவிற்கு பிரபலமாக இருந்த இந்த பைக்கை ஒரு கட்டத்திற்குமேல் நிறுத்தி கொள்ள வேண்டிய கட்டாயம் ஹீரோ நிறுவனத்திற்கு ஏற்பட்டது. கரீஸ்மா பைக்கின் தோற்றத்தை கூட உங்களில் சிலர் மறந்துப்போய் இருப்பீர்கள்.

கரீஸ்மா பைக்கின் பெயருக்கான உரிமையை பெற்றது ஹீரோ!!

இப்படிப்பட்ட தற்போதைய சூழலில், மீண்டும் கரீஸ்மா பைக்கை கொண்டுவரும் திட்டத்தில் ஹீரோ மோட்டோகார்ப் உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகின. அதனை தொடர்ந்து தற்போது, கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் பெயருக்கான காப்புரிமையை ஹீரோ நிறுவனம் பெற்றுள்ளதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ளன. ஹீரோ மோட்டோகார்பின் காப்புரிமையை உறுதி செய்யும் வகையில் வெளியாகியுள்ள ஆவண படம் தான் அந்த ஆதாரம் ஆகும்.

இந்த காப்புரிமை ஆவணத்தின் குறிப்பிடப்பட்டுள்ள விபரங்களின்படி பார்க்கும்போது, கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பெயருக்கான காப்புரிமையை வேண்டி கடந்த மார்ச் 10ஆம் தேதி ஹீரோ மோட்டோகார்ப் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயருக்கான காப்புரிமையை கடந்த மார்ச் 27ஆம் தேதி வழங்கியுள்ளனர்.

கரீஸ்மா பைக்கின் பெயருக்கான உரிமையை பெற்றது ஹீரோ!!

இந்த காப்புரிமை எத்தனை காலத்திற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திடம் இருக்கும் என்பது குறித்த விபரம் வெளியாகியுள்ள ஆவண படத்தில் குறிப்பிடப்படவில்லை. விற்பனையில் இருந்த சமயத்தில் ஹீரோ கரீஸ்மா ஆனது 210சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். பெயரில் மாற்றமில்லாமல், அதே கரீஸ்மா பெயரில் தான் இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்பது தற்போது வெளியாகியுள்ள ஆவண படத்தின் மூலம் உறுதியாகியுள்ளது.

ஆனால், புதிய 210சிசி லிக்யுடு-கூல்டு என்ஜினை இந்த பைக்கில் ஹீரோ மோட்டோகார்ப் நிறூவனம் பொருத்தும். அத்துடன், பழைய கரீஸ்மாவின் தோற்றத்தில் நிச்சயமாக புதிய கரீஸ்மா பைக்கை எதிர்பார்க்க முடியாது. கரீஸ்மா பைக்கின் உடல் அமைப்பை முற்றிலுமாக கூட ஹீரோ மோட்டோகார்ப் மாற்றலாம். முன்னதாக, ஹீரோ கரீஸ்மா பைக் மீண்டும் வந்தால், அந்த பைக் அடுத்த 2024ஆம் ஆண்டின் முதல் மாதங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்பட்டது.

கரீஸ்மா பைக்கின் பெயருக்கான உரிமையை பெற்றது ஹீரோ!!

ஆனால், பைக்கின் பெயருக்கான காப்புரிமையை ஹீரோ மோட்டோகார்ப் பெற்றுள்ளதால், கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கின் அறிமுகத்தை நடப்பு 2023ஆம் ஆண்டு முடிவதற்குள் காண நேர்ந்தாலும் ஆச்சிரியப்படுவதற்கு இல்லை. இந்த பைக் முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டு வருவதாக ஏற்கனவே தகவல்கள் ஒருபக்கம் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தோற்றத்தில் மாற்றம் இல்லாவிடினும், ஹெட்லைட்கள் & டிஆர்எல்-கள் எல்இடியாக மாற்றப்படும் என்பது உறுதி.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தில் இருந்து இவ்வாறான புத்தம் புதிய தயாரிப்புகள் அறிமுகமாகி பல வருடங்கள் ஆகிவிட்டன. கடைசியாக வெளிவந்த எக்ஸ்பல்ஸ் 200 பைக் சந்தையில் நல்ல வெற்றி பெற்றுள்ளது. அதில் கிடைத்த ஊக்கத்துடன் கரீஸ்மா பைக்கை ஹீரோ நிறுவனம் சந்தையில் களமிறக்கும். இந்த பைக் முற்றிலும் புதிய 210சிசி லிக்யுடு-கூல்டு பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, March 31, 2023, 22:02 [IST]
English summary
Hero motocorp trademarked karizma xmr name
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+