உன்ன பாத்து எத்தன வருஷம் ஆச்சுயா! எல்லாருக்கும் பிடிச்ச ஹீரோ பைக் திரும்ப வருது! இவ்ளோ மைலேஜ் குடுக்குமா!

உலகின் மிகப்பெரிய டூவீலர் சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. அப்படிப்பட்ட ஒரு சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் மிக நீண்ட காலமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை நம்மால் கூற முடியும். ஹீரோ நிறுவனத்தின் தயாரிப்புகள் ஓரளவிற்கு குறைவான விலையில் (Price) கிடைப்பது முதல் காரணம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு நாடு முழுக்க சர்வீஸ் சென்டர்கள் (Service Centers) இருப்பதும், அந்த நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்கள் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்குவதும் அடுத்தடுத்த காரணங்களாக இருக்கின்றன. இருப்பினும் ஹீரோ நிறுவனத்திற்கு தொடர்ச்சியாக போட்டிகள் வந்து கொண்டேதான் இருக்கின்றன.

Hero Logo

குறிப்பாக ஹீரோ நிறுவனத்திற்கு ஒரு காலத்தில் நண்பனாக இருந்த ஹோண்டா (Honda) நிறுவனம் தற்போது பல்வேறு வழிகளிலும் குடைச்சல் கொடுத்து கொண்டு வருகிறது. சமீபத்தில் கூட புத்தம் புதிய ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) என்ற பைக்கை ஹோண்டா விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

இதற்கு பதிலடி கொடுக்க ஹீரோ நிறுவனம் தற்போது வேகமாக தயாராகி வருகிறது. ஆம், ஹோண்டா ஷைன் 100 பைக்கிற்கு நேரடி போட்டியாக ஹீரோ பேஷன் ப்ளஸ் (Hero Passion Plus) பைக் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ளது. இது ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்த பைக்தானே என்ற சந்தேகம் உங்களுக்கு வரலாம்.

Hero Passion Plus

அதற்காக ஒரு சிறிய விளக்கம். பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் மற்றும் டிமாண்ட் குறைவாக இருந்தது ஆகிய காரணங்களால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக்கின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது அந்த பைக்கை ஹீரோ நிறுவனம் ரீ-லான்ச் செய்யவுள்ளது.

பேஷன் லைன்-அப்பில் இது 100 சிசி இன்ஜின் மாடலாக இருந்தது. வழக்கமான பேஷன் மற்றும் பேஷன் ப்ரோ (Passion Pro) ஆகியவை 110 சிசி இன்ஜின் மாடல்கள் ஆகும். ஹோண்டா ஷைன் 100 பைக் விற்பனைக்கு வந்துள்ளதால், 100 சிசி இன்ஜினுடன் கூடிய பேஷன் ப்ளஸ் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளை ஹீரோ நிறுவனம் தீவிரப்படுத்தியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக 2023 ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக்குகள் தற்போது ஷோரூம்களுக்க வர தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே கூடிய விரைவில் விலைகள் அறிவிக்கப்பட்டு, 2023 ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக் முறைப்படி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பழைய மாடலில் இருந்த அதே 97.2 சிசி இன்ஜின்தான், புதிய மாடலிலும் வழங்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த இன்ஜின், இந்தியாவில் சமீபத்தில் அமலுக்கு கொண்டு வரப்பட்ட ஓபிடி-2 (OBD-2) மற்றும் (BS6 Phase 2) விதிமுறைகளுக்கு இணக்கமானதாக இருக்கும்.

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8,000 ஆர்பிஎம்மில் 7.91 பிஹெச்பி பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 8.05 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பைக்கில், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், i3S ஸ்டார்ட்/ஸ்டாப் தொழில்நுட்பம் மற்றும் செல்போன் சார்ஜிங் போர்ட் என ஏராளமான வசதிகளை (Features) நாம் எதிர்பார்க்கலாம்.

அதே நேரத்தில் இந்த பைக் ஒரு லிட்டருக்கு 65 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜ் வழங்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் ஹோண்டா ஷைன் 100 பைக்கிற்கு மட்டுமல்லாது, பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) பைக்கிற்கும், ஹீரோ பேஷன் ப்ளஸ் பைக் விற்பனையில் மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில், சிறப்பான மைலேஜ் வழங்க கூடிய ஒரு 100 சிசி பைக்கை எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு 2023 ஹீரோ பேஷன் ப்ளஸ் சிறந்த ஆப்ஷனாக இருக்கலாம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் மாதாந்திர விற்பனை எண்ணிக்கை உயர்வதற்கு 2023 பேஷன் ப்ளஸ் உதவி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, April 21, 2023, 23:31 [IST]
English summary
Hero passion plus 100 cc reaches dealerships launch soon mileage features all details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+