திரும்ப வந்துட்டேன்னு சொல்லு... ஹீரோ பேஷன் பிளஸ் - 3 வருடங்களுக்கு பின் விற்பனையில்!! விலை இதுதான்

ஹீரோ பேஷன் பிளஸ் (Hero Passion Plus) மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 வருடங்களுக்கு பிறகு விற்பனைக்கு வந்து இருக்கும் இந்த புதிய ஹீரோ பைக்கை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விரைவில் அதன் பிரபலமான மோட்டார்சைக்கிளான பேஷன் பிளஸை விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளதாக கூறிவந்தோம். இந்த நிலையில் தற்போது அப்டேட் செய்யப்பட்ட ஹீரோ பேஷன் பிளஸ் பைக் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் விற்பனைக்கு வந்துள்ளது. பேஷன் பிளஸ் பைக்கை 3 வருடங்களுக்கு பிறகு ஹீரோ அறிமுகப்படுத்தி உள்ளது.

hero passion plus launchedhero passion plus launched

கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் அமலுக்கு வந்த பிஎஸ்6 -இன் மாசு உமிழ்வு விதிமுறைகளின் கட்டுப்பாடுகளினால் பேஷன் பிளஸ் மோட்டார்சைக்கிளின் விற்பனையை ஹீரோ நிறுத்தியது. பிஎஸ்6-க்கு ஏற்ப அப்டேட் செய்வதில் இருந்த சில இடையூறுகளினால் இந்த நடவடிக்கையை ஹீரோ கையில் எடுத்தது. தற்போது பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட விதிமுறைகளும் கடந்த 2023 ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துவிட்ட சூழலில், ஹீரோ பேஷன் பிளஸ் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

ஹீரோ பேஷன் பிளஸில் 97.2சிசி, சிங்கிள்-சிலிண்டர் 'ஸ்லோபர்' என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஒபிடி-2 இணக்கமானதாகவும், இ20 எரிபொருளை ஏற்கக்கூடியதாகவும் மேம்படுத்தப்பட்டு பொருத்தப்பட்டுள்ள இந்த என்ஜினில் ஹீரோவின் ஐ3எஸ் ஸ்டார்ட்/ஸ்டாப் தொழிற்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 8 எச்பி மற்றும் 8.05 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை இந்த என்ஜின் வெளிப்படுத்தக்கூடியது.

hero passion plus launched

இதே 97.2சிசி என்ஜின் தான் எச்.எஃப் மற்றும் ஸ்பிளெண்டர் என மொத்தம் 5 ஹீரோ பைக்குகளிலும் வழங்கப்படுகிறது. பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பர்களும் பொருத்தப்பட்டுள்ளன. புதிய பேஷன் பிளஸ் பைக்கின் எடை 115 கிலோ ஆகும். இதுதான் இருப்பதிலேயே எடைமிக்க 100சிசி ஹீரோ பைக்காக விளங்குகிறது.

பைக்கை நிறுத்தும் பிரேக் பணியை முன் மற்றும் பின் சக்கரங்களில் பொருத்தப்பட்டுள்ள 130மிமீ டிரம் பிரேக்குகள் கவனித்து கொள்கின்றன. புதிய பேஷன் பிளஸ் பைக்கில் காஸ்ட் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த சக்கரங்களில் 80/100-18 என்ற அளவு கொண்ட ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. 3 விதமான நிறங்களுள் ஒன்றில் இந்த புதிய ஹீரோ பைக்கை வாங்கலாம்.

hero passion plus launched

தொழிற்நுட்ப அம்சங்களாக செல்ஃப் ஸ்டார்ட், டிஜிட்டல் அனலாக் திரை மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. புதிய ஹீரோ பேஷன் பிளஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.76,065 ஆகும். எடை மிகுந்தது மட்டுமின்றி, ஹீரோவின் விலைமிக்க 100சிசி பைக்கும் இதுதான். விற்பனையில் இந்த பைக்கிற்கு ஹோண்டா ஷைன் மற்றும் பஜாஜ் பிளாட்டினா உள்ளிட்டவை போட்டியாக உள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சில தினங்களுக்கு முன்னர்தான் 2023 எச்.எஃப் டீலக்ஸ் பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது பேஷன் பிளஸ் பைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் பைக்குகள் விற்பனையில் ஸ்பிளெண்டர் மற்றும் எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகளினால் ஹீரோவின் கை ஓங்கியுள்ளது. புதிய பேஷன் பிளஸ் பைக்கின் அறிமுகத்தினால் ஹீரோவின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்க உள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, June 8, 2023, 14:46 [IST]
English summary
Hero passion plus motorcycle launched after 3 years
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X