சே... காலையிலேயே இப்படி ஒரு சோகமான செய்தியா! இந்த பைக்கை விற்பனையில் இருந்து ஹீரோ வெளியேத்திடுச்சா!!
இந்திய இருசக்கர வாகன உலகின் முன்னணி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp)-இன் பிரபலமான பைக் மாடலாக பேஷன் ப்ரோ (Passion Pro) இருக்கின்றது. இந்த பைக் மாடலையே நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் இருந்து அகற்றி இருப்பதாக தற்போது அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
நிறுவனத்தின் இந்த செயல் பேஷன் ப்ரோ விற்பனையில் வெளியேற்றம் செய்யப்பட்டு இருப்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுகுறித்த தகவலே தற்போது வாகன உலகில் பெரும் பேசு பொருளாக மாறி இருக்கின்றது. சத்தமே இல்லாமல் இந்த செயலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் செய்திருக்கின்றது.

இதனால், பேஷன் ப்ரோ ரசிகர்கள் பெருத்த சோகத்தில் ஆழ்ந்திருக்கின்றனர். ஏழை, எளிய மக்களின் பிரியமான இருசக்கர வாகனமாக இந்த ஹீரோ பேஷன் ப்ரோ இருக்கின்றது. இதையே தற்போது சந்தையில் விற்பனையில் இருந்து ஹீரோ நிறுவனம் அகற்றி இருக்கின்றது. அதேநேரத்தில், ஹீரோ நிறுவனம் பேஷன் ப்ளஸ் மற்றும் பேஷன் எக்ஸ்டெக் ஆகியவற்றை இன்னும் இந்தியாவில் தக்க வைத்திருக்கின்றது.
ஆம், பேஷன் ப்ரோ வெளியேற்றம் செய்யப்பட்டு இருந்தாலும், இந்த இரண்டும் இப்போதும் சந்தையில் விற்பனையில் இருக்கின்றன. இவையும் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த மலிவு விலை டூ-வீலர்கள்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. பேஷன் ப்ரோ இந்தியாவில் 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனைச் செய்யப்பட்டு வந்தது.

இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். இவ்வளவு குறைவான ஆரம்ப விலையில் இது விற்பனைக்குக் கிடைத்த காரணத்தினாலேயே அடித்தட்டு மக்களின் மனம் கவர்ந்த வாகனமாக இது இருந்தது. ஆனால், இனி பேஷன் ப்ரோ சந்தையில் விற்பனைக்குக் கிடைக்காது. ஒட்டுமொத்தமாக இரு விதமான தேர்வுகளில் இது விற்பனைக்குக் கிடைத்து வந்தது.
டிரம் மற்றும் டிஸ்க் ஆகியவையே அவை ஆகும். பேஷன் ப்ரோ ஓர் 110 சிசி மோட்டார்சைக்கிள் ஆகும். இதில் 113.2 சிசி திறனை வெளியேற்றக் கூடிய சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டது. இந்த மோட்டாரால் 9.02 பிஎச்பி பவரையும், 9.89 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும்.
ஒரு லிட்டருக்கு இந்த பைக் 68.21 கிமீ மைலேஜ் தரும். இதுதவிர நீடித்து உழைக்கும் திறன் கொண்டதும்கூட. எனவேதான் இந்த வாகனம் இப்போதும் பலரின் மனதில் இடம் பிடித்திருக்கின்றது. ஆனால், இதனை எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி ஹீரோ மோட்டோகார்ப் வெளியேற்றம் செய்திருக்கின்றது.
தொழில்நுட்பத்தில் லேசான பின் தங்கிய இருசக்கர வாகனமாக பேஷன் வரிசையில் இது இருந்தது. இதன் காரணத்தினால் இதனை வெளியேற்றியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனம் டிஜிட்டல் வசதிகளை அதிகமாக தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதன் அடிப்படையிலேயே பேஷன் எக்ஸ்டெக்-ஐ இந்திய சந்தையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
பேஷன் ப்ரோவில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே மோட்டாரே இதிலும் இடம் பெற்றிருக்கின்றது. ஆனால், அதில் இடம் பெற்றிராத டெக்னாலஜிக்கள் பல பேஷன் எக்ஸ்டெக்கில் இடம் பெற்றிருக்கின்றன. குறிப்பாக, எல்இடி ஹெட்லைட், முழு டிஜிட்டல் கன்சோல், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட திரை மற்றும் யுஎஸ்பி சார்ஜிங் பாயிண்ட் என ஏகப்பட்ட வசதிகள் இந்த டூ-வீலரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் டிஜிட்டல் திரை வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுந்தகவல்கள் என அனைத்தையும் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 80,038 ஆகும். இந்த தேர்வைக் காட்டிலும் சற்று விலைக் குறைவான மற்றும் சிறப்பம்சங்கள் குறைவான தேர்வாக பேஷன் பிளஸ் இருக்கின்றது.
செமி டிஜிட்டல் க்ளஸ்டர் யுஎஸ்பி சார்ஜிங் போர்ட் மற்றும் சைடு ஸ்டாண்டு போட்டிருந்தால் எஞ்ஜினை ஆஃப் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் மோட்டாரும் திறன் குறைவான ஒன்றே ஆகும். 97.2 சிசி திறனை வெளியேற்றக் கூடிய எஞ்ஜினே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதனால் 7.91 பிஎச்பியையும், 8.05 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பேஷன் ப்ரோவை விற்பனையில் இருந்து அகற்றி இருப்பது பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது. இதன் வெளியேற்றம் இருசக்கர வாகன பிரியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த வாகன உலகிற்குமே பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. அதேவேளையில், இதனை அப்டேட் செய்து நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








