விலையை ஏத்த போறாங்க.. சீக்கிரம் இன்னைக்கே வாங்கிடுங்க! இல்லனா பெரிய தொகையை கொடுக்க வேண்டி இருக்கும்!

இந்தியாவில் புதிய வாகனங்களின் விலை தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. குறிப்பாக, கோவிட் நோய் தொற்றுக்கு பின்னர் மாபெரும் விலை உயர்வை வாகன உலகம் சந்தித்து இருக்கின்றது. இதன் விளைவாக பட்ஜெட் விலையில் விற்பனைக்குக் கிடைத்து வந்த வாகனங்கள்கூட தற்போது காஸ்ட்லியான வாகனங்களாக மாறி உள்ளன.

இவை காஸ்ட்லியாகும் நிலை இப்போதும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக முன்னணி இருசக்கர வாகன நிறுவனம் ஒன்று வெகு விரைவில் அதன் தயாரிப்புகள் சிலவற்றின் விலையை உயர்த்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமே அது ஆகும்.

Hero price hike

இதுவே வெகு விரைவில் தனது முக்கிய இருசக்கர வாகன மாடல்கள் சிலவற்றின் விலையை உயர்த்த இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை (ஜூலை 3) முதலே நிறுவனத்தின் டூ-வீலர்களின் விலைகள் உயர்த்தப்பட இருக்கின்றன. உலகின் மிகப் பெரிய இருசக்கர வாகனமான உற்பத்தி நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகின்றது.

இந்த நிறுவனம் அதன் தயாரிப்புகளின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்திருப்பது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. குறிப்பாக, பட்ஜெட் இருசக்கர வாகன விரும்பிகளை இந்த தகவல் பெருத்த கலக்கத்தில் ஆழ்த்தும் வகையில் அமைந்து உள்ளது என்றே கூறலாம்.

Hero splendor plus canvas

நிறுவனம் சுமார் 1.5 சதவீதம் வரை விலையை உயர்த்த இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்கள் என அனைத்தின் விலையும் உயர்த்தப்பட உள்ளது. மாடல்கள் மற்றும் தேர்வுகளைப் பொருத்தே விலை உயர்வு செய்யப்பட இருக்கின்றது. மிக சமீபத்திலேயே இந்த நிறுவனம் அதன் தயாரிப்புகள் சிலவற்றின் விலையை உயர்த்தியது.

துள்ளியமாகக் கூற வேண்டும் என்றால் ஏப்ரல் மாதத்திலேயே ஹீரோ அதன் இருசக்கர வாகனங்களின் விலையை உயர்த்தியது. இதற்கு மத்திய அரசு புதிதாக அமல்படுத்திய ஓபிடி-2 விதியை நிறுவனம் காரணமாக கூறியது. இந்த நிலையிலேயே இப்போது மீண்டும் விலை உயர்வைச் செய்திருக்கின்றது, ஹீரோ மோட்டோகார்ப்.

Price hike

இதற்கு வாகன கட்டுமான செலவு அதிகமாகி இருப்பதை நிறுவனம் காரணமாக கை காட்டி இருக்கின்றது. இதுபோன்று ஒவ்வொரு முறையும் நிறுவனங்கள் தங்களின் விலை உயர்வை நியாயப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், இதனால் நடுத்தர வர்க்க மக்கள் அதிகளவில் பாதிப்படைவதைதான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

அதேவேளையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விலை உயர்வால் ஏற்பட்டு இருக்கும் சுமையை குறைக்க ஃபைனான்ஸ் திட்டங்கள் வாயிலாக சிறப்பு சலுகைகளை வழங்கும் முயற்சியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைவான வட்டி, கேஷ்பேக் அல்லது விலை தள்ளுபடியை இதன் வாயிலாக ஹீரோ வழங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹீரோவின் விலை உயர்வு நடவடிக்கையால் பட்ஜெட் இருசக்கர வாகன பிரியர்களின் விருப்பமான டூ-வீலர் மாடலான ஸ்பிளெண்டரின் விலையும் மிகக் கடுமையாக உயர இருக்கின்றது. இதுதவிர, எக்ஸ்ட்ரீம், ஜூம் உள்ளிட்ட ஹீரோவின் பிற முக்கிய தயாரிப்புகளின் விலையும் கணிசமான அளவில் உயர்த்தப்பட இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் மலிவு விலை மற்றும் குறைவான பராமரிப்பு செலவை வழங்கக் கூடிய டூ-வீலராக ஸ்பிளெண்டர் இருக்கின்றது. இதன் விலையும் தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணம் இருக்கின்றது. ஆகையால், விரைவில் இந்த பைக் எளிய மக்களுக்கு எட்டக் கனியாக மாறிவிடுமோ என்கிற அச்சம் தற்போது நம்மிடையே எழும்பி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Sunday, July 2, 2023, 8:30 [IST]
English summary
Hero planning to hike price from july 3 here is full details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X