ஓலாவுக்கு ஆப்பு வைக்க தயாராகும் ஹீரோ... இனி இவங்க ரெண்டு பேருக்கும் தான் போட்டியே!
ஹீரோ நிறுவனம் அதிகமான இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் இந்தியாவின் ஒரு முன்னணி நிறுவனம். இந்நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாகப் பெரிய அளவில் வளர்ச்சியடையவில்லை குறிப்பாக ஸ்கூட்டர் செக்மெண்டில் இந்நிறுவனம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்நிறுவனத்தின் பல தயாரிப்புகளை மக்கள் பெரும் அளவில் ரசிக்கவில்லை. இதனால் போட்டியாளர்களுக்கு கடும் போட்டியை வழங்க இந்நிறுவனம் திணறி வருகிறது.
இந்நிலையில் ஹீரோடோ மோட்டோ கார்ப் நிறுவனம் எமர்ஜிங் மொபிலிட்டி பிஸ்னஸ் யூனிட் என்ற தனிப் பிரிவை உருவாக்கி இந்த பிரச்சனையைச் சரி செய்ய அந்த குழுவை பணியாற்ற நியமித்தனர். இந்த குழுவின் தலைவராக ஸ்வதேஷ் ஸ்ரீ வத்சவா என்பவர் இருக்கிறது. இந்நிலையில் இந்த குழுவின் சார்பில் ஹீரோ பிராண்டில் அடுத்த 24 மாதங்களில் ஏராளமான எகலெக்ட்ரிக் டூவீலர்களை களம் இறக்க முடிவு செய்துள்ளது.

இந்நிறுவனம் வெளியிடும் புதிய எலெக்டரிக் டூவீலர்கள் மாஸ் மார்கெட் மற்றும் பிரிமியம் செக்மெணட்டில் களம் இறக்கவுள்ளது. இது பைக், ஸ்கூட்டர் மற்றும் இரண்டு வகை வாகனங்களுக்கும் பொருத்தும். இந்நிறுவனம் ஏற்கனவே விடா வி1 எலெக்டரிக் ஸ்கூட்டரை டில்லி, பெங்களூரு, மற்றும் ஜெய்பூர் ஆகிய நகரங்களில் அறிமுகப்படுத்தி விற்பனை செய்து வருகிறது. இதன் விற்பனையை அடுத்தடுத்த சில மாதங்களில் பிற நகரங்களுக்கு விஸ்தரிப்பு செய்யவுள்ளது. அடுத்த 3 மாதங்களிலேயே பெரும்பாலான நகரங்களில் இந்த ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட இடங்களில் இந்த விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. மக்கள் பலர் இந்த ஸ்கூட்டரை வாங்கி வருகின்றனர். இது படிப்படியாகப் பிற நகரங்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டால் விற்பனை படு ஜோராக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தான் அந்நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளுக்கான திட்டத்தை வகுத்துவிட்டதாக அதன் தலைவர் ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார்.
அடுத்த 24 மாதங்களில் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சியைச் சந்திக்கப்போகிறது என எதிர்பார்ப்பதாகவும், இதற்காகப் பல தயாரிப்புகளை வரிசையாக வெளியிட முடிவு செய்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் இந்தியா முழுவதும் அடுத்த பெரிய பிராண்டிலிருந்து வரிசையாக எலெக்ட்ரிக் வாகன லைன்அப்களை எதிர்பார்க்கலாம்.
இந்நிறுவனம் ஏற்கனவே வெளியிட்ட விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பொருத்தவரை பஜாஜ் சேதக், டிவிஎஸ் ஐ-க்யூப், ஓலா எஸ்1 ப்ரோ, ஆகிய வாகனங்களுக்குப் போட்டியாக விற்பனையாகிறது. மேலும் இந்நிறுவனம் அடுத்தடுத்த லைன் அப்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வரும் நிலையில் இதே ஐடியாவில் தான் ஓலா நிறுவனமும் இருக்கிறது. இந்த இரு நிறுவனங்களும் வரிசையாகத் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினால் எதிர்காலத்தில் இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கலாம்.
ஹீரோ நிறுவனம் அறிமுகப்படுத்திய விடா வி1 ஸ்கூட்டரை பொருத்தவரை 95 கி.மீ ரேஞ்ச் கொண்ட ஸ்கூட்டராகும். இது அதிகபட்சமாக 80 கி.மீ வேகம் வரைபயணிக்கும். இந்த ஸ்கூட்டரின் முக்கியமான அம்சமே இதன் பிக்கப் தான் இது 0-40 கி.மீ வேகத்தை வெறும் 3.2 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது.


Click it and Unblock the Notifications








