பொம்மை பைக்குகள் கூட இத்தனை இலட்சம் விற்பனையாகாது!! ஹீரோ ஸ்பிளெண்டரை வாங்க ஷோரூம்களில் பயங்கர கூட்டம்!

இந்தியா எப்போதுமே 2-வீலர்களுக்கான சந்தை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. ஏனெனில், நம் நாட்டில் கார்களை வாங்குபவர்களை விட பைக்குகளையும், ஸ்கூட்டர்களையும் வாங்குவோரே அதிகம். இதனை மீண்டும் நமக்கு உறுதிப்படுத்தும் வகையில், கடந்த அக்டோபர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக இலட்ச கணக்கில் 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவில் அதிகளவில் விற்பனையாகும் 2-வீலர் என்றாலே அது ஹீரோ ஸ்பிளெண்டர் தான். ஒவ்வொரு மாதத்திலும் எளிதாக 3 -4 இலட்சங்கள் விற்பனையாகக்கூடிய இந்த ஹீரோ பைக் கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 3,11,031 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டு இதே அக்டோபர் மாதத்தில் வெறும் 2,61,721 ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

hero splendor most selling two-wheeler

இந்த வகையில், 2022 அக்டோபரை காட்டிலும் கடந்த 2023 அக்டோபரில் சுமார் 49,310 ஸ்பிளெண்டர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை 18.84% அதிகரித்துள்ளது. ஆனால், இதற்கு முந்தைய 2023 செப்டம்பர் மாதத்தில் 3,19,692 ஸ்பிளெண்டர் பைக்குகளை ஹீரோ விற்பனை செய்திருந்தது.

இந்த வகையில், கடந்த மாதத்தில் 8,661 ஸ்பிளெண்டர் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்து 2வது இடத்தில் வழக்கம்போல் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் உள்ளது. ஹோண்டா நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 2,18,856 ஆக்டிவா ஸ்கூட்டர்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது.

hero splendor most selling two-wheeler

2022 அக்டோபரை காட்டிலும், கடந்த அக்டோபரில் 8,233 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் அதிகமாகவும், 2023 செப்டம்பரை விட 16,200 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் குறைவாகவும் கடந்த அக்டோபர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்து, 3வது இடத்திலும் ஹோண்டா தயாரிப்பான ஹோண்டா ஷைன் பைக் உள்ளது.

ஹோண்டா ஷைன் பைக்குகளின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 1,63,587 ஆகும். ஆனால், 2022 அக்டோபரில் வெறும் 1,30,916 ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. இந்த வகையில், இந்த விலை குறைவான ஹோண்டா பைக்கின் விற்பனை எண்ணிக்கை ஆனது 32,671 யூனிட்கள் அதிகரித்துள்ளது. ஹோண்டா ஷைனை மிக நெருக்கமாக நெருங்கியவாறு 4வது இடத்தில் பஜாஜ் பல்சர் உள்ளது.

hero splendor most selling two-wheeler

ஏனெனில், கடந்த மாதத்தில் மொத்தம் 1,61,572 பல்சர் பைக்குகளை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனை செய்துள்ளது. பஜாஜ் பல்சர் பைக்குகள் விற்பனையில் இது அசூர வளர்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில், வழக்கமாக பல்சர் பைக்குகள் ஒவ்வொரு மாதத்திலும் 1 இலட்சம் - 1.20 இலட்சம் என்ற அளவிலேயே விற்பனையாகும். ஆனால், கடந்த மாதத்தில் 1.60 இலட்சத்தை கடந்துள்ளது.

5வது மற்றும் 6வது இடங்களில் ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் மற்றும் டிவிஎஸ் ஜூபிட்டர் உள்ளன. இவை இரண்டின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 1,17,719 மற்றும் 91,824 ஆகும். ஆனால், இவை இரண்டும் கடந்த 2022 அக்டோபர் மாதத்தில் 77 ஆயிரம் & 78 ஆயிரம் என்ற எண்ணிக்கையிலேயே விற்பனையாகி இருந்தன. அடுத்த 4 இடங்களில் பஜாஜ் பிளாட்டினா (74,539), சுஸுகி ஆக்ஸஸ் (56,909), டிவிஎஸ் எக்ஸ்.எல் (53,162) மற்றும் டிவிஎஸ் ஜூபிட்டர் (47,483) உள்ளன.

hero splendor most selling two-wheeler

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஒரே மாதத்தில் சுமார் 3 இலட்சத்திற்கும் அதிகமான ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை என்பது உண்மையில் மலைக்க வைக்கக்கூடிய விஷயாகும். இருப்பினும், யானைக்கும் அடி சறுக்கும் என்பதுபோல், ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை கடந்த செப்டம்பரை காட்டிலும் கடந்த அக்டோபரில் குறைந்துள்ளது. இந்த நவம்பர் மாதத்தில் இதில் எத்தனை 2-வீலர்கள் இந்த டாப்-10 லிஸ்ட்டில் இடம்பிடிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 17, 2023, 11:51 [IST]
English summary
Hero splendor most selling two wheeler in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X