ஹீரோ இப்படி ஒரு பைக்கை அறிமுகம் செய்யப்போவதாக அறிவிக்கவே இல்லையே.. டுகாட்டி பைக்குகளுக்கே டஃப் கொடுக்கும் போல!

உலக புகழ் பெற்ற மோட்டார் ஷோ (Motor Show)-க்களில் ஒன்றான 2023 இஐசிஎம்ஏ (2023 EICMA) வெற்றிகரமாக இத்தாலியின் மிலன்-இல் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றது. இந்த ஷோவில் உலகின் முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தியாளர்கள்பலர் கலந்துக் கொண்டு தங்களின் புதிய மற்றும் வருங்கால வாகனங்களைக் காட்சிப்படுத்தி வருகின்றன.

அந்தவகையில், இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ (Hero)-வும், இந்த உலக புகழ்பெற்ற மோட்டார் ஷோவில் பங்கு பெற்று தன்னுடைய புதிய தயாரிப்புகள் சிலலற்றைக் காட்சிப்படுத்தி இருக்கின்றது. அந்தவகையில், 1 எலெக்டரிக் ஸ்கூட்டர் உட்பட மொத்தம் 3 ஸ்கூட்டர் மாடல்களை ஹீரோ நிறுவனம் நேற்றைய தினம் காட்சிப்படுத்தியது.

Hero 2 5r xtunt front view

ஏற்கனவே இந்த வாகனங்களை தான் இத்தாலி மிலன் ஷோவில் காட்சிப்படுத்துவதாக அது டீசர் படங்களை வெளியிட்டிருந்தது. இதனைத் தொடர்ந்தே, அதனை நிறுவனம் அந்த ஷோவில் வெளியீடு செய்தும் காட்டியது. இதைத்தொடர்ந்து, தான் அறிவிக்காத சில புதுமுக இருசக்கர வாகன மாடல்களையும் ஹீரோ மோட்டோகார்ப் 2023 இஐசிஎம்ஏ-இல் காட்சிப்படுத்தத் தொடங்கி இருக்கின்றது.

அந்தவகையில், யாரும் எதிர்பார்த்திராத வெளியீடாக ஹீரோ 2.5ஆர் எக்ஸ்டன்ட் (Hero 2.5R XTUNT) வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. நிறுவனத்தின் புகழ்பெற்ற மோட்டார்சைக்கிள் மாடலான எக்ஸ்ட்ரீம் 210ஆர் பைக்கை தழுவி உருவாக்கப்பட்ட ஓர் மோட்டார்சைக்கிளே இது ஆகும். மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் மற்றும் அட்டகாசமான சிறப்பம்சங்களைத் தாங்கிய வாகனமாக இதனை ஹீரோ தயார் செய்திருக்கின்றது.

Hero 2 5r xtunt

அட்வென்சர் பயணத்தை அதிகம் விரும்புவோர்க்கு ஏற்ற தோற்றத்திலேயே இந்த பைக்கை ஹீரோ மோட்டோகார்ப் தயார் செய்திருக்கின்றது. இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றால், காட்டு மிராண்டி எனும் சொல்லும் அளவிற்கு மிகவும் ஆக்ரோஷமான தோற்றம் கொண்டதாகவே இந்த பைக்கிற்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பைக்கின் வாயிலாக தன்னால் மிகவும் தனித்துவமான வாகனங்களைகூட தயாரிக்க முடியும் என்பதை ஹீரோ மோட்டோகார்ப் வெளிக்காட்டி இருக்கின்றது. இது ஓர் கான்செப்ட் மாடல் ஆகும். இது விற்பனைக்குக் கொண்டு வரப்படுமா? இதன் உற்பத்தி பணிகள் மேற்கொள்ளப்படுமா என்பது என்கிற எந்த தகவலும் இதுவரை வெளியிடப்படவில்லை.

Hero 2 5r xtunt side view

இருப்பினும், பலருடைய கவனத்தையும், எதிர்பார்ப்பையும் இப்போதே இந்த பைக் கவர தொடங்கிவிட்டது. இதற்கு காரணம் இந்த பைக்கின் மிருகத் தனமான தோற்றம்தான். முற்றிலும் மாறுபட்ட முகப்பு பகுதியை இந்த பைக்கிற்கு ஹீரோ கொடுத்திருக்கின்றது. வழக்கமான ஹெட்லைட்டுகளுக்கு பதிலாக சூப்பர் ஹீரோக்களின் மாஸ்க் போன்ற அமைப்பிலேயே ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

குறிப்பாக, இருக்கை அந்தரத்தில் நிற்பதைப் போல் இருக்கின்றது. பின்னிருக்கையில் அமர்ந்தால் அவர் மட்டும் தனியாக அந்தரத்தில் நின்றுக் கொண்டு வருவதைப் போல இருக்கும். இத்தகைய மாறுபட்ட அமைப்புடைய தோற்றத்திலேயே இருக்கைகள் உள்ளன. இதுதவிர இதன் சேஸிஸும் புத்தம் புதிய ஸ்டைலில் காட்சியளிக்கின்றது.

ஆகையால், இந்த பைக்கை ஓட்டும்போது மட்டுமல்ல, அதன் பக்கத்தில் போய் நின்றாலே ஓர் வைப்பான அனுபவம் கிடைக்கும் என தெரிகின்றது. ஹீரோ இந்த பைக்கை உற்பத்திச் செய்யும் எனில் இந்த அளவு முரட்டுத் தனம் இல்லாமல் கொஞ்சம் சாஃப்டான பைக்காகவே தயாரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக, இலகு ரக சேஸிஸ், பவர் ஃபுல் எஞ்ஜின் மற்றும் அட்வான்ஸ்டு டெக்னாலஜியைக் கொண்ட தயாரிப்பாக இது இருக்கும் என நிறுவனம் உத்தரவாதம் அளித்து இருக்கின்றது. கரிஸ்மா (Karizma) பைக்கில் இடம் பெற்றிருக்கும் மெக்கானிக்கல் அம்சங்களே இந்த பைக்கிலும் வழங்கப்பட்டு இருக்கின்றன.

தங்க நிறம் கொண்ட யுஎஸ்டி ஃபோர்க், மோனோஷாக் சஸ்பென்ஷன், கொழு கொழுத்த தோற்றம் கொண்ட டயர்கள், ஃபேன்சியான அலாய் வீல்கள், உலோக குவார்டு என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. எஞ்ஜினைப் பொருத்தவரை இந்த கான்செப்ட் மாடலில் 210 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு, 4 வால்வுகள் கொண்ட டிஓஎச்சி மோட்டாரே பொருத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்ஜின் 25 எச்பி திறனை வெளியேற்றக் கூடியதாகும். 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த எஞ்ஜின் உடன் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோன்றும் இன்னும் பல திறன் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது விற்பனைக்கு வருகின்ற நாள் மற்றும் பிற முக்கிய விபரங்களை ஹீரோ வெளியிடவில்லை.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக் விற்பனைக்கு வருமா என்பது சற்று சந்தேகமாக இருப்பதாக ஒரு சிலர் கருத்து தெரிவித்து இருக்கின்றனர். இதன் டிசைனே சாத்தியமற்றது என தெரிவிக்கின்றனர். இருப்பினும், இந்த பைக் விற்பனைக்கு வருவதற்கான சாத்தியக் கூறுகள் இருப்பதாக மற்றுமொரு தரப்பு கூறுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹீரோவின் புதிய மற்றும் இந்த 2.5ஆர் எக்ஸ்டண்ட் தோற்றத்துடன் ஒத்துப் போகக் கூடிய மோட்டார்சைக்கிள் ஸ்பை செய்யப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 8, 2023, 22:46 [IST]
English summary
Hero unveiles 2 5 r xtunt at 2023 eicma
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X