ஒரே நாள்ல 1780 கி.மீ ஓடிய விடா விட1 ஸ்கூட்டர்! கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்தது!

ஹீரோ நிறுவனத்தின் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது. 6 ரைடர்கள் சேர்ந்து ஜெப்பூரில் உள்ள அந்நிறுவனத்திற்குச் சொந்தமான டெஸ்டிங் டிராக்கில் இந்த சாதனையைச் செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களைக் காணலாம் வாருங்கள்.

ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்தியாவில் விடா என்ற விடா என்ற பிராண்டை எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனைக்காகத் துவங்கியுள்ளது. அதில் சமீபத்தில் விடா விட1 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் உள்ள மற்ற ஸ்கூட்டரிலிருந்து சற்று வித்தியாசமானதாக இருக்கிறது.

hero vida v1 guinness world record

இந்நிலையில் ஹீரோ நிறுவனம் இந்த ஸ்கூட்டரை தொடர்ந்து 24 மணி நேரம் 6 ரைடர்களை வைத்து 1780 கி.மீ ஓட்டி புதிய கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளது. இந்தச்சாதனையை அந்நிறுவனத்திற்குச் சொந்தமான ஜெயப்பூர் டெஸ்டிங் டிராக்கில் செய்துள்ளது. இதற்கு முன்பு செய்யப்பட்ட சாதனையை விட 350 கி.மீ அதிகம் ரைது செய் 24 மணி நேரம் தொடர்ந்து ஓட்டி ஹீரோ நிறுவனம் பழைய சாதனையை முறியடித்து புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

ஹீரோ விடா வி1 ஸ்கூட்டரை பொருத்தவரை ரிமூவபிள் பேட்டரி ஆப்ஷனை கொண்டுள்ளது. மேலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரிலேயே சிறந்த பெர்ஃபாமென்ஸ், ரேஞ்ச், மற்றும் டாப் ஸ்பீடு ஆகியவற்றைக் கொண்ட சிறந்த ஸ்கூட்டராக இது இருக்கிறது. இது மழை, வெயில் என எந்த விதமான சுலபமாகச் செல்லும் திறன் கொண்டது.

hero vida v1 guinness world record

இந்த சாதனைக்காக மொத்தம் 6 ரைடர்கள் பயன்படுத்தப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதம் 20ம் தேதி காலை 6.45 மணிக்கு இந்த சாதனைக்கான ரைடிங் துவங்கியது. ரிலே முறையில் இந்த ரைடிங் நடத்தப்பட்டது. ஏப்ரல் 21ம் தேதி அதிகாலை 2 மணிக்கே இதற்கு முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டது. இந்த சாதனை 21ம் தேதி அதிகாலை 6.45 மணிக்கு கடைசிலேப் முடித்து வைக்கப்பட்டது.

பேட்டரி சார்ஜ் தீரத் தீர பேட்டரி மாற்றப்பட்டது. இதற்கு வெறும் 20 நொடிகள் மட்டுமே ஸ்கூட்டர் நிறுத்தப்பட்டது. புதிய பேட்டரி பொருத்தப்பட்டதும், ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்து ரைடிங்கை துவங்கி விடுவார்கள். சார்ஜ் தீர்ந்த பேட்டரி மீண்டும் சார்ஜ் ஏற சென்றுவிடும். இப்படியாகத் திட்டமிட்டு இந்த சாதனையை வெற்றிகரமான செய்துள்ளது ஹீரோ நிறுவனம்.

இது குறித்து அந்நிறுவனத்தின் எமர்ஜிங் மொபிலிட்டி பிஸ்னஸ் யூனிட் தலைவர் சுவதேஷ் ஸ்ரீவத்சவா கூறும் போது: "விடா வி1 ஸ்கூட்டர் தற்போது ஃபெர்பாமென்ஸ் மற்றும் நல்ல உழைப்பிற்கான உலக சாதனையைப் படைத்துள்ளது. இது இந்த கேட்டகிரியில் வளர்ச்சியையும் அதிக பெர்ஃபாமென்ஸ் வாகனங்களைத் தயாரிக்க முடியும் என்பதையும் காட்டுகிறது. " என்றார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை பெரியதாகி வரும் நிலையில் மக்களுக்குச் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் மற்றும் நன்றாக உழைக்கும் ஸ்கூட்டாராக விடா வி1 இருக்கிறது என்பதைக் காட்ட இந்த சாதனையை ஹீரோ நிறுவனம் செய்துள்ளது. இதனால் அந்த ஸ்கூட்டருக்கு மார்கெட்டில் நல்ல பெயர் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, May 11, 2023, 9:56 [IST]
English summary
Hero vida v1 guinness world record 1780 km team relay in 24 hours
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+