ஹீரோ கிட்ட இதை யாருமே எதிர்பார்க்கல! 3 ஸ்கூட்டர் வரிசையா வந்துடுச்சு!
உலக புகழ் பெற்ற ஆட்டோமொபைல் கண்காட்சியான இஐசிஎம்ஏ(EICMA) கண்காட்சி தற்போது இத்தாலியில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 1 எலெக்டரிக் ஸ்கூட்டர் உட்பட மொத்தம் 3 ஸ்கூட்டர்களை ஹீரோ நிறுவனம் முதன் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இந்த வாகனங்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
ஹீரோ நிறுவனம் (Hero Motocorp) தற்போது இந்தியாவில் அதிகமான டூவீலர்களை தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனத்தின் மீது மக்கள் மிகப்பெரிய நம்பிக்கையை வைத்துள்ளனர். இதனால் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான டூவீலர்களை இந்நிறுவனம் தான் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இத்தாலியில் நடந்து வரும் இஐசிஎம்ஏ (EICMA Motorshow Italy) கண்காட்சியில் எனது மூன்று தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியது.

இதன்படி முதல் தயாரிப்பாக ஹீரோ ஜூம் 125 ஆர் (Xoom 125R) ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இது ஏற்கனவே ஹீரோ நிறுவனம் வெளியிடும் ஸூம் என்ற 110சிசி ஸ்கூட்டரின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக 125சிசி இன்ஜின் திறன் கொண்ட ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியுள்ளது. இதில் 14 இன்ச் அலாய் வீல், அட்வான்ஸ்டு எல்இடி லைட்டிங், சீக்னஷியல் எல்இடி லைட்டிங் உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் இருக்கிறது. இந்த ஸ்கூட்டருக்காக புதிய 125சிசி இன்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக இரண்டாவது தயாரிப்பாக இது ஸூம் ஸ்கூட்டரில் 160 (Xoom 160)சிசி திறன் கொண்ட புதிய ஸ்கூட்டரை காட்சிப்படுத்தியது. இதை புரொடக்ஷன் மாடலுக்கு முந்தைய மாடலாக தான் காட்சிப்படுத்தியது. இதில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. ஸ்கூட்டரின் டிசைன் போல்டாகவும் அக்ரஸிவாகவும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு துடிப்பான ஸ்கூட்டராக இருக்கும்படி கட்டமைத்துள்ளனர்.

இந்த ஸ்கூட்டரில் முக்கியமாக டூயல் சேம்பர் எல்இடி லைட் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 156 சிசி லிக்யூடு கூல்டு இஞ்சின் (Hero liquid Cooled Engine) வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 14 இன்ச் அலாய் வீல் ஸ்மார்ட் கீ அகலமான டயர்கள். பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருக்கும் உங்கள் பைக்கை கண்டுபிடிப்பதற்காக சிக்னல் கீ, உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் இதில் இருக்கிறது.
இதையெல்லாம் விட முக்கியமாக ஹீரோ நிறுவனம் தனது விடா பிராண்டில் உள்ள விடா வி1 ப்ரோ (Vida V1 Pro) என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (Electric Scooter) அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே விடா வி1 என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம்மாகி விற்பனையாகி வரும் நிலையில் விடா வி1 ப்ரோ என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தற்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இது எலக்ட்ரிக் ஸ்கூட்டரிலேயே கூபே ஸ்டைல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என அந்நிறுவனம் அழைக்கிறது.

இந்த விடா வி1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2ரிமூவபிள் பேட்டரி இருக்கிறது. பேட்டரியை தனியாக கழற்றி சார்ஜ் போட்டுக் கொள்ளலாம். இந்த ஸ்கூட்டரில் 7இன்ச் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் இருக்கிறது. இதில் பல்வேறு தகவல்களை நாம் காண முடியும். மேலும் இந்த ஸ்கூட்டரில் கஸ்டமைஸிபில் ரைடு மோடுகள் உள்ளது. ரைடர்களுக்கு தேவையானபடி மோடுகளை கஸ்டமைஸ் செய்து கொள்ளலாம். இதன் இன்போடெயின்மென்ட் சிஸ்டத்துடன் ஸ்மார்ட் ஃபோனை இணைக்கும் வகையில் கனெக்டிவிட்டி ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடா வி1 ப்ரோ ஸ்கூட்டர் முழுவதுமாக எல்இடி லைட்டிங் மூலம் செட் அப் செய்யப்பட்டுள்ளது. இதன் ஹெட்லைட் புரொஜெக்டர் ஹெட்லைடாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் கீலெஸ் என்ட்ரி வழங்கப்பட்டுள்ளது. இதன் சார்ஜரை பொறுத்தவரை போர்ட்டபிள் சார்ஜர் வழங்கப்பட்டுள்ளது. இந்த சார்ஜர் 0-80 சதவீத சார்ஜை வெறும் 5 மணி நேரம் 50 நிமிடத்தில் ஏற்றி விடும். மேலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பார்க்கிங் மோடு இருக்கிறது.

இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை விடா ஆப் மூலம் கண்ட்ரோல் செய்யும் ஆப்ஷனும் இருக்கிறது. உங்கள் செல்போனை ஸ்கூட்டர் உடன் இணைத்து பின்பு ஸ்கூட்டர் குறித்த பல தரவுகளை நீங்கள் செல்போன் ஆப்பிலேயே பெற்றுக் கொள்ள முடியும். இதன் மூலம் நீங்கள் இருந்த இடத்திலிருந்து உங்கள் ஸ்கூட்டரை நிர்வகிக்கலாம். தற்போது இது பல்வேறு ஸ்கூட்டர்களில் வந்துவிட்டது. அதேபோல ஹீரோ நிறுவனம் தனது விடா வி1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தியுள்ளது.
மேலும் இந்த ஸ்கூட்டரை ஹீரோ நிறுவனம் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் கூபே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என சொல்கிறது. இதற்கு முக்கியமான காரணம் இந்த ஸ்கூட்டரின் பின்பக்க சீட்டே தேவையில்லை என்றால் அதற்கான பின்பக்கம் சீட் இல்லாத கூப்பே வடிவிலான செட்டப் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரும் இங்கு காட்சிப்படுத்தப்பட்டது.

இது போக ஹீரோ நிறுவனம் இந்த நிகழ்ச்சியில் லின்க்ஸ் என்ற 82 கிலோ எடை கொண்ட குறைந்த எடை ஆஃப் ரோடு எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்கப் போவதாகவும் அறிவித்தது. அக்ரோ என்ற சிறுவர்களுக்கான எலக்ட்ரிக் பைக்கையும் அந்நிறுவனம் தயாரிக்கப் போவதாக அறிவித்திருந்தது. இதற்கான புகைப்படங்களை எல்லாம் அங்குள்ள ஸ்கிரீனில் வெளியிட்டிருந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இஐசிஎம்ஏ என்பது உலக அளவில் உள்ள ஆட்டோமொபைல் பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் நிகழ்ச்சியாகும். இங்கு ஹீரோ நிறுவனம் தன் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் இந்நிறுவனத்திற்கு ஒரு நல்ல பெயரை எடுத்து தரும் நிகழ்வாகவும். குறிப்பாக இதில் விழாவை என்ற மக்கள் எதிர்பார்க்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம் தான்.


Click it and Unblock the Notifications









