ஆக்டிவாவிற்கு ஆப்பு வைக்க களத்துக்கே வந்திருச்சு! அதிரடியாக தொடங்கியது ஹீரோ ஸும் ஸ்கூட்டரின் டெலிவரி பணிகள்..

ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு போட்டி அளிக்கும் விதமாக ஹீரோ மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் தரமான ஸ்கூட்டர் மாடலே ஸும். இந்த ஸ்கூட்டரின் டெலிவரி பணிகளே தற்போது இந்தியாவில் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவலை உறுதிப்படுத்தும் விதமாக ஸும் ஸ்கூட்டரை டெலிவரி செய்யும் படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. மும்பையின் மஹிமா பகுதியில் அமைந்துள்ள ஃபோர்ட் பாயிண்ட் ஆட்டோமோட்டிவ் (Fort Point Automotive) எனும் ஹீரோ இருசக்கர வாகன விற்பனையாளரே ஸும் ஸ்கூட்டர் டெலிவரி பணிகளை நாட்டில் முதல் முறையாக தொடங்கி இருக்கின்றார்.

ஹீரோ

இது ஓர் 110 சிசி ஸ்கூட்டர்

முற்றிலும் புதிய தோற்றத்தில் உருவாக்கப்பட்டு இருக்கும் ஸும், ஆக்டிவாவிற்கு மட்டும் இல்லைங்க ஹோண்டா டியோ, டிவிஎஸ் ஜுபிடர் உள்ளிட்ட ஸ்கூட்டர் மாடல்களுக்கும் போட்டியாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இது ஓர் 110 சிசி ஸ்கூட்டர் ஆகும். அதில், 110.9 சிசி திறனை வெளியேற்றக் கூடிய ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் அதிகபட்சமாக 7,250 ஆர்பிஎம்மில், 8.1 எச்பி பவரையும், 5,750 ஆர்பிஎம்மில் 8.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இதன் விலை கூட மலிவானதாகவே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. போட்டியாளர்களுக்கு கடுமையான சவாலை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக மிக குறைந்தபட்ச விலையாக 72 ஆயிரம் ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஆரம்ப நிலை வேரியண்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

ஹீரோ

ஆன்-ரோட்ல ரேட் கொஞ்சம் அதிகமா இருக்கும்

ஆன்-ரோடில் இன்னும் சில ஆயிரங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கும். இதன் உச்ச நிலை வேரியண்டின் விலையே ரூ. 80 ஆயிரமாக மட்டுமே இருக்கின்றது. இதுவும் எக்ஸ்-ஷோரூம் விலை என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹீரோ ஸும் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். எல்எக்ஸ் (LX), விஎக்ஸ் (VX) மற்றும் இசட்எக்ஸ் (ZX) ஆகியவையே அவை ஆகும்.

கொழு கொழு டயர்

இதில், எல்எக்ஸ் மாடலைத் தவிர விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய இரு வேரியண்டுகளில் மட்டும் அதிக குண்டான டயர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. வேறு எந்த மலிவு விலை ஸ்கூட்டர்களிலும் இந்த அளவு குண்டான டயரை பார்ப்பது மிகவும் அரிது. ஆக சிறந்த கிரிப்னஸை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த வசதியை நிறுவனம் வழங்கி இருக்கின்றது. அதேவேளையில், டிஸ்க் பிரேக் வசதியை இசட்எக்ஸ் தேர்வில் மட்டுமே ஹீரோ வழங்குகின்றது.

ஹீரோ

ப்ளூடூத் வச்சு இணைச்சுக்கலாம்

ஸும் ஸ்கூட்டரின் மோட்டாரில் சிறப்பு வசதியாக ஐடில் ஸ்டார்ட் - ஸ்டாப் வசதி சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சம் எரிபொருள் சிக்கனத்திற்கு உறுதுணையாக இருக்கும். இத்துடன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், ப்ளூடூத் இணைப்பு வசதி உடன் கூடிய பெரிய திரை ஒன்றும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமில்லைங்க மிக முக்கியமான அம்சமான எக்ஸ்டெக் இணைப்பு அம்சமும் இதன் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இதுதவிர, சைடு ஸ்டாண்டு போட்டால் எஞ்ஜினைக் கட்-செய்யும் அம்சமும் புதிய ஹும் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த இருசக்கர வாகனத்தை ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகளில் பெற்றுக் கொள்ள முடியும்.

அவை:

  • மேட் ஆப்ரக்ஸ் ஆரஞ்ச்
  • கருப்பு
  • ஸ்போர்ட்ஸ் ரெட்
  • போல்ஸ்டர் ப்ளூ
  • பேர்ல் சில்வர் ஒயிட்
ஹீரோ

ஹீரோ நிறுவனம் இந்த வாகனத்தை இதுவரை தான் தயாரித்திராத ஓர் டூ-வீலராக உருவாக்கி இருக்கின்றது. இதற்கு ஸ்கூட்டரின் முகப்பு பகுதியே சான்றாக இருக்கின்றது. 'ப' வடிவத்திலான லைட், லைட்டிற்கு மேல் பக்கத்தில் கருப்பு நிற பேனல் மற்றும் கீழ் நோக்கி பார்ப்பது போன்ற ஸ்டைலில் இன்டிகேட்டர்கள் என எக்கசக்க சிறப்பு வசதிகளை ஸும் பெற்றிருக்கின்றது.

செல்போனை சார்ஜ செஞ்சுக்கலாம்

இதுதவிர, பூட் பகுதியில் லைட், செல்போன் சார்ஜர், குளோவ் பாக்ஸ் போன்ற அம்சங்களையும் ஹீரோ ஸுமில் வழங்கியிருக்கின்றது. ஆகையால், மிக சூப்பரான மற்றும் அட்டகாசமான தயாரிப்பாக அது விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் டெலிவரி பணிகள் நாட்டின் மற்ற பகுதிகளிலும் அடுத்தடுத்துத் தொடங்கப்பட உள்ளன. இதை புக் செய்துவிட்டு காத்திருப்போரின் பட்டியல் சற்று அதிகம் என கூறப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 17, 2023, 11:00 [IST]
English summary
Hero xoom 110 delivery starts
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X