எக்ஸ்ட்ரீமின் 4 வால்வுகள் கொண்ட வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வந்த ஹீரோ! யமஹாக்கு இப்பவே ஒதற ஆரம்பிச்சு இருக்கும்

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக எக்ஸ்ட்ரீம் (Xtreme) மோட்டார்சைக்கிள் மாடல் இருக்கின்றது. இந்த மாடலின் 160ஆர் 4வி (160R 4V) மற்றும் 200எஸ் 2 வால்வு (200S 2V) வெர்ஷன்கள் மட்டுமே விற்பனைக்கு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தற்போது இதைவிட கூடுதல் பவர்ஃபுல் மாடல் ஒன்று புதிதாக விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. 200எஸ் 4வி மாடலையே நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. ஹீரோ நிறுவனம் மிக சமீபத்திலேயே எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி வெர்ஷனை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கியது என்பது குறிப்பிடத்தகுந்தது.

Hero xtreme 200 s 4v launched

இதைத்தொடர்ந்து, தற்போது இதன் வரிசையில் 200எஸ் 4வி-யும் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு 200எஸ் 2 வால்வுகள் கொண்ட வெர்ஷனைக் காட்டிலும் ரூ. 6 ஆயிரம் மட்டுமே அதிக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ரூ. 1.41 லட்சம் என்கிற விலையில் புதிய 200எஸ் 4வி விற்பனைக்குக் கிடைக்கும்.

இது எக்ஸ்-ஷோரூம் (Ex ShowRoom) விலை மட்டுமே ஆகும். நான்கு வால்வுகள் அம்சம் மற்றும் கூடுதல் தொழில்நுட்பங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்த அளவு அதிக விலையைக் கொண்டதாக எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலின் 4 வால்வு வெர்ஷன் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது.

Hero xtreme 200 s launched side view

இந்த 4 வால்வு அம்சம் சேர்ப்பை தவிர இந்த எஞ்ஜினில் வேறு எந்த பெரிய அளவு மாற்றத்தையம் ஹீரோ செய்யவில்லை. 200 சிசி, 4 வால்வுகள் கொண்ட சிங்கிள் சிலிண்டர், ஆயில் கூல்டு மோட்டாரே ஃப்யூவல் இன்ஜெக்சன் வசதிகளுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த மோட்டார் 8,000 ஆர்பிஎம்மில்18.8 பிஎச்பி பவரையும், 6,500 ஆர்பிஎம்மில் 17.35 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது 200எஸ் 2 வால்வு எக்ஸ்ட்ரீமைக் காட்டிலும் 6 மடங்கு அதிக பிஎச்பி மற்றும் 5 மடங்கு அதிக என்எம் டார்க் திறன் என்பது கவனிக்கத்தகுந்தது.

5 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்கில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கை ஹீரோ நிறுவனம் மிக சிறந்த திறனை வெளியேற்றும் வாகனமாக மட்டுமல்ல அசத்தலான ரைடிங் அனுபவத்தையும் வழங்கும் வகையில் தயார் செய்திருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. குறிப்பாக, நவீன கால அம்சங்கள் பலவற்றை இதில் ஹீரோ சேர்த்திருக்கின்றது.

அந்தவகையில், திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் பற்றிய தகவலை வழங்கும் நேவிகேஷன் சிஸ்டம், செல்போனுக்கு வரும் அழைப்பு, குறுஞ்செய்தி உள்ளிட்டவற்றை பைக்கில் வழங்கப்பட்டு இருக்கும் திரையிலேயேக் காணும் வசதி என பன்முக அம்சங்கள் புதிதாக விற்பனைக்கு வந்திருக்கும் 200எஸ் 4வி பைக்கில் ஹீரோ வழங்கி இருக்கின்றது.

எல்சிடி தர இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலே புதிய எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, பைக்கின் அழகிற்காக பின் பக்க வீலில் டயர் ஹஃக்கர், புதிய ஸ்பிளிட் ஹேண்டில் பார், எல்இடி ஹெட்லேம்ப், டை டைம் எல்இடி லைட் போன்றவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

மேலும், மிக சிறந்த ரைடிங் அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் வக்க வீலில் 7 ஸ்டெப் அட்ஜெஸ்டபிள் மோனோஷாக்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, மிக சிறந்த பிரேக்கி அனுபவத்தைப் பெற்றுக் கொள்வதற்காக இந்த பைக்கில் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கும் இந்த 4 வால்வுகள் கொண்ட எக்ஸ்ட்ரீம் 200எஸ் மாடலால் குறிப்பிட்ட சில பைக் மாடல்களுக்கு தலை வலி உருவாகி இருக்கின்றது. குறிப்பாக சுஸுகி ஜிக்ஸெர் எஸ்எஃப் மற்றும் யமஹா ஆர்15எஸ் ஆகிய மாடல்களுக்கே இதன் வருகை மிகப் பெரிய போட்டியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 18, 2023, 21:25 [IST]
English summary
Hero xtreme 200 s 4v launched in india at rs 1 41 lakh here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+