பைக்குல லாங் ரைடு போக ஏற்ற பைக் இது தான்! ஹிமாலயன் 450 பைக் வீடியோ ரிவியூ!
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அட்வென்சர் டூரிங் மோட்டார் சைக்கிள் செக்மென்ட் ஹிமாலயன் 450 என்ற பைக்கை தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு ஹிமாலயன் 411 என்ற பைக்கை அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது அதை நிறுத்திவிட்டு இந்த ஹிமாலயன் 450 என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. நீண்ட தூரம் பைக் ரைடு செய்யும் பைக் விரும்பிகளுக்கு இந்த பைக் நிச்சயம் ஒரு வரப் பிரசாதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது 450 மற்றும் அட்வெஞ்சர் செக்மென்ட்டில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த பைக்கை ஓட்டி பார்க்க தற்போது டிரைவ்ஸ்பார்க் குழுவை அழைத்திருந்தது. அதன் பெயரில் எங்கள் குழுவும் நேரில் சென்று இந்த பைக்கை ஓட்டி பார்த்தோம். இந்த பைக்கை நாங்கள் ஓட்டி பார்க்கும்போது ஏற்பட்ட அனுபவத்தை உங்களுடன் வீடியோவாக பகிர்ந்துள்ளோம். அந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.
இந்த பைக்கின் இன்ஜினை பொருத்தவரை 452சிசி, சிங்கிள் சிலிண்டர், லிக்யூட் கூல்டு, இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 40 பிஎச்பி பவரையும் 40 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜினில் இருந்து வெளியாகும் சத்தம் ஸ்மூத்தாக இருக்கிறது. வழக்கமாக ராயல் என்ஃபீல்டு பைக்கில் சத்தத்தை தான் அதிகம் விரும்புவார்கள். இந்த பைக்கின் சத்தமும் அதன் ரசிகர்கள் விரும்பும் படி சிறப்பாக இருக்கிறது.

இந்த பைக்கை பொறுத்தவரை மொத்தம் 4விதமான வேரியன்ட்களில் விற்பனையாகி வருகிறது டாப் வேரியன்ட் கருப்பு மற்றும் தங்க நிற கலவைகள் கொண்டு டிசைன் செய்யப்பட்ட பைக்காக இருக்கிறது. இந்த பைக்கின் விலையைப் பொறுத்தவரை ரூபாய் 2.69 லட்சம் முதல் ரூபாய் 2.84 லட்சம் என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த பைக் குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications








