ஏற்கனவே எஸ்பி125 பைக் ரொம்ப அமைதி, இதுல இத வேற கொடுத்திருக்காங்களா!! ஸ்டார்ட் பண்ணுறதே தெரியாது!
அமைதியான மற்றும் ஸ்மூத்தான இயக்கத்திற்கு பெயர்போன தயாரிப்புகளாக ஹோண்டா நிறுவனத்தின் அனைத்து இருசக்கர வாகன மாடல்களும் இருக்கின்றன. இந்த தன்மையை ஹோண்டா நிறுவனம் அதன் இருசக்கர வாகனங்களில் மேலும் மேம்படுத்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் மிக மிக அமைதியான நிலையில் ஸ்டார்ட் ஆக கூடிய 2023 எஸ்பி 125 பைக்கை இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.
இந்த பைக்கில் ஹோண்டா நிறுவனம் புதிதாக இஎஸ்பி, ஃப்யூவல் இன்ஜெக்சன் மற்றும் ஏசிஜி ஸ்டார்டர் மோட்டார் உள்ளிட்ட அம்சங்களை வழங்கி இருக்கின்றது. இவை எரிபொருள் சிக்கனம், அதிக மைலேஜ் மற்றும் ஸ்மூத்தான ரைடிங் ஆகியவற்றிற்கு பேருதவியாக இருக்கும். குறிப்பாக, ஏசிஜி ஸ்டார்டர், பைக்கை ஸ்டார்ட் செய்யும்போது ஏற்படும் கர-கர சத்தத்தை முழுமையாக கன்ட்ரோல் செய்ய உதவும்.

ஆகையால், ஹோண்டாவின் இந்த தயாரிப்பு பலரின் கவனத்தை ஈர்க்க தொடங்கி இருக்கின்றது. இந்த அம்சத்தை சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட 2023 ஆக்டிவா 125 ஸ்கூட்டரிலேயே ஹோண்டா முதல் முறையாக அறிமுகப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது தயாரிப்பாக தற்போது எஸ்பி125 பைக்கிலும் அது அறிமுகம் செய்திருக்கின்றது.
இதுதவிர இன்னும் சில ஹோண்டாவின் தயாரிப்புகளிலும் இந்த அம்சத்தை விரைவில் பெற இருக்கின்றன. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் புதிய ஓபிடி2 விதி அமலுக்கு வர இருக்கின்றது. இதற்கு இணங்கவே எஸ்பி 125 தற்போது தயார் செய்யப்பட்டிருக்கின்றது. 2023 ஹோண்டா எஸ்பி 125 இரு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும்.

டிரம் மற்றும் டிஸ்க் ஆகியவையே அவை ஆகும். இதில் டிரம் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 85,131-ம், டிஸ்க் பிரேக் வேரியண்டிற்கு ரூ. 89,131-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இரண்டும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகள் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
கருப்பு (Black), மேட் ஆக்சிஸ் கிரே மெட்டாலிக் (Matte Axis Grey Metallic), இம்பீரியல் ரெட் மெட்டாலிக் (Imperial Red Metallic), பேர்ல் சைரன் ப்ளூ (Pearl Siren Blue) மற்றும் புதிய மேட் மார்வல் ப்ளூ மெட்டாலிக் (Mat Marvel Blue Metallic) ஆகிய நிற தேர்வுகளே எஸ்பி125-க்கு வழங்கப்பட்டு இருக்கின்றது.

இந்த பைக்கில் தினசரி பயன்பாட்டை சுவாரஷ்யமானதாக மாற்றும் விதமாக முழு டிஜிட்டல் திறன் கொண்ட திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. பல முக்கிய தகவல்களை இதன் வாயிலாக நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். எரிபொருள் பயன்பாடு, ரியல் டைம் ஃப்யூவல் எஃபீசியன்ஸி, ஈகோ இன்டிகேட்டர், கியர் பொசிஷன் இன்டிகேட்டர் ஆகிய முக்கிய தகவல்களையே இந்த திரை வழங்கும்.
இதுதவிர, சர்வீஸ் நாளையும் இந்த திரை ரிமைண்ட் செய்யும். இத்துடன், எல்இடி டிசி ஹெட்லேம்ப், எஞ்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதி, இன்டக்ரேட்டட் ஹெட்லேம்ப் பீம் மற்றும் பாசிங் ஸ்விட்ச் உள்ளிட்ட அம்சங்களும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த பைக்கின் ஸ்போர்ட்டி தன்மையை கூட்டும் விதமாக அகலமான டயர் பின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

100மிமீ டயரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிக க்ரிப்பான இயக்க அனுபவத்தை வழங்கும். குறிப்பாக, அதிக வேகம் மற்றும் ஷார்ப் டர்னிங்குகளுக்கு இது பெருத்த உதவியாக இருக்கும். தொடர்ந்து சுலபமான பராமரிப்பிற்காக பைக்கின் ஃப்யூவல் டேங்க் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான சூப்பரான வசதிக் கொண்ட பைக்காகவே ஹோண்டா எஸ்பி125 விற்பனைக்கு வந்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இந்த பைக்கின் வருகை பல்சர் 125 மற்றும் பிற 125 சிசி பைக்குகளுக்கு போட்டி அளிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதை ஹோண்டா நிறுவனம் மிகவும் ஸ்மூத்தான பைக்காக வடிவமைத்திருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்த பைக்கின் விற்பனைக் கணிசமாக உயரலாம் என நாங்கள் யூகிக்கின்றோம்.


Click it and Unblock the Notifications









