மைலேஜை வாரி வழங்கும் புதிய ஹோண்டா பைக்கின் விலை இவ்ளோதானா! மார்கெட்ல இருந்து ஹீரோ ஸ்பிளெண்டர் காணாம போக போகுது

இந்தியாவில் பெட்ரோல் விலை (Petrol Price) மிகவும் அதிகமாக இருப்பதால், தினமும் டூவீலர்களை (Two Wheelers) பயன்படுத்தியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளவர்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகி வருகின்றனர். பெட்ரோலுக்காகவே அவர்கள் தினமும் 100, 200 ரூபாயை செலவழிக்க வேண்டியுள்ளது.

எனவே அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய தரமான பைக்கை நிறைய பேர் எதிர்பார்க்கின்றனர். அந்த பைக்கின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதும் பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் புதிய பைக் ஒன்று இன்னும் சில நாட்களில் களமிறங்குகிறது.

மைலேஜை வாரி வழங்கும் புதிய ஹோண்டா பைக்கின் விலை இவ்ளோதானா! மார்கெட்ல இருந்து ஹீரோ ஸ்பிளெண்டர் காணாம போக போகுது

இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்ற நிறுவனங்களில் ஒன்று ஹோண்டா (Honda). அந்த நிறுவனத்தின் ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) உள்ளிட்ட தயாரிப்புகள், வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த வரிசையில் புத்தம் புதிய 100 சிசி பைக் ஒன்றை ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள இந்த ஹோண்டா பைக் வரும் மார்ச் 15ம் தேதி (March 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், புதிய பைக்கின் டீசர்களை (Teaser) ஹோண்டா நிறுவனம் தற்போது தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறது.

சமீபத்தில் வெளியான இந்த பைக்கின் முதல் டீசர் மூலம் நமக்கு பெரிய அளவிலான தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள இரண்டாவது டீசர் மூலம், இந்த புத்தம் புதிய பைக்கின் டிசைன் எப்படி இருக்கும்? என்பது நமக்கு ஓரளவிற்கு தெரியவந்துள்ளது.

புதிய 100 சிசி பைக்கின் அறிமுகம் தொடர்பாக ஹோண்டா நிறுவனம் எங்களுக்கு அனுப்பியிருந்த அழைப்பிதழில், 'Gear Up For A Shining Future' என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கையில் ஹோண்டா ஷைன் (Honda Shine) பைக்கின் அடிப்படையில், இந்த புதிய 100 சிசி பைக் உருவாக்கப்படலாம் என யூகங்கள் எழுந்தன.

மைலேஜை வாரி வழங்கும் புதிய ஹோண்டா பைக்கின் விலை இவ்ளோதானா! மார்கெட்ல இருந்து ஹீரோ ஸ்பிளெண்டர் காணாம போக போகுது

தற்போது வெளியாகியுள்ள டீசர் வீடியோ அதை கிட்டத்தட்ட உறுதி செய்வது போல் உள்ளது. இந்த வீடியோவில் புதிய 100 சிசி பைக்கின் டிசைன் ஸ்கெட்ச் (Design Sketch) காட்டப்பட்டுள்ளது. 'ஷார்ப்' ஆன தோற்றம் கொண்ட ஹெட்லேம்ப், நேர்த்தியான தோற்றம் கொண்ட சைடு வியூ மிரர்கள் ஆகியவை இடம்பெற்றிருப்பதை இந்த டிசைன் ஸ்கெட்ச்சில் நம்மால் காண முடிகிறது.

இவை தவிர, தட்டையான சிங்கிள் பீஸ் சீட், பின் இருக்கையில் அமர்பவர் பிடித்து கொள்வதற்காக ஸ்பிளிட் க்ராப் ரெயில் மற்றும் அலாய் வீல்கள் ஆகியவற்றையும் ஆகியவற்றையும் கூட இந்த டிசைன் ஸ்கெட்ச்சில் நீங்கள் காணலாம். ஒட்டுமொத்தத்தில் இதன் டிசைன் அனைவரையும் கவரக்கூடிய வகையில் உள்ளது.

செயல்திறனை பொறுத்தவரையில், இந்த பைக்கில் புத்தம் புதிய 100 சிசி இன்ஜின் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பவர் அவுட்புட் 8 பிஹெச்பி மற்றும் 8 என்எம் ஆக இருக்கலாம். அதே சமயம் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் உள்பட பல்வேறு வசதிகளையும் (Features) இந்த புதிய பைக் பெற்றிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ஆரம்ப நிலை கம்யூட்டர் மோட்டார்சைக்கிள் (Commuter Motorcycle) ஆகும். எனவே இதன் விலை மிகவும் குறைவாகதான் இருக்கும். அனேகமாக இந்த பைக்கின் விலை 70 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே நிர்ணயம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

குறைவான விலை, அட்டகாசமான வசதிகள் ஆகிய சிறப்பம்சங்களுடன், இந்த பைக்கின் இன்ஜின் ஹோண்டா நிறுவனத்திற்கே உரித்தான வகையில் சிறப்பான ரீஃபைன்மெண்ட்டை பெற்றிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நல்ல மைலேஜ் வழங்கும் வகையில் ஹோண்டா நிறுவனம் இந்த இன்ஜினை உருவாக்கியுள்ளது.

அதிக எரிபொருளை சேமிக்க வேண்டும் என்பதற்காக இன்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் சிஸ்டம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை இந்த பைக் பெற்றிருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய 100 சிசி பைக் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக்கிற்கு நேரடி போட்டியாக ஹோண்டா நிறுவனம் இந்த புதிய பைக்கை களத்தில் இறக்குகிறது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய 100 சிசி பைக்கின் வருகை, இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கிற்கு மிக கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 7, 2023, 12:05 [IST]
English summary
Honda 100 cc bike expected price mileage specifications features teaser new details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+