மைலேஜை வாரி வழங்கும் விலை குறைவான ஹோண்டா பைக்! ஸ்பிளெண்டரை எல்லாம் இனி யாரும் திரும்பி கூட பாக்க மாட்டாங்க!
இந்திய சந்தையில் புத்தம் புதிய 100 சிசி பைக் (100 cc Bike) ஒன்றை ஹோண்டா (Honda) நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளதாக டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் செய்தி வெளியிட்டிருந்தது. இந்த தகவல் ஹோண்டா நிறுவனத்தால் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆம், புதிய 100 சிசி பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதியை ஹோண்டா நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதற்கு இன்னும் நிறைய நாட்கள் எல்லாம் இல்லை. இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கின்றன. ஹோண்டா நிறுவனத்தின் புதிய 100 சிசி பைக் வரும் மார்ச் 15ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹோண்டா ஷைன் 125 (Honda Shine 125) பைக்கின் பிளாட்பார்ம் அடிப்படையில் இந்த புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) போன்ற பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா நிறுவனம் இந்த புதிய பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.
ஹோண்டா நிறுவனம் களமிறக்கவுள்ள இந்த புதிய 100 சிசி பைக்கின் இன்ஜின் அதிகபட்சமாக 8 பிஹெச்பி பவர் மற்றும் 8 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இருக்கலாம் என கருதப்படுகிறது. பொதுவாக ஹோண்டா நிறுவனத்தின் பைக்குகளில் வழங்கப்படும் இன்ஜின்கள் சிறப்பானதாக இருக்கும். இது இந்த புதிய 100 சிசி பைக்கிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் இந்த பைக்கில் ஏராளமான வசதிகளும் வழங்கப்படவுள்ளன. இதன்படி அலாய் வீல்கள், சிங்கிள் பீஸ் சீட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வலுவான க்ராப் ரெயில், எலெக்ட்ரிக் ஸ்டார்ட், எல்இடி பகல் நேர விளக்குகள் போன்ற அம்சங்கள் இந்த புதிய பைக்கில் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹோண்டா ஷைன் 125 பைக்கின் ஒரு சில டிசைன் அம்சங்களை நாம் இந்த புதிய பைக்கிலும் காண்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதுதவிர இந்த புதிய பைக் சிறப்பான மைலேஜை வழங்க கூடியதாக இருக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய இந்த பைக் மிகவும் குறைவான விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
இதன் மூலம் இந்திய சந்தையில் விற்பனையை அதிகரிப்பதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த புதிய பைக்கின் விலை, மைலேஜ், வசதிகள் உள்பட அனைத்து விதமான அதிகாரப்பூர்வ தகவல்களும் வரும் மார்ச் 15ம் தேதி நமக்கு தெரியவந்து விடும். இதற்கான இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.
இதுதவிர ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை (Honda Activa Electric Scooter) இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான பணிகளையும் ஹோண்டா நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இந்திய சந்தையில் தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








