மிகவும் விலை குறைவான புதிய ஹோண்டா பைக்கின் பெயர் இதுதானா! இதுக்காகவே இந்த பைக்கை வாங்கலாம் போல இருக்கே!

இந்திய சந்தையில் 100 சிசி கம்யூட்டர் ரக பைக்குகளுக்கு (Commuter Bikes) என மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் கூட்டமே இருக்கிறது. இந்த ரகத்தை சேர்ந்த பைக்குகள் மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் என்பதுடன், சிறப்பான மைலேஜையும் (Mileage) வழங்கும் என்பதுதான் இதற்கு காரணம்.

எனவே ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் 100 சிசி பைக் செக்மெண்ட் மீது கூடுதல் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளது. இதன் ஒரு பகுதியாக புத்தம் புதிய 100 சிசி பைக் ஒன்றை ஹோண்டா நிறுவனம் நாளை மறு நாள் (மார்ச் 15) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த புதிய பைக் ஹோண்டா ஷைன் (Honda Shine) பைக்கின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மிகவும் விலை குறைவான புதிய ஹோண்டா பைக்கின் பெயர் இதுதானா! இதுக்காகவே இந்த பைக்கை வாங்கலாம் போல இருக்கே!

எனவே ஹோண்டா ஷைன் 100 என்ற பெயரில், இந்த புதிய பைக் விற்பனைக்கு களமிறக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஹோண்டா ஷைன் பைக்கிற்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எனவேதான் ஷைன் என்ற மிகவும் பிரபலமான பெயரை ஹோண்டா நிறுவனம் பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய சந்தையில் ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor), ஹீரோ ஹெச்எஃப்100 (Hero HF100), பஜாஜ் பிளாட்டினா 100 (Bajaj Platina 100) மற்றும் பஜாஜ் சிடி 100 (Bajaj CT 100) ஆகிய பைக்குகளுக்கு போட்டியாக ஹோண்டா நிறுவனம் தனது புதிய 100 சிசி பைக்கை விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது.

மிகவும் விலை குறைவான புதிய ஹோண்டா பைக்கின் பெயர் இதுதானா! இதுக்காகவே இந்த பைக்கை வாங்கலாம் போல இருக்கே!

ஹோண்டா ஷைன் 125 பைக்கின் முன் பகுதியை போன்றேதான், ஹோண்டா ஷைன் 100 பைக்கின் முன் பகுதியும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய பைக்கில், அலாய் வீல்கள், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின் பகுதியில் ட்வின் ஷாக் அப்சார்பர்கள் என ஏராளமான அம்சங்கள் இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய பைக்கின் விலை 60 ஆயிரம் ரூபாய் அல்லது 70 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. இது எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும் (Price). விலை மிகவும் குறைவு என்பதுடன், சிறப்பான மைலேஜை வழங்க கூடியதாகவும் இந்த பைக் இருக்கலாம் என்பதும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளது.

இதுதவிர இந்தியாவின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையிலும் ஹோண்டா நிறுவனம் வெகு விரைவில் களமிறங்கவுள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்திய சந்தைக்கான ஹோண்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் தயாரிப்பாக ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Honda Activa Electric Scooter) விற்பனைக்கு வரவுள்ளது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் நிலையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் விற்பனைக்கு வரவுள்ளது. ஹோண்டாவின் புதிய 100 சிசி பைக் களமிறங்கும் அதே மார்ச் 15ம் தேதி, ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 13, 2023, 17:15 [IST]
English summary
Honda 100cc commuter bike what to expect
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+