ஹோண்டா 2-வீலர்களை இந்தியர்கள் கண்மூடித்தனமா நம்புறாங்க!! ஹீரோவை பின்னுக்கு தள்ளும் காலம் விரைவில்!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் வெற்றிக்கரமாக 5 லட்சத்தை கடந்து அசத்தியுள்ளது. கடந்த ஆண்டை விட இது எவ்வளவு அதிகம்? என்பது உள்பட இதுதொடர்பான கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் பிராண்டாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. அதற்கடுத்த இடத்தில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் உள்ளது. கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 5,26,998 இருசக்கர வாகனங்களை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் துவங்கிய நடப்பு 2023-24 நிதியாண்டில் ஹோண்டா நிறுவனம் பதிவு செய்யும் அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கை இதுவாகும். அதேபோல், 2022 செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையிலும் ஹோண்டாவின் 5,26,998 என்ற விற்பனை எண்ணிக்கை 2% அதிகமாகும். ஏனெனில் அந்த மாதத்தில் 5 இலட்சத்திற்கும் குறைவாக, 4,91,802 இருசக்கர வாகனங்களை மட்டுமே ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்திருந்தது.
இந்த எண்ணிக்கைகள் யாவும் உள்நாட்டில் ஹோண்டா நிறுவனம் விற்பனை செய்த 2-வீலர்களின் எண்ணிக்கை ஆகும். கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட ஹோண்டா 2-வீலர்களின் எண்ணிக்கை 35,196 ஆகும். இது, 2022 செப்டம்பர் மாதத்தை விட 19% அதிகம் ஆகும்.

இந்தியாவில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து பிஎஸ்6 விதிமுறைகளின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கேற்ப அப்டேட் செய்யப்பட்ட வாகனங்களை கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்தே ஹோண்டா நிறுவனம் அறிமுகப்படுத்த துவங்கிவிட்டது. அவற்றிற்கு இடையில், முற்றிலும் புதிய இருசக்கர வாகனங்களும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை சிறப்பிக்கும் பொருட்டு லிமிடெட் எடிசன்களும் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
இந்த வகையில், ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் லிமிடெட் எடிசன் மிக சமீபத்தில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் மிக முக்கிய தயாரிப்பாக விளங்கும் ஆக்டிவாவில் புதிய லிமிடெட் எடிசன் 2 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பேர்ல் சைரன் நீலம் மற்றும் மேட் ஸ்டீல் கருப்பு மெட்டாலிக் என்பவை அவை ஆகும்.

அத்துடன், கோல்டு விங் டூர் என்ற சொகுசு மோட்டார்சைக்கிளையும் ஹோண்டா இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை சுமார் ரூ.39.20 லட்சம் ஆகும். இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் பிரபலமான கோல்டு விங் மோட்டார்சைக்கிளின் புதிய டூர் வெர்சனான இதனை இந்தியாவில் ஹோண்டாவின் பிக்விங் டாப் லைன் டீலர்ஷிப்கள் மூலமாக வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹோண்டாவின் 2-வீலர்களுக்கு தனி மதிப்பு உள்ளது. நாடு முழுவதும் பரவலாக ஷோரூம்களும், சர்வீஸ் மையங்களும் இருப்பது இதற்கு ஒரு காரணம். இருப்பினும், ஒரு மாதத்தில் 5 இலட்ச 2-வீலர்களை விற்பனை செய்வது எல்லாம் பெரிய விஷயம். பிரபலமான ஆக்டிவாவில் புதிய லிமிடெட் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதினாலும், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலம் நெருங்கி வருவதினாலும் ஹோண்டாவின் விற்பனை வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









