கார் நிறுவனங்களை கதிகலங்க வைத்த ஹோண்டா ஆக்டிவா! ஸ்கூட்டர்ல இப்படி ஒரு வசதியை குடுக்க போறாங்களா!

இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் விரும்பி வாங்கும் ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருப்பது ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). இதன் 6ஜி (6G) மாடலில், 110 சிசி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதுதவிர ஹோண்டா ஆக்டிவா 125 (Honda Activa 125) என்ற பெயரில், 125 சிசி இன்ஜின் மாடலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் மிகவும் அதிகமாக விற்பனையாகும் ஸ்கூட்டர்களில் ஹோண்டா ஆக்டிவா முதன்மையான இடத்தில் உள்ளது. இதன் விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காக, ஹோண்டா நிறுவனம் தொடர்ச்சியாக பல்வேறு அப்டேட்களை செய்து கொண்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் புதிய மாடல் ஒன்று சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

கார் நிறுவனங்களை கதிகலங்க வைத்த ஹோண்டா ஆக்டிவா! ஸ்கூட்டர்ல இப்படி ஒரு வசதியை குடுக்க போறாங்களா!

ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஹெச்-ஸ்மார்ட் (Honda Activa 6G H-Smart) என்ற பெயரில், கடந்த ஜனவரி மாதம்தான் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. 'ஸ்மார்ட் கீ' (Smart Key) வசதி வழங்கப்பட்டிருப்பதுதான் இந்த புதிய மாடலின் மிக முக்கியமான சிறப்பம்சம் ஆகும். இந்த தொழில்நுட்பத்தை ஆக்டிவா 125 ஸ்கூட்டரிலும் அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் தற்போது முழு வீச்சில் தயாராகி வருகிறது.

விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ள ஹோண்டா ஆக்டிவா 125 ஹெச்-ஸ்மார்ட் ஸ்கூட்டரை பற்றிய விபரங்கள் தற்போது கிடைத்துள்ளன. ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஹெச்-ஸ்மார்ட் மாடலை போலவே, அதன் 125 சிசி வெர்ஷனிலும் 'ஸ்மார்ட் கீ' வசதி வழங்கப்படவுள்ளது. இந்த தொழில்நுட்பம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கார் நிறுவனங்களை கதிகலங்க வைத்த ஹோண்டா ஆக்டிவா! ஸ்கூட்டர்ல இப்படி ஒரு வசதியை குடுக்க போறாங்களா!

அதாவது 'பிஸிக்கல் கீ' இல்லாமலேயே ஹேண்டில்பாரை 'லாக்' மற்றும் 'அன்லாக்' செய்ய இந்த தொழில்நுட்பம் உதவி செய்யும். தற்போது நாம் பயன்படுத்தி வரும் வழக்கமான ஸ்கூட்டர்களில், இருக்கைக்கு அடியில் உள்ள இடவசதியை பயன்படுத்த வேண்டுமென்றால், 'பிஸிக்கல் கீ' மூலமாக மட்டுமே திறக்க முடியும்.

ஆனால் இதனையும் கூட 'பிஸிக்கல் கீ' இல்லாமலேயே செய்வதற்கு, இந்த தொழில்நுட்பம் உதவி புரிகிறது. அத்துடன் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் பார்க்கிங் ஏரியாவில், உங்களது ஸ்கூட்டர் எங்கே உள்ளது? என்பதையும் கூட இந்த 'ஸ்மார்ட் கீ' மூலம் மிக எளிதாக கண்டுபிடித்து விடலாம்.

அதாவது ஸ்மார்ட் கீ-யில் இருக்க கூடிய பட்டனை நீங்கள் அழுத்தும்போது, உங்கள் ஸ்கூட்டரில் உள்ள இன்டிகேட்டர்கள் ஒளிரும். இதன் மூலம் உங்கள் ஸ்கூட்டர் நிற்கும் இடத்தை உங்களால் மிக எளிதாக கண்டறிய முடியும். இதுபோன்ற காரணங்களால் ஹோண்டா ஆக்டிவா 125 ஹெச்-ஸ்மார்ட் ஸ்கூட்டர் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் வழக்கமான ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டரில் இருக்கும் அதே இன்ஜின்தான், ஹெச்-ஸ்மார்ட் மாடலிலும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே ஹோண்டா ஆக்டிவா 125 ஹெச்-ஸ்மார்ட் மாடலில், அதே 123.97 சிசி, சிங்கிள் சிலிண்டர் இன்ஜின்தான் வழங்கப்பட்டிருக்கும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 8.18 பிஹெச்பி பவரையும், 10.3 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 22, 2023, 13:44 [IST]
English summary
Honda activa 125 h smart launch soon full details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+