ஹோண்டா ஆக்டிவா முன்னால இனி கார்லாம் கை கட்டிதான் நிக்கணும்! புது மாடல் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

இந்தியாவில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள டூவீலர்களில் ஒன்று ஹோண்டா ஆக்டிவா (Honda Activa). ஸ்கூட்டராக இருந்தாலும் கூட, பல்வேறு பைக்குகளை காட்டிலும் ஹோண்டா ஆக்டிவாவின் விற்பனை எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்து வருகிறது. ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டரை தொடர்ச்சியாக அப்டேட் செய்து வருவது இதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வெகு சமீபத்தில் கூட ஆக்டிவா ஸ்கூட்டரில், ஹெச்-ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹோண்டா ஸ்மார்ட் கீ வசதி அறிமுகம் செய்யப்பட்டது இதற்கு ஒரு உதாரணம் ஆகும். கீலெஸ் ஸ்டார்ட், ஆட்டோ லாக் மற்றும் அன்லாக் ஆகிய வசதிகளை இது வழங்குகிறது. அத்துடன் பார்க்கிங்கில் ஸ்கூட்டர் எங்கே நிறுத்தப்பட்டுள்ளது? என்பதையும் இதன் மூலமாக கண்டறிய முடியும்.

ஹோண்டா ஆக்டிவா முன்னால இனி கார்லாம் கை கட்டிதான் நிக்கணும்! புது மாடல் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

இன்னும் சொல்லப்போனால் கார்களை போன்ற வசதிகளை, ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரிலேயே வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த வரிசையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி (Activa 6G) ஸ்கூட்டரில், ஹோண்டா நிறுவனம் கூடிய விரைவில் இன்னும் பல்வேறு அப்டேட்களை செய்யவுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100) என்ற புதிய பைக் வெகு சமீபத்தில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அறிமுக நிகழ்ச்சியில், ஹோண்டா மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா நிறுவனத்தின் தலைவரும், தலைமை செயல் அதிகாரியுமான அட்சுஷி ஒகாட்டா ஒரு சில பத்திரிக்கையாளர்களுடன் உரையாடினார்.

ஹோண்டா ஆக்டிவா முன்னால இனி கார்லாம் கை கட்டிதான் நிக்கணும்! புது மாடல் இவ்ளோ கம்மியான விலையில் வரப்போகுதா!

அப்போதுதான் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் கூடிய விரைவில் இன்னும் பல்வேறு அப்டேட்கள் செய்யப்படவுள்ள தகவலை அட்சுஷி ஒகாட்டா ஆட்டோமொபைல் துறை பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். அத்துடன் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஹெச்-ஸ்மார்ட் மாடலுக்கு தனித்துவமான வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த வரவேற்புதான், ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில் இன்னும் பல்வேறு அப்டேட்களை அறிமுகம் செய்வதற்கான தைரியத்தை ஹோண்டா நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த அப்டேட்களுடன் கூடிய மாடல், விலை உயர்ந்த டாப் வேரியண்ட்டாக அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய மாடலில், டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் ஆகிய வசதிகள் (Features) இடம்பெற்றிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெச்-ஸ்மார்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய ஹோண்டா ஸ்மார்ட் கீ வசதியும் கூட, இந்த புதிய மாடலில் வழங்கப்படலாம். நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், இது கார்களில் வழங்கப்படுவதை போன்ற வசதிகளை உள்ளடக்கியது. தற்போதைய ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரில், ஸ்பீடோமீட்டர், ஓடோமீட்டர் மற்றும் டர்ன் இன்டிகேட்டர்கள் என அடிப்படையான அம்சங்களுடன் கூடிய அனலாக் டிஸ்ப்ளே மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

ஆனால் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டருக்கு மிக முக்கியமான போட்டியாளராக உள்ள டிவிஎஸ் இஸட்எக்ஸ் ஸ்மார்ட்எக்ஸ்கனெக்ட் (TVS ZX SmartXonnect) ஸ்கூட்டரில், டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் ப்ளூடூத் அடிப்படையிலான கனெக்டிவிட்டி வசதிகள் எல்லாம் வழங்கப்படுகின்றன. எனவேதான் ஹோண்டா நிறுவனமும் அதிரடியான அப்டேட்களை செய்வதற்கு திட்டமிட்டுள்ளது.

தற்போதைய நிலையில் ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரானது, ஸ்டாண்டர்டு, டீலக்ஸ் மற்றும் ஹெச்-ஸ்மார்ட் வேரியண்ட்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவற்றின் விலை (Price) முறையே 74,536 ரூபாய், 77,036 ரூபாய் மற்றும் 80,537 ரூபாயாக உள்ளது. இவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஆனால் பல்வேறு வசதிகள் கூடுதலாக வழங்கப்படுவதன் காரணமாக, ஹோண்டா ஆக்டிவா 6ஜி ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டின் விலை 85 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் நிர்ணயம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டால், இது கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 17, 2023, 14:38 [IST]
English summary
Honda activa 6g new variant expected price features other details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+