ஜனவரி மாதம் வெளியாகும் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்? வெளியான பரபரப்பான தகவல்!

ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அடுத்த மாதம் சர்வதேச அரங்கில் அறிமுகப்படுத்த அதிகமான வாய்ப்புகள் உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இந்த பைக் இந்தியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதன் அறிமுகம் குறித்த அப்டேட் பலரால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதை விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் தற்போது அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வரும் பெட்ரோல் ஸ்கூட்டர் என்றால் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா ஸ்கூட்டரை சொல்லலாம். நீண்ட ஆண்டுகளாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த இந்த ஆக்டிவா ஸ்கூட்டர் பல பல்வேறு பரிமாணங்களை பெற்று தற்போது சிறப்பான ஸ்கூட்டராக விற்பனையாகி வருகிறது.

honda activa electric launch

இந்நிலையில் தற்போது இந்திய மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டிரெண்ட் வேகமாக அதிகமாகி வருகிறது.ஓலா, ஏத்தர் போன்ற நிறுவனங்கள் எல்லாம் தங்கள் வாகனங்களை அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்ய துவங்கிவிட்டனர். இந்நிலையில் மக்கள் மத்தியில் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

ஹோண்டா நிறுவனம் நீண்ட ஆண்டுகளாக தனது ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரித்து வருகிறது. இந்நிறுவனம் வரும் 2040 ஆம் ஆண்டிற்குள் தனது தயாரிப்புகளின் முழுவதையும் எலெக்ட்ரிக் மயமாக்க முடிவு செய்துள்ள நிலையில் முதல் தயாரிப்பாக ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் அறிமுகப்படுத்தப்படும் என பேச்சு எழுந்துள்ளது.

honda activa electric launch

இந்நிலையில் அடுத்த மாதம் அதாவது 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9ம் தேதி முதல் 12-ம் தேதி வரை அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரத்தில் கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் ஷோ என்ற கண்காட்சி நடத்தப்படுகிறது. இதில் பெரும்பாலும் எலெக்ட்ரிக் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த கண்காட்சியில் சர்வதேச அரங்கில் முதன்முறையாக ஹோண்டா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை காட்சிப்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மக்கள் மத்தியில் இந்த ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த அறிமுகத்தை மக்கள் உற்று நோக்கி வருகின்றனர். ஹோண்டா நிறுவனம் இந்த ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முதன்முறையாக இந்திய மார்க்கெட்டில் தான் அறிமுகப்படுத்தும் என்ற பேச்சும் நிலவி வருகிறது.

honda activa electric launch

ஆனால் ஹோண்டா நிறுவனத்தின் தரப்பில் இருந்து இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. கன்ஸ்யூமர் எலெக்ட்ரானிக் ஷோ நிகழ்ச்சியில் ஹோண்டா நிறுவனம் முக்கிய பங்கு வைக்கும் என்ற அப்டேட் மட்டுமே நமக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் ஹோண்டா நிறுவனம் தனது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்த திட்டமிடலாம் என்ற பேச்சு நிலவி வருகிறது. இது மட்டுமல்லாமல் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான மற்ற சில உபகரணங்களையும் கொண்ட நிறுவனங்கள் காட்சிப்படுத்த வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

இந்த ஷோவில் ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டால் 2024 ஆம் ஆண்டு முதல் பாதியிலேயே ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகமாக அதிகமான வாய்ப்புகள் உள்ளது. இந்த ஸ்கூட்டர் குறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின் படி இது ஃபிக்சட் பேட்டரி கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இருக்கும் என்றும் அதிகபட்சமாக 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டதாக இது வடிவமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பேட்டரி பவரை பொறுத்தவரை ஹோண்டா நிறுவனம் மார்க்கெட்டிலேயே அதிக ரேஞ்ச் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக இந்த ஸ்கூட்டரை களம் இறக்க வேண்டும் என்ற திட்டத்தில் இருப்பதாக நமக்கு தகவல் கிடைத்துள்ளன. மற்றபடி இதன் பேட்டரி எவ்வளவு மற்றும் இதன் ரேஞ்ச் எவ்வளவு என்ற தகவலும் இதுவரை நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. ஹோண்டா ஆக்டிவா தயாரிக்கப்படும் அதே ஃபிளாட்பார்மில் தான் இந்த ஸ்கூட்டரும் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அந்த பிளாட்பார்மில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இந்த பைக் தயாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த பைக்கின் வெளிப்புறத் தோற்றம் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் தற்போது விற்பனையாகும் ஹோண்டா ஆக்டிவா பெட்ரோல் ஸ்கூட்டர் போலவே இருக்கும் என்றும் தெரிகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனத்திடம் தற்போது எலெக்ட்ரிக் பிளாட்பார்மில் பேட்டரி செட்டப் உடன் கூடிய பிளாட்பார்ம் இருக்கிறது. ஆனால் இது அதிக பெர்பார்மன்ஸ் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செக்மெண்டில் மட்டுமே பயன்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.ஹோண்டா நிறுவனத்தின் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகிறார்க இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தால் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உலகில் மிகப்பெரிய புரட்சியே ஏற்படும்

More from DriveSpark

Article Published On: Saturday, December 9, 2023, 7:00 [IST]
English summary
Honda activa electric scooter launch expectation details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X