புதிய அவதாரம் எடுத்த ஹோண்டா ஆக்டிவா! விலை இவ்ளோதானா! சாரை சாரையா ஷோரூம்களுக்கு படையெடுக்கும் மக்கள்!
இந்தியாவில் பண்டிகை காலம் (Festive Season) தொடங்கவுள்ளது. இந்த சமயத்தில் நிறைய பேர் புதிய கார் (Car) மற்றும் டூவீலர்களை (Two Wheelers) வாங்குவார்கள். எனவே ஏற்கனவே விற்பனையில் உள்ள வாகனங்களின் ஸ்பெஷல் எடிசன் (Special Edition) மாடல்களை வாகன நிறுவனங்கள் அறிமுகம் செய்யும்.
வழக்கமான மாடல்களுடன் ஒப்பிடும்போது, இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்களில் ஒரு சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஸ்பெஷல் எடிசன் மாடல்களின் நோக்கம். இந்த வரிசையில் ஹோண்டா நிறுவனம் தற்போது ஆக்டிவா ஸ்கூட்டரின் லிமிடெட் எடிசன் (Honda Activa Limited Edition) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த லிமிடெட் எடிசன் மாடல் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) விற்பனைக்கு கிடைக்கும். அவை டிஎல்எக்ஸ் (DLX) மற்றும் ஸ்மார்ட் (Smart) ஆகியவை ஆகும். இதில் டிஎல்எக்ஸ் வேரியண்ட்டின் விலை (Price) 80,734 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மறுபக்கம் ஸ்மார்ட் வேரியண்ட்டின் விலை 82,734 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். இந்தியா முழுவதும் உள்ள ஹோண்டா ரெட் விங் டீலர்ஷிப்களில் (Honda Red Wing Dealerships), ஹோண்டா ஆக்டிவா லிமிடெட் எடிசன் மாடல் கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே!

ஹோண்டா ஆக்டிவா லிமிடெட் எடிசன் மாடலுக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளன. சாலையில் சென்றால் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில், டார்க் கலர் தீம், பாடி பேனல்களில் பட்டைகள் என ஹோண்டா ஆக்டிவா லிமிடெட் எடிசன் மாடல் அமர்க்களப்படுத்துகிறது.
மொத்தம் 2 கலர் ஆப்ஷன்களில் (Colour Options) ஹோண்டா ஆக்டிவா லிமிடெட் எடிசன் மாடல் கிடைக்கும். அவை மேட் ஸ்டீல் பிளாக் மெட்டாலிக் மற்றும் பேர்ல் சைரன் ப்ளூ ஆகியவை ஆகும். அதே சமயம் ஸ்மார்ட் வேரியண்ட்டில், ஹோண்டா ஸ்மார்ட் கீ வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்ஜினில் எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படவில்லை.
வழக்கமான மாடலில் உள்ள அதே 109.51 சிசி சிங்கிள் சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின்தான் (Petrol Engine), ஹோண்டா ஆக்டிவா லிமிடெட் எடிசன் மாடலிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 7.84 பிஎஸ் பவர் மற்றும் 8.90 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா லிமிடெட் எடிசன் மாடலுக்கு, 10 வருடங்கள் வாரண்டி (3 வருடங்கள் ஸ்டாண்டர்டு + 7 வருடங்கள் ஆப்ஷனல்) வழங்குகிறது. ஹோண்டா ஆக்டிவா லிமிடெட் எடிசன் மாடலின் வருகை, அதன் போட்டி மாடல்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ஹோண்டா ஆக்டிவாதான் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் ஆகும். சில சமயங்களில் அதிகம் விற்பனையாகும் டூவீலர் என்ற பெருமையையும் ஹோண்டா ஆக்டிவா பெறுகிறது. இந்த சூழலில் களமிறக்கப்பட்டுள்ள லிமிடெட் எடிசன் மாடல் மூலம் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications








