பைக் வாங்கினால் ஹெல்மெட் ஃப்ரீ!! ஹோண்டா இப்படி இறங்கும்னு எதிர்பார்க்கல! ராயல் என்ஃபீல்ட் பேச்சு நின்னுடுச்சு!

ஹோண்டா (Honda) நிறுவனம் அதன் சிபி300ஆர் (CB300R) மோட்டார்சைக்கிளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ஓர் அட்டகாசமான சலுகையை அறிவித்துள்ளது. சலுகை என சொல்வதை விட, புத்தம் புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கை வாங்குபவர்களுக்கு ஓர் அட்டகாசமான பரிசு காத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்திய சந்தையில் தானும் ஓர் பிரீமியம் மோட்டார்சைக்கிள் நிறுவனம் தான் என்பதை காட்டும் விதமாக அவ்வப்போது, வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள மோட்டார்சைக்கிள்களை இந்தியாவில் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்துவது வழக்கம். அந்த வரிசையில், கடந்த அக்டோபர் மாதத்தில் ஹோண்டா அறிமுகப்படுத்திய மோட்டார்சைக்கிள் தான் சிபி300ஆர் ஆகும்.

cb300r customers gets free helmet

ஹோண்டாவின் நியோ ஸ்போர்ட்ஸ் பைக்கான இது ரூ.2.44 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இது, இந்தியாவில் சிபி300ஆர் பைக்கின் முந்தைய விலை (ரூ.2.77 லட்சம்)-ஐ விட சுமார் ரூ.37,000 குறைவாகும். இவ்வாறு விலையை குறைத்த போதிலும், இந்த ஹோண்டா பைக்கின் விற்பனை பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை.

இதனால், சிபி300ஆர் பைக்கின் விற்பனையை அதிகரிக்க என்ன செய்வது என யோசித்த ஹோண்டா நிறுவனத்துக்கு சட்டென தோன்றிய யோசனை தான், பைக்குடன் இலவசமாக ஹெல்மெட்டை வழங்கலாம் என்பதாகும். இதுகுறித்து ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹோண்டா சிபி300ஆர் பைக்கை வாங்கும் முதல் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக ஹெல்மெட் வழங்கப்பட உள்ளது.

cb300r customers gets free helmet

இந்தியா முழுவதும் 1000 வாடிக்கையாளர்களுக்கு மட்டும் தானா என சோர்ந்து விடாதீர்கள். ஏனெனில், ஹோண்டா சிபி300ஆர் பைக்கை 1000 வாடிக்கையாளர்கள் வாங்குவதற்கு குறைந்தப்பட்சம் 2 மாதங்களாவது ஆகிவிடும். ஆதலால், சிபி300ஆர் பைக்கை வாங்கலாமா? என சில நாட்கள் யோசிக்க எடுத்துக் கொண்டு, பின்னர் ஷோரூமுக்கு சென்றால் கூட உங்களால் ஹெல்மெட்டை இலவசமாக பெற முடியும்.

சிபி300ஆர் பைக் கஸ்டமர்களுக்கு ஹெல்மெட் இலவசம் என்ற அறிவிப்புக்கு காலக்கெடு எதுவும் ஹோண்டா நிர்ணயிக்கவில்லை. அதாவது, 1000 சிபி300ஆர் பைக்குகள் விற்பனையாக 3 -4 மாதங்கள் ஆகினாலும், அதுவரையில் ஹெல்மெட்களை ஹோண்டா இலவசமாக வழங்கும். இருப்பினும், இதுகுறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப் மையத்தை அணுகவும்.

cb300r customers gets free helmet

ஹோண்டா சிபி300ஆர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை இந்தியாவில் தற்சமயம் ரூ.2.40 இலட்சமாக உள்ளது. ஆனால் உண்மையில், இந்த விலையில் நம்மால் 400சிசி பைக்கான டிரையம்ப் ஸ்பீடு 400 -ஐ வாங்கிவிட முடியும். இன்னும் 50 ஆயிரம் ரூபாய் செலவு செய்தால், ராயல் என்பீல்டு இண்டர்செப்டர் 650 பைக்கை கூட வாங்கிவிட முடியும்.

ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் 286சிசி, லிக்யுடு-கூல்டு, 4-வால்வு DOHC என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 30 பிஎச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 27.4 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ், ஸ்லிப் & அசிஸ்ட் க்ளட்ச் உடன் இணைக்கப்படுகிறது.

cb300r customers gets free helmet

டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்ம ஆளுங்க பைக்கை எத்தனை இலட்சம் கொடுத்து வாங்க வேண்டுமானாலும் தயாராக இருப்பார்கள், ஆனால் ஹெல்மெட்டிற்கு பெரிய தொகையை செலவழிக்க பெரும்பாலானோர் விரும்புவதில்லை. ஆதலால், ஹெல்மெட் போன்ற பொருட்களை இலவசமாக வழங்குவது நிச்சயமாக வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும் என எண்ணுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Friday, November 24, 2023, 23:50 [IST]
English summary
Honda cb300r bike customers will get free helmet check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X