பிரேக்கை அழுத்தி பிடிச்சா லைட்டுகளை ஒளிர விட்டு அவசர நிலையை வெளிக்காட்டும்.. புதிய சிபி300ஆர் அறிமுகம்!
ஹோண்டா சிபி300ஆர் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கின் விலை, சிறப்பு வசதிகள் மற்றும் இதன் வருகை எந்தெந்த மாடல்களுக்கும் எல்லாம் போட்டியாக அமைந்திருக்கின்றது?, என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா சிபி300ஆர் பைக்கை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது ஓர் நேக்கட் ரக பைக் ஆகும். இந்த வாகனத்திற்கு அறிமுக விலையாக ரூ. 2.40 லட்சம் அது விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

பிஎஸ் 6 கட்டம் இரண்டு மற்றும் ஓபிடி-2 உமிழ்வு விதிகளுக்கு அப்டேட் செய்யப்பட்ட வாகனம் இது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த வாகனத்தில் மிக அதிக சிறப்பம்சங்களை ஹோண்டா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக நிறுவனத்தின் பெரிய வகை மோட்டார்சைக்கிள்களில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த அவசரகால பிரேக்கிங் லைட் வசதி புதிய சிபி300ஆர் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த லைட்டின் சிறப்பு வசதி என்னவென்றால், நீங்கள் மிகவும் அழுத்தி பிரேக்கை பிடிக்கும்போது லைட்டுகளை ஒளிர விட்ட அவசர நிலையை உணர்த்தும். இந்த அம்சமே மிக முக்கியமான அம்சமாக புதிய ஹோண்டா சிபி300ஆர் பைக்கில் உள்ளது. நிற தேர்வைப் பொருத்த வரை ஸ்பார்டன் ரெட் மற்றும் மேட் மாசிவ் கிரே மெட்டாலிக் என இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்பட இருக்கின்றன.

எஞ்ஜினைப் பொருத்த வரை சிபி300ஆர் பைக்கில் திரவ-குளிரூட்டப்பட்ட 286 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 31 எச்பி பவரையும், 27.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. கடுமையான உமிழ்வு விதிகளுக்கு ஏற்ப இந்த எஞ்ஜினை ஹோண்டா உட்படுத்தி இருக்கின்றபோதிலும், அதன் எஞ்ஜின் திறனில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
அதே பழைய எஞ்ஜின் திறன் புதிய அப்டேட்டிற்கு பிறகும் தக்க வைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்ஜின் உடன் சேர்த்து ஸ்லிப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் வசதி உடன் கூடிய 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு உள்ளது. எஞ்ஜின் திறனைப் போலவே இதன் எடையும் மாறாமல் அப்படியே தக்க வைக்கப்பட்டு உள்ளது.
இதன் கர்ப் எடை 146 கிலோவாகும். இந்த 300 சிசி பைக்கானது இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் 300 சிசி பைக்கிற்கும் போட்டியாக விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதன் வருகை 300 சிசி பைக்கிற்கு மட்டுமில்லைங்க, சில 400 சிசி ரக பைக்குகளுக்கும் போட்டியாக உள்ளது.
மிக முக்கியமாக கேடிஎம் 390 ட்யூக், ட்ரையம்ப் ஸ்பீடு 400, பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 310 ஆகிய பைக்குகளுக்கு ஹோண்டா சிபி300ஆர்-இன் வருகை போட்டியாக அமைந்திருக்கின்றது. எல்இடி லைட்டுகளைக் கொண்டே இந்த பைக்கை நிறுவனம் அலங்கரித்து இருக்கின்றது.
வட்ட வடிவ கவர்ச்சியான லைட்டே இதன் முகப்பு பகுதியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. அத்துடன், எல்இடி விங்கர்ஸ் மற்றும் எல்இடி டெயில் லேம்ப் சற்று கவர்ச்சியான தோற்றத்தில் வழங்கப்பட்டு உள்ளன. இந்த லைட் வெயிட் மோட்டார்சைக்கிளில் 41 மிமீ யுஎஸ்டி ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் அட்ஜஸ்டபிள் மோனோ ஷாக் அப்சார்பரும் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
இந்த சஸ்பென்ஷன் சிஸ்டம் இந்தியாவின் அனைத்து விதமான சாலைக்கு உகந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. பிரேக்கிங் சிஸ்டத்தைப் பொருத்த வரை 296 மிமீ டிஸ்க் பிரேக் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் 220 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் ஸ்டாண்டர்டு அம்சமாக கொடுக்குப்பட்டு உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹோண்டா நிறுவனத்தின் பிரியமான இருசக்கர வாகனமாக ஹோண்டா சிபி300ஆர் இருக்கின்றது. இந்த பைக்கையே நிறுவனம் மாசு உமிழ்வு விதிகளுக்கு இணங்க ஹோண்டா தயார் செய்திருக்கின்றது. அதேவேளையில், இதில் பயணிக்கும்போது ஸ்மூத் மற்றும் அதிர்வில்லா பயணத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications








