ராயல் என்பீல்டு கோட்டையை சரிக்க போகும் ஹோண்டாவின் புதிய பைக்! விலையை கேட்டதும் ஷோரூமுக்கு படையெடுக்கும் மக்கள்
இந்தியாவின் 350 சிசி பைக் செக்மெண்ட்டில், ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம் மிகவும் வலிமையாக உள்ளது. ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (Royal Enfield Classic 350) மற்றும் ராயல் என்பீல்டு ஹண்டர் 350 (Royal Enfield Hunter 350) ஆகிய பைக்குகள்தான் இதற்கு காரணம்.
இதுதவிர ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 (Royal Enfield Meteor 350) மற்றும் ராயல் என்பீல்டு புல்லட் 350 (Royal Enfield Bullet 350) ஆகிய பைக்குகளும், இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் கொடி பறப்பதற்கு மிக முக்கியமான காரணங்களாக கருதப்படுகின்றன.

இந்த செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் ஆதிக்கத்தை முறியடிப்பதற்கு பல்வேறு நிறுவனங்கள் முயற்சி செய்துள்ளன. ஆனால் அந்த நிறுவனங்களுக்கு கிடைத்தது என்னவோ ஏமாற்றம்தான். ஆனாலும் ராயல் என்பீல்டு நிறுவனத்திற்கு நெருக்கடி அளிக்கும் முயற்சிகளை ஹோண்டா (Honda) நிறுவனம் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 (Honda Hness CB350) மற்றும் ஹோண்டா சிபி350ஆர்எஸ் (Honda CB350RS) ஆகிய பைக்குகளுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் இந்தியாவின் 350 சிசி செக்மெண்ட்டில், மற்றொரு புதிய பைக் ஒன்றை ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

ஹோண்டா சிபி350 (Honda CB350) என்ற பெயரில் இந்த பைக் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது ரெட்ரோ (Retro) தோற்றம் கொண்ட பைக் ஆகும். ஹோண்டா நிறுவனத்தின் தற்போதைய 350 சிசி பிளாட்பார்ம் அடிப்படையில்தான், புதிய சிபி350 பைக் உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் ஹோண்டா சிபி350ஆர்எஸ் ஆகிய பைக்குகள் உடன் ஒப்பிடும்போது சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. புதிய ஹோண்டா சிபி350 பைக்கில் வழங்கப்பட்டுள்ள வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட் போன்ற அம்சங்கள், ஓல்டு ஸ்கூல் டிசைன் (Old-school Design) அம்சத்தை பறைசாற்றுவதாக உள்ளன.
புதிய ஹோண்டா சிபி350 பைக்கில், 20.78 பிஹெச்பி பவர் மற்றும் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடிய 348.36 சிசி ஏர் கூல்டு இன்ஜின் (Engine) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் (Gear Box) இணைக்கப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் முன் பகுதியில் 310 மிமீ டிஸ்க் பிரேக்கும், பின் பகுதியில் 240 மிமீ டிஸ்க் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ட்யூயல் சேனல் ஏபிஎஸ் பிரேக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஹோண்டா சிபி350 பைக்கில் பல்வேறு வசதிகளும் (Features) வாரி வழங்கப்பட்டுள்ளன.
இதில், ஹோண்டா ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டம், ஹோண்டா செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் மற்றும் எமர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் போன்றவை குறிப்பிடத்தக்கவை ஆகும். DLX மற்றும் DLX PRO என மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) இந்த பைக் விற்பனைக்கு களமிறக்கப்பட்டுள்ளது.
இதில் DLX வேரியண்ட்டின் விலை (Price) 1,99,900 ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 2,17,800 ரூபாய் ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகள் உடன், ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிபி350 பைக் விற்பனையில் போட்டியிடும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: பெரும்பாலான வாடிக்கையாளர்களை போல் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளை தேர்வு செய்ய வேண்டாம் என நினைக்க கூடிய நபர்களுக்கு, ஹோண்டா நிறுவனத்தின் புதிய சிபி350 பைக் நல்ல ஆப்ஷனாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications








