ஹோண்டா பைக்குகள் இவ்வளவு ஸ்டைலிஷா இருந்தால் எதைதான் வாங்குவது!! தீபாவளிக்கு சேல்ஸ் எகிற போகுது!
ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (HMSI) நிறுவனம் அதன் ஹைனெஸ் சிபி350 மற்றும் சிபி350 ஆர்.எஸ் பைக்குகளில் புதிய ஸ்பெஷல் எடிசன்களை லீகசி (Legacy) மற்றும் 'ஹூய்' (Hue) என்ற பெயர்களில் அறிமுகப்படுத்தி உள்ளது. வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களை டார்க்கெட் செய்து இந்த ஸ்பெஷல் சிபி350 பைக்குகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
ஹைனெஸ் சிபி350 போன்ற கிளாசிக் தோற்றம் கொண்ட பைக்குகள் விற்பனையில் பல வருடங்களாக கொடிக்கட்டி பறக்கும் நிறுவனம் ராயல் என்பீல்டு. ராயல் என்பீல்டின் மீட்டியோர் 350 பைக்குக்கு போட்டியாக ஹோண்டா நிறுவனம் 2020இல் அறிமுகப்படுத்திய மோட்டார்சைக்கிள் தான் ஹைனெஸ் சிபி350 ஆகும்.

அதன்பின் சில மாதங்கள் கழித்து ஹைனெஸ் சிபி350 ஆர்.எஸ் என அதன் ரோட்ஸ்டர் வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், புதிய ஹோண்டா ஹைனெஸ் சிபி350 லீகசி ஸ்பெஷல் எடிசன் மற்றும் ஹைனெஸ் சிபி350 ஆர்.எஸ் ஹூய் ஸ்பெஷல் எடிசன் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதில் சிபி350 லீகசி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2,16,356 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
புதிய சிபி350 ஆர்.எஸ் ஹூய் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை இதனை காட்டிலும் வெறும் ரூ.3,001 அதிகமாக, ரூ.2,19,357 ஆகும். இந்த புதிய ஹோண்டா பைக்குகளை விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் ஹோண்டாவின் பிக்விங் டீலர்ஷிப் ஷோரூம் வாயிலாக வாங்கலாம். டெலிவிரிகள் மிக விரைவில் துவங்கப்படும் என ஹோண்டா சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
இவை இரண்டில், ஹோண்டா சிபி350 லீகசி எடிசனை பொறுத்தவரையில் இந்த ஸ்பெஷல் எடிசன் புதிய காஸ்மெட்டிக் மாற்றங்களினால், 1970களில் இருந்த பழமையான கிளாசிக் பைக்குகளின் தோற்றத்தை கொண்டுள்ளது. ஆனால் மறுப்பக்கம், சிபி350 ஆர்.எஸ் ஹூய் பைக்கின் தோற்றம் ஆனது பளிச்சிடும் பெயிண்ட்டை கொண்ட தற்கால மாடர்ன் மோட்டார்சைக்கிள் போன்று உள்ளது.

இந்த இரு பைக்குகளில் பொருத்தப்பட்டுள்ள விளக்குகள் யாவும் எல்இடி ஆகும். அதாவது, ஹெட்லைட், விங்கர்கள் மற்றும் டெயில்லேம்ப் உள்ளிட்டவை எல்இடி ஆகும். ஹைனெஸ் சிபி350 லீகசி எடிசனுக்கு புதியதாக பேர்ல் சைரன் நீலம் என்கிற நிறத்தில் பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. 'லீகசி எடிசன்' முத்திரையை பைக்கின் பெட்ரோல் டேங்கில் பார்க்க முடிகிறது.
மறுப்பக்கம், ஹைனெஸ் சிபி350 ஆர்.எஸ் ஹூய் ஸ்பெஷல் எடிசனை ஸ்போர்ட்ஸ் சிவப்பு அல்லது அத்லெடிக் நீலம் மெட்டாலிக் பெயிண்ட் ஆப்ஷனில் வாங்கலாம். இந்த இரு பைக்குகளிலும் அட்வான்ஸ்டு டிஜிட்டல்-அனலாக் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் ஹோண்டாவின் ஸ்மார்ட்போன் வாய்ஸ் கண்ட்ரோல் சிஸ்டத்துடன் வழங்கப்பட்டு உள்ளது. அத்துடன், அசிஸ்ட் ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் ஹோண்டாவின் செலக்டபிள் டார்க் கண்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்டவையும் இந்த பைக்குகளில் இடம்பெற்றுள்ளன.
ஹோண்டா ஹைனெஸ் சிபி350 மற்றும் சிபி350 ஆர்.எஸ் பைக்குகள் இரண்டிலும் 348.36சிசி, ஏர்-கூல்டு, 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர் பிஎஸ்6 என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 5,500 ஆர்பிஎம்-இல் 15.5 கிலோவாட்ஸ் மற்றும் 3,000 ஆர்பிஎம்-இல் 30 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு மீட்டியோர் 350 பைக்குக்கு போட்டியாக களமிறக்கப்பட்டாலும், இந்த பைக்கை ஹோண்டா ஹைனெஸ் சிபி350 விற்பனையில் முந்தியதா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்த ஸ்பெஷல் எடிசன்களாவது இந்த பண்டிகை காலத்தில் சிபி350 பைக்குகளின் விற்பனையை தூக்கிவிடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








