தரமட்டத்துக்கு இறங்கீட்டாங்க! இவ்ளோ கம்மியான விலையில் ஹோண்டா பைக்கா! கதிகலங்கும் போட்டி நிறுவனங்கள்!

2023 ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் (2023 Honda CD 110 Dream Deluxe) பைக் இந்தியாவில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மிகவும் குறைவான விலையில் களமிறக்கப்பட்டுள்ள 2023 ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக், மொத்தம் 4 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

அவை கருப்பு/சிகப்பு, கருப்பு/நீலம், கருப்பு/பச்சை, கருப்பு/சாம்பல் ஆகும். 2023 ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கில், ப்ரஷ்லெஸ் ஏசிஜி ஸ்டார்ட்டர் மோட்டார் வழங்கப்பட்டுள்ளது. பைக் மென்மையாக ஸ்டார்ட் ஆவதை இது உறுதி செய்யும். இதுதவிர இந்த பைக்கில் ட்யூப்லெஸ் டயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

Honda CD 110 Dream Deluxe

அதே நேரத்தில் சைடு-ஸ்டாண்டு போட்டிருக்கும் சமயத்தில், இன்ஜின் ஸ்டார்ட் ஆவதை தடுக்கும் தொழில்நுட்பமும், 2023 ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கில் கொடுக்கப்பட்டுள்ளது. இது உங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும். சைடு ஸ்டாண்ட் எடுப்பதை மறந்து விட்டு பைக்கை ஓட்டும் பலர் விபத்தில் சிக்கி வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

2023 ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக், 10 ஆண்டுகள் வாரண்டி (Warranty) உடன் வருகிறது. இதில், ஸ்டாண்டர்டு 3 ஆண்டுகள் வாரண்டியும், ஆப்ஷனல் 7 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்ட வாரண்டியும் அடங்கும். செயல்திறனை பொறுத்தவரையில், இந்த பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது 109.51 சிசி, ஏர்-கூல்டு இன்ஜின் ஆகும்.

2023 Honda CD 110 Dream Deluxe

அதிகபட்சமாக 7,500 ஆர்பிஎம்மில் 8.67 பிஹெச்பி பவரையும், 5,500 ஆர்பிஎம்மில் 9.30 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் (Engine) ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் (Gear Box) இணைக்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஸனை பொறுத்தவரையில், முன் பகுதியில் டெலஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின் பகுதியில் ட்யூயல் ஷாக் அப்சார்பர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. பிரேக்கிங்கை பொறுத்தவரையில், 2 சக்கரங்களிலும் ட்ரம் பிரேக்குகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன் சிபிஎஸ் என சுருக்கமாக அழைக்கப்படும் காம்பி-பிரேக் சிஸ்டமும் (CBS - Combi-Brake System) இடம்பெற்றுள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் நிரம்பிய 2023 ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் விலை (Price) 73,400 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். ஹோண்டா நிறுவனம் தற்போது விலை குறைவான ஆரம்ப நிலை பைக் செக்மெண்ட்டில் மிகவும் தீவிரமாக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாத மத்தியில், ஷைன் 100 (Honda Shine 100) பைக்கை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதன் விலை வெறும் 64,900 ரூபாய் மட்டுமே. இது எக்ஸ் ஷோரூம் விலையாகும். இந்த வரிசையில் தற்போது மேலும் ஒரு விலை குறைவான பைக்கை ஹோண்டா நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஓரளவிற்கு குறைவான விலையில் ஒரு புதிய பைக்கை வாங்க நினைப்பவர்கள், 2023 ஹோண்டா சிடி 110 ட்ரீம் டீலக்ஸ் மற்றும் ஹோண்டா ஷைன் 100 ஆகிய பைக்குகளை பரிசீலனை செய்யலாம். ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பது, இந்த 2 பைக்குகளுக்கும் கூடுதல் சிறப்பம்சமாக உள்ளது.

இந்தியாவில் ஆரம்ப நிலை டூவீலர்கள் மீதான ஜிஎஸ்டி (GST) வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்புதான் இந்த கோரிக்கையை எழுப்பியுள்ளது. இது நடக்கும்பட்சத்தில் ஆரம்ப நிலை டூவீலர்களின் விலை ஓரளவிற்கு குறையும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Friday, August 11, 2023, 18:02 [IST]
English summary
Honda cd 110 dream deluxe launched price all details you need to know
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+